Kubera 3rd day collection: விமர்சனத்துக்கு மத்தியில் மூன்று நாட்களில் குபேரா செய்த சாதனை.. அதுவும் இத்தனை கோடி?
சென்னை: நடிகர் தனுஷ் நாகார்ஜுனா நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் கடந்து இருக்கும் நிலையில் இந்த திரைப்படம் இதுவரைக்கும் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த முதல் தெலுங்கு படமான குபேரா திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படம் வெளியாகும் முன்பு அதற்கான பிரமோஷனில் தனுஷ் பேசிய பேட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஒவ்வொரு திரைப்படம் ரிலிஸின் போதும். தனுஷ் இப்படித்தான் ஏதாவது பஞ்ச் வசனம் பேசிக் கொண்டிருப்பார் என்று சிலர் அதை கடந்து போனாலும் தனுஷ் உடைய பேச்சுக்கு பலர் ஃபயர் விட்டு கொண்டு இருந்தனர்.

தெலுங்கு திரைப்படம்
ரசிகர்கள் குறித்து ஒவ்வொரு மேடையிலும் தனுஷ் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் படம் வெளியான முதல் நாள் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. தமிழை விடவும் இந்த திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தமிழில் பலர் இந்த திரைப்படத்தை கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் ப்ரோமோஷனில் தனுஷ் பேசியதுதான் என்று கூறப்படுகிறது.
குபேரா பட நடிகர்கள்
தனுஷுடன் நாகார்ஜுனாவும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதுபோல ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதை, பிச்சைக்காரனுக்கும் பணக்காரனுக்கும் நடக்கும் கதைதான். ஒரு பணக்காரன் தன்னுடைய கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக பிச்சைக்காரர்களின் பெயரில் டெபாசிட் செய்கிறார். அந்த பணத்தால் பிச்சைக்காரன் வாழ்க்கையில் எப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை.
குபேரா பட கதை
ஏற்கனவே விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருப்பதால் அதேபோல இந்த படமும் இருக்கப் போகிறதோ என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வித்தியாசமாக இருக்கிறது. இந்த படம் வெளியான முதல் நாளே தமிழை விட தெலுங்கு சினிமா ரசிகர்கள் குபேரா படத்தை அதிகமாக கொண்டாடி வருகிறார்கள்.
குபேரா திரைப்படம் மூன்றாவது நாள் வசூல்
அதே நேரத்தில் இந்த திரைப்படத்தில் பிச்சைக்காரராக தனுஷ் நடித்திருப்பதற்கு அவருக்கு தேசிய விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நடிகர் சிரஞ்சீவி உட்பட சில பிரபலங்களும் கூறி இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் குபேரா திரைப்படம் வெளியான முதல் நாள் Sacnilk ரிப்போர்ட்டின் படி இந்த திரைப்படம் 14.75 கோடியும், இரண்டாவது நாளில் 16.5 கோடியும், மூன்றாவது நாளில் 17.25 கோடியும் வசூல் பெற்றதாக கூறப்படுகிறது.
குபேரா திரைப்படம் மொத்த வசூல்
முதல் நாளை விடவும் அடுத்த இரண்டு நாட்களில் படிப்படியாக முன்னேற்றம் அடைந்திருக்கிறது. முதல் மூன்று நாட்களில் இந்திய அளவில் இந்த திரைப்படம் மொத்தம் 48.50 கோடி வசூல் செய்திருக்கிறது. அதே நேரத்தில் கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இன்று திங்கள் கிழமையில் இருந்து தான் இந்த படம் வசூல் எப்படி போகப்போகிறது என்பது தெரியவரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications