சென்னைக்கு மேலே தொங்கும் கத்தி.. மழை குறித்து முக்கிய அப்டேட் சொன்ன வெதர்மேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. நேற்று சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், இன்று மீண்டும் வட மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு மற்றும் தென்மேற்கு என இரண்டு பருவங்கள் மழைப்பொழிவை கொடுக்கின்றன. அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது.

Chennai rain

சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்கள்

நேற்று போல இன்றும் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வெதர்மேன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது, "வட தமிழகத்தின் மீது நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக சென்னை, ராணிப்பேட்டை வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

உள் மாவட்டங்களில் நிலைமை

இது தவிர சேலம், திருப்பத்தூர், தர்மபுரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு போன்ற பக்கத்து மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

பகலில் வெயில்.. இரவில் மழை

பகல் நேரத்தில் வானம் வெயிலாக காணப்பட்டாலும்.. திடீரென மழை பெய்யக்கூடும். கடலோரப் பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம், கடற்கரையிலிருந்து தொலைவிலுள்ள உட்புற மாவட்டங்களில்.. பகல் நேரத்தில் நல்ல வெயில் அடித்தவுடன் மதியம் மற்றும் மாலை நேரத்தில் மழை பெய்யும்" என தெரிவித்திருக்கிறார்.

சென்னை வானிலை மையம் என்ன சொல்கிறது?

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் வானிலை அறிவிப்பில், "17-10-2026: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான மழைக்கு வாய்ப்பு

18-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஒரு வாரத்திற்கான நிலவரம்

19-10-2026: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

20-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

21-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

22-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

23-10-2026: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+