தேவயானியை கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொன்னேன்.. ஏன்னா, இயக்குனர் ராஜகுமாரன் அம்மா உருக்கம்
சென்னை: இயக்குனர் ராஜகுமாரன் அம்மா நடிகை தேவயானி பற்றி பேசிய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தேவயானி தான் என் பையனை கல்யாணம் பண்ணிப்பேன் என்று விடாப்பிடியாக அடம்பிடித்து கொண்டு இருந்தார். நாங்க அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னோம் என்று ராஜகுமாரன் அம்மா சொல்லி இருக்கிறார். மேலும் தேவயானி மற்றும் அவருடைய குடும்பத்தை பற்றியும் இன்னும் சில தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.
சினிமா துறையில் ஒரு சில தம்பதிகள் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் பல வருடங்கள் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் ராஜகுமாரன் தேவயானி தம்பதி இருக்கின்றனர். இவர்கள் காதலித்து திருமணம் செய்த சமயத்தில் தமிழ் சினிமாவே இவர்களைப் பற்றிதான் பேசியது. அந்த சமயத்தில் இயக்குனர் ராஜகுமாரன் அப்போதுதான் இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார். ஆனால் தேவயானி டாப் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தது பெரிதாக பேசப்பட்டது.

இந்த திருமணத்திற்கு தேவயானியின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. அதனாலேயே நாங்கள் யாருக்கும் தெரியாமல் கோவிலில் எளிமையாக கல்யாணம் செய்து விட்டு மீண்டும் சூட்டிங் வந்து விட்டோம். அப்போது தேவயானி குடும்பத்தினர் பிரச்சனை செய்ய வந்தபோது இயக்குனர் விக்ரமன் தான் எங்களுக்கு உதவியது என்று ராஜகுமாரன் ஒரு பேட்டியில் பேசி இருந்தார்.
தேவயானி பற்றி மாமியார் பேட்டி
இது ஒரு பக்கம் இருக்க இப்போது ராஜகுமாரனின் அம்மா பேசிய பேட்டியும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுவரைக்கும் ராஜகுமாரனின் அம்மா யார் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் இப்போது முதல் முறையாக தனியார் youtube சேனல் ஒன்றில் அவர் பேசியிருக்கிறார். அதில் தேவயானி பற்றி பேசுகையில், தேவயானி தான் என் பையனை கல்யாணம் பண்ணனும் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தார். அப்போது இருவரும் போனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கு விஷயம் தெரிந்ததும் நான் தேவயானி வேண்டாம் என்று சொன்னேன். அது பெரிய இடத்து பொண்ணு அந்த பொண்ணை எப்படி நம்ம வீட்டில் கொண்டு வந்து வாழ வைப்பது என்று தான் நான் யோசித்தேன்.
இயக்குனர் ராஜகுமாரன் அம்மா உருக்கம்
தேவயானி வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. அதற்காக தேவயானி ஒரு நாள் முழுக்க சாப்பிடாமலேயே இருந்திருக்காங்க. வீட்டில் எவ்வளவோ கட்டுப்பாடு வைத்திருந்தும் வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. என் பையன் கிட்டயும் நாங்க எவ்வளவோ சொல்லி பார்த்தோம் அவனும் முடியாதுன்னு சொல்லிட்டான். ஆனா இன்னைக்கு அவங்க நல்லா தான் இருக்கிறார்கள். தேவயானி எப்பவாவது வந்து என்னை பார்க்க வருவாங்க. தேவயானி நல்ல பொண்ணு தான். பேத்திகளும் எப்பவாவது தான் போனில் பேசுவாங்க. நேரில் வந்து பார்க்க வர மாட்டாங்க என்று ராஜகுமாரனின் அம்மா பேசியிருக்கிறார்.
தேவயானி ராஜகுமாரன் காதல் திருமண விஷயம் எல்லாம் சோசியல் மீடியாவை பயன்படுத்தும் பலருக்கும் தெரிந்ததுதான். காரணம் ராஜகுமாரனே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். ஆனால் இப்போது ராஜகுமாரனின் அம்மா தனது வருத்தத்தையும் சேர்ந்து பகிர்ந்து இருப்பது இணையத்தில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.




Click it and Unblock the Notifications
