India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குக் வித் கோமாளி.. நல்ல மனசுக்காரர் பாலா..அவரோட அம்மாவை பார்த்திருக்கீங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாவின் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாகவே நடந்து கொண்டிருக்கிறது. கோமாளியாக நடித்து காமெடி செய்தாலும் பாலாவின் செயல் ஹீரோவாக உயர்த்தி வருகிறது. அந்த நல்ல மனசுக்காரர் பாலாவின் அம்மாவின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரும் முன்பே கலக்கப் போவது யாரு ஆறாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தை பெற்று இருக்கிறார் பாலா. மற்ற காமெடி பிரபலங்கள் டைமிங்கில் காமெடி செய்தாலும், பாலா பக்காவாக டைமிங்கிலும் எதுகை மோனையோடு கலாய்ப்பவர்.

இவர் கோமாளிகளை வெற்றி பெற முழு உழைப்பையும் போட்டாலும், எலிமினேஷன் என்று வந்தால், பாலா எந்த குக்குகளுக்கு செல்வாரோ அந்த குக் தான் அதிகப்படியாக வெளியேறுவார்கள். இதையும் அவரே கூறி, மற்றவர்களை சிரிக்க வைத்து விடுவார். சின்னத்திரை மட்டுமல்லாது தும்பா , காக்டைல் , ஜூங்கா , புலிப்பாண்டி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

என்னாது குக் வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே முடிஞ்சிடுச்சா.. வின்னர் அப் அவங்களா? சூப்பரப்பு! என்னாது குக் வித் கோமாளி கிராண்ட் ஃபினாலே முடிஞ்சிடுச்சா.. வின்னர் அப் அவங்களா? சூப்பரப்பு!

சினிமாவில் பாலா

சினிமாவில் பாலா

இவருக்கு ' குக் வித் கோமாளி ' நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பு தான் பெரிய வாய்ப்புகளைக் கிடைக்க அடித்தளமாக அமைந்தது . அந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் புகழ் , பாலா , சிவாங்கி ஆகியோர் தங்களை நிஜமாகவே கோமாளியாக நினைத்துக் கொண்டு மக்களை மிகவும் மகிழ்வித்தனர். அதிலும் குறிப்பாக பாலாவின் டைமிங் சென்ஸ் டயலாக் ரசிகர்களிடம் எளிதாக அவரைக் கொண்டு சேர்த்தது.

பாலாவின் நல்ல மனசு

பாலாவின் நல்ல மனசு

சமீபத்தில் நடந்த பிரபல தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் , பெஸ்ட் காமெடியன் விருது வழங்கப்பட்டது . இதனை அவருக்கு , ' குக் வித் கோமாளி ' நிகழ்ச்சி நடுவர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் வழங்கினர். அப்போது பாலா குறித்த வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் , " பல மாணவர்களின் படிப்பிற்கு அவர் உதவி செய்து வருகிறார். அத்துடன் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கும் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்கிறார். சிறு சிறு பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்று செய்துவரும் பாலாவின் செயல் அனைவரையும் உறையச் செய்தது. மேலும் அவரின் செயலுக்குப் பலரும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டு தெரிவித்தனர்.

 சிரிக்க வைக்கும் கோமாளி

சிரிக்க வைக்கும் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி 3வது சீசன் மிகப் பெரிய ஹிட் அடித்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறுதிப்போட்டியை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சி காமெடிக்கு பஞ்சமில்லாமல் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. வின்னர் அறிவித்த சமயத்தில் ஸ்ருதிக்கா கண்கலங்கி அழுதார். இது ஒருபுறம் இருக்க மற்றொரு நெகிழ்ச்சியான சம்பவமும் அரங்கேறியது.

கோமாளிக்கு பரிசு

கோமாளிக்கு பரிசு

டைட்டில் வின்னருடன் சேர்ந்து சமைத்த கோமாளிக்கு 1 லட்சம் வழங்கப்பட்டது. அந்த வகையில் ஸ்ருத்திகாவின் கோமாளி புகழ் ஒரு லட்சத்தை பெற்றுக் கொண்டார். முதல் சுற்றில் பாலா தான் அவரின் கோமாளி என்பதும் இதில் முக்கியம். இந்நிலையில் புகழ் தனக்கு வழங்கப்பட்ட 1 லட்சத்தை வாங்க மறுத்தார். அதுமட்டுமில்லை அந்த பணத்தை பாலா படிக்க வைக்கும் ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்காக தூக்கி கொடுத்தார். இதனால் அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது.

நெகிழ்ச்சியான சம்பவம்

நெகிழ்ச்சியான சம்பவம்

அடுத்த கொஞ்ச நேரத்தில் முதல் சுற்றில் ஸ்ருதிக்காவுக்கு கோமாளியாக இருந்த பாலாவுக்கும் 1 லட்சம் வழங்கப்பட்டது. கடைசியில் ஸ்ருதிக்காவும் அந்த குழந்தைகளின் படிப்புக்காக 1 லட்சம் வழங்குவதாக கூறி அனைவரையும் நெகிழ வைத்தார். அந்த மனசுதான் சார் கடவுள் என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

பாலாவின் அம்மா

பாலாவின் அம்மா

நல்ல மனசுக்காரர் பாலாவை பெற்ற அம்மாவின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தனது அம்மா பூங்குழலி தையல் தொழில் செய்வதாகவும், தன் தந்தை ஜெகந்நாதன் பெட்ரோல் பங்கில் நிர்வாக மேலாளராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார் பாலா தமது தாய்மாமா தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஏழ்மையான நிலையில் இருந்து வெற்றி பெற்ற பாலா, தற்போது தன்னால் ஆன உதவிகளை ஏழை மாணவர்களுக்கும், முதியோர்களுக்கும் செய்து வருகிறார்.

English summary
Cooku with Comali Bala's Mother: (குக் வித் கோமாளி பாலாவின் அம்மா) Everything is going well for the good heart of Bala who is famous for his show Cooku with Comali Although acting as a clown and doing comedy, Bala's performance is elevated as a hero. The photo of the good-natured Bala's mother is currently being shared on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X