அனிருத்துக்கு சொன்ன ஜோசியம் அப்படியே பழித்து விட்டதா? வைரல் வீடியோ பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில விஷயங்களை பார்க்கும்போது, "அப்பவே சொல்லிட்டாங்களே, இப்போ அதுதான் நடக்கப்போகுதா?" என்று நமக்கே ஆச்சரியமாக இருக்கும். அப்படியொரு வீடியோதான் இப்போது இசையமைப்பாளர் அனிருத் விஷயத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அனிருத், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரியும், சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறனை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பழைய வீடியோ பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

ஜோதிடர் சொன்ன விஷயம்

அந்த வீடியோவில் அனிருத் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அவருடன் நடிகை நமீதாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு ஜோதிடம் சொல்லும் ஒரு பெண் வந்திருக்கிறார். அவரிடம் அனிருத் வருங்கால மனைவி எப்படி இருப்பார் என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அந்த பெண் நீங்க காதலித்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி உங்களுக்கு வரப்போற மனைவி குறித்து இறுதி முடிவை உங்க அப்பா தான் எடுப்பாரு, நீங்க உங்க அப்பா கிட்ட கேட்டு தான் முடிவை சொல்லுவீங்க.

Anirudh Kavya Maran Wedding Tamil Cinema

யார் அந்த பொண்ணு

அதுபோல உங்க மனைவி சினிமா துறையை சார்ந்தவராக இருக்க மாட்டார். அதிகம் படித்தவராகவும் டெலி கம்யூனிகேஷன் பிராட்காஸ்டிங் துறையில் இருந்துதான் வருவாரு என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதை கேட்டதும் அனிருத் அப்போ ஓகே என்று சொல்லிக் கொண்டார், ஆனாலும் கண்களை ஒரு நிமிடம் யோசித்துக் கொண்டே சுழட்டி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தொகுப்பாளினி, அந்த பொண்ணு எவ்வளவு தூரத்தில் இருப்பாங்க? அவர்களுக்கு எந்த ஊரு என்று கேட்க, அதற்கு ஜோதிடம் சொல்லும் பெண் சென்னையை சார்ந்தவராக இருப்பார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அனிருத் வீட்டில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் தான் இருப்பார் என்று கூறுகிறார்.

முதல் சந்திப்பு

அடுத்ததாக அனிருத்தும் அந்த பெண்ணும் எப்போது சந்தித்து இருப்பார்கள் என்று கேட்ட, அவர்கள் சமையல் நிகழ்ச்சி அல்லது ஒரு ஃபங்ஷன்னில் சாப்பாட்டில் சமயத்தில் சந்தித்து இருப்பாங்க என்று சொல்லி இருந்தார். இப்போது காவியா மாறனுடன் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் இந்த விஷயம் அப்படியே ஒத்து போகிறது என்று சோசியல் மீடியாவில் இருந்த வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஏனென்றால் காவ்யா மாறன் சன் குழுமத்துடன் தொடர்புடையவர். சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாகப் பொறுப்பிலும் இருக்கும் அவர், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கிய முகமாகவும் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். இதனால் பழைய வீடியோவில் கூறப்பட்ட கணிப்புக்கும் தற்போதைய திருமணச் செய்திக்கும் தொடர்பு இருப்பதாக இணையவாசிகள் பேசத் தொடங்கியுள்ளனர்.

பல மாதங்களாக பேசப்பட்ட செய்தி

அனிருத், காவ்யா மாறன் இருவரையும் இணைத்து பேசுவது இப்போது திடீரென தொடங்கிய விஷயம் கிடையாது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரை பற்றியும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் அவ்வப்போது செய்திகள் பரவின. ஆனால், இதுபற்றி இருவரும் வெளிப்படையாக பேசாமல் இருந்தனர்.

கடந்த 2025-ம் ஆண்டு அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திகள் அதிகமாக பரவியபோது, அனிருத் தனது சமூக வலைதள பதிவில் திருமணமா என்று கேலி செய்யும் வகையில் பதிலளித்ததுடன், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார். அதனால் அப்போது இந்த திருமண செய்தி உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன், தங்களுடைய மகள் காவ்யா மாறன் - அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பை வழங்கியுள்ளனர். இதுதொடர்பான தகவலை தெலங்கானா முதலமைச்சர் அலுவலகமும் வெளியிட்டுள்ளது. நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், நவம்பர் 21-ம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+