CJP போராட்டத்தில் டபுள் ஸ்டாண்ட்! தவெக, காங்கிரஸுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிய திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சியின் சார்பில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில், இந்த போராட்டங்களுக்கு திமுக ஆதரவு தெரிவித்திருக்கிறது. அதே நேரம், இந்த போராட்டத்தில் இரட்டை நிலைப்பாடு எடுத்திருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சியை கண்டித்து திமுக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்தான் CJP போராட்டத்திற்கு ஆதரவாகவும், TVK மற்றும் காங்கிரஸுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

DMK TVK Congress

அண்ணா அறிவாலயத்தில் எம்பிக்கள் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், துணை பொது செயலாளருமான கனிமொழி, காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவை ஏற்கனவே தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார். டெல்லியில் இந்த அமைப்பினரின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் நேற்று நடந்த இந்த அமைப்பின் போராட்டத்தில் பங்கேற்று.. திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் கட்சியின் சார்பாக இந்த ஆதரவை நேரில் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SIR நடவடிக்கையின் மூலம் தகுதியான வாக்காளர்களின் பெயர்களை திட்டமிட்டு நீக்கியதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது திமுக குற்றம் சாட்டியுள்ளது. முதன் முதலில் பீகாரில் இருந்த SIR நடைமுறை கொண்டுவரப்பட்ட போது, பெருமளவிலான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்ட போது.. மு.க.ஸ்டாலின் அதற்கு எதிராக குரல் கொடுத்தார் என்று தெரிவித்துள்ள கனிமொழி, பிகாரில் SIR-க்கு எதிராக நடந்த யாத்திரையில் ஸ்டாலினுடன் தான் பங்கேற்றத்தையும் நினைவு கூறினார்.

முன்னதாக எம்பிக்கள் கூட்டத்தில், ஞானேஷ் குமாரை உடனடியாக பதவியில் இருந்து நிற்க வேண்டும் என்றும், அவரது செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு SIR கொண்டுவரப்பட்ட போது.. இது பாஜகவின் சதி திட்டம் என ஸ்டாலின் எச்சரித்திருந்தார். மழைக்காலம் மற்றும் பண்டிகை காலங்களான நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த திருத்தங்களை மேற்கொள்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும் திமுக அப்போதே வாதிட்டிருக்கிறது.

இதையெல்லாம் சுட்டிக்காட்டி இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்வேறு மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு, திமுக தனது முழு ஆதரவையும் ஒற்றுமையும் தெரிவித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறி.. காங்கிரஸ் மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கு திமுக கட்டணம் தெரிவித்துள்ளது. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தி.. திமுக எம்பிக்கள் இந்த இந்திய குடியரசு தலைவரிடம் மனு அளிக்கப்படும் என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+