விளையாட்டு வேற மாதிரி மாறி போச்சு...போட்டியாளர்கள் பெற்ற வாக்குகள்..கமல் சொன்னது நடந்துவிடுமோ
சென்னை: எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல் கூறியது தற்போது நிறைவேறி விட்டதே என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நேற்று வரைக்கும் இருந்த வாக்குகள் அடிப்படை இன்று முழுமையாக மாறிப்போய்விட்டது.
இதை எதிர்பார்க்கவில்லை என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர்.

எதிர்பாராததை எதிர் பாருங்கள்
நிகழ்ச்சியின் தாரக மந்திரமான எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று வார்த்தைதான். அது எப்போது நடக்கிறதோ இல்லையோ இந்த வாரம் கண்டிப்பாக அப்படித்தான் நடக்க போகிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஆர்வமாக வாக்களித்து வரும் போட்டியாளர்கள் இந்த சீசனிலும் தங்களுடைய வாக்குகளை தவறாமல் அளித்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் தாங்கள் வாக்களித்த போட்டியாளர்கள் வெளியே சென்று விடுவது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்
என்னதான் நாங்கள் பார்த்து பார்த்து வாக்கு அளித்தாலும் கடைசியில் இப்படி ஆகி விட்டதே என்று சில நேரங்களில் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் அவர்களின் வாக்குகளால் அவர்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் பாதுகாக்கப்படும் போது மகிழ்ச்சி அடைந்தும் வருகின்றனர். தற்போது நடந்து இருக்கும் மாற்றம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. நேற்று வரைக்கும் கடைசி இடத்தில் இருந்த போட்டியாளர் இன்று ஒரு படி முன்னேறி பாதுகாக்கப்பட்டு உள்ளார். ஆனால் இவ்வளவு நாட்களாக பாதுகாப்பாக இருந்த போட்டியாளர் இன்று கடைசி இடத்தில் இருக்கிறார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் இருந்து வருகிறதாம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு நடக்குமா??
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் என்ன தான் ஓட்டு போட்டு வாக்களித்தாலும் கடைசியில் கன்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்கள் தான்
பாதுகாக்கப்படுவார்கள் என்று ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அதை பொய்யாக்கும் பொருட்டு பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளனர். அது போல தான் இந்த வாரமும் நடைபெறும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தை கொடுத்து கொண்டிருந்த போட்டியாளர் வெளியேறுவது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக தான் இருந்து வருகிறது.

போட்டியாளர்களின் வாக்குகள் விவரம்
இந்த வாரத்தில் 6 போட்டியாளர்கள் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கும் போது அவர்களில் எப்போதும்போல பிரியங்கா அதிகமான ஓட்டுகளை பெற்று இருக்கிறார். அவர் 1,11,867 ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இமான் அண்ணாச்சி 97,330 ஓட்டுகள் பெற்றுள்ளார், அதற்கு அடுத்ததாக ஐக்கி பெர்ரி மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 85,006 . அதுமட்டுமல்லாமல் கடைசி மூன்று இடங்களில் பாவனி, நிரூப் மற்றும் தாமரை உள்ளனர். அதில் பாவனி 81,330 ஓட்டுகளை பெற்றுள்ளார். நிரூப் 81,041 ஓட்டுக்களை பெற்றுள்ளார். கடைசி இடத்தில் தாமரை 80,767 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதில் தாமரைச்செல்வி நிரூப்பை விட 274 ஓட்டுகள் குறைவாகப் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார். இதில் நேற்று வரைக்கும் நிரூப் தான் தாமரைச்செல்வியை விட சுமார் ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால் தற்போது அப்படியே விளையாட்டு மாறிவிட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications