சந்தோஷமா சொன்னாரே நடிகர் பாலா.. புது மனைவியே மொத்த சொத்தாமே! இப்ப ரூ.15 லட்சம் இன்சூரன்ஸ் வில்லங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்காகவே, நடிகர் பாலா 4வது திருமணம் செய்துள்ளதாக, சோஷியல் மீடியாவில் விமர்சனங்களும், சலசலப்புகளும் எழுந்தவாறே உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில், பாலா மீது போலீஸ்வரை ஒரு புகார் சென்றிருக்கிறது.. என்ன நடந்தது?

சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருந்த பாலா, "மறுபடியும் முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன். தன்னுடைய ரூ.250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு" என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த அக்டோபர் 23ம் தேதியன்று கேரள மாநிலம் கழூர் பாவக்குளம் கோவிலில் தன்னுடைய உறவினர் கோகிலா என்ற தன்னுடைய உறவுக்கார பெண்ணை மறுமணம் செய்திருந்தார்.

Television Bala Gold Jewellery

சில நாட்களுக்கு முன்பு, Galatta சேனலுக்கு நடிகர் பாலா தம்பதியினர் பேட்டி தந்திருந்தனர்.. அந்த பேட்டியில், பாலா சொல்லும்போது, ரூ.250 கோடி சொத்துக்காகத்தான் இந்த திருமணம் நடந்ததாக கூறுகிறார்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பாலா, "நான் எதுக்கு அவங்களுக்கெல்லாம் பதில் சொல்லணும்? என்னுடைய மனசாட்சிக்கு தெரியும்.. அப்படியே இருந்தாலும் அதில் என்ன தப்பு? நான் கடந்த 25 வருஷமாக சமூக சேவை செய்துட்டு இருக்கேன். இப்போகூட, ஒரு நபருக்கு, ஹார்ட் ஆபரேஷனுக்கு நிதியுதவி செய்துட்டுதான் வந்திருக்கேன்.. எங்கள் வீட்டு பக்கத்தில், பள்ளிக்கூடம் ஒன்றை கட்டித்தந்துள்ளேன்.

400 கோடி சொத்துக்கள்

என்னுடைய பணம், காசு, சொத்து எதுவானாலும், அது நல்லவிதத்தில் பிறருக்கு பயனுள்ள வகையில் போய் சேரும். நாளைக்கு எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தாலும், அதுவும் இந்த லட்சியங்களையே ஃபாலோ செய்யும்.. பாலாவுக்கு 300 கோடி சொத்து, 400 கோடி சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்.. என் எல்லா சொத்தும் என் கோகிலாதான்" என்று கூறியிருந்தார்.

பாலா ஏற்கனவே, கடந்த 2010ம் ஆண்டு பிரபல மலையாள பாடகி அமிர்தா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணத்தில் அவருக்கு ஒரு மகள் உண்டு. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, அமிர்தா சுரேஷை பாலா விவாகரத்து செய்தார். அதன் பிறகு 2வதாக திருமணம் செய்த எலிசபெத் என்பவரையும் பாலா விவாகரத்து செய்தார்.

பாலா மீது முதல் மனைவி புகார்

தொடர்ந்து கடந்த வருடம் 3வதாக தன்னுடைய மாமன் மகளை திருமணம் செய்தார். இது ஒருபுறம் இருக்க முதல் மனைவியான அமிர்தா சுரேஷ், நடிகர் பாலா மீது கொச்சி போலீசில் ஒரு புகார் தந்துள்ளார்.

அந்த புகாரில், "பாலாவுடனான விவாகரத்து வழக்கில் இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதில் 5வது பக்கத்தை அவர் போலியாக தயாரித்துள்ளார். மகளின் பெயரில் எடுக்கப்பட்ட இன்சூரன்சில் அவர் முறைகேடு செய்துள்ளார்.

இன்சூரன்ஸ் - டெபாசிட் - பிரீமியம் தொகை

ஆனால், பிரீமியம் தொகையை அவர் கட்டவில்லை. இன்சூரன்சுக்கான தொகையை திரும்ப எடுத்துக் கொண்டார். வங்கியில் மகளின் பெயரில் டெபாசிட் செய்த ரூ.15 லட்சத்தையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டார். போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளார். எனவே பாலா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அமிர்தா சுரேஷ் புகாரில் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரையடுத்து, நடிகர் பாலா மீது கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அதுகுறித்து விசாரிக்கப்பட்டது.. ஆனால் வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பாலா தெரிவித்துள்ளார். எனினும், சமீபத்தில்தான் திருமணமாகியிருக்கும் நிலையில், இப்படியொரு புகார் கிளம்பி, பாலாவுக்கு சிக்கலை உண்டுபண்ணி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+