எதிர்நீச்சல் சீரியலில் கேரக்டர்கள் உருவான விதம் இப்படித்தான்... இயக்குனர் கூறிய சுவாரசியமான தகவல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஒவ்வொரு கேரக்டர் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அந்த சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் கூறியிருக்கிறார்.
அனைவரையும் மிரட்டும் ஆதி குணசேகரின் கேரக்டரைப் பற்றி இயக்குனர் வெளியிட்ட தகவல் பலருக்கும் வியப்பை கொடுத்திருக்கிறதாம்.
எதிர்நீச்சல் சீரியலில் கிளிசரினே போடாமல் தன்னுடைய நடிப்பாலே அழுது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய நடிகைகளை பற்றியும் திருச்செல்வன் கூறி இருக்கிறார்.

கோலங்கள் தொல்காப்பியன்
சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது இந்த சீரியல் புதுவிதமாக இருப்பதாகவும் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டரும் உருவான விதத்தைப் பற்றி சீரியல் இயக்குனரான திருச்செல்வம் பேசிய வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே திருச்செல்வம் பல சீரியல்களில் இயக்குனராகவும், கோலங்கள் சீரியலில் தேவயானியின் நண்பனாக தொல்காப்பியன் கேரக்டரில் பலருக்கும் பரிச்சயமானவர்தான்.

இப்போ இயக்கம் மட்டும்தான்
ஒரு சில ஆண்டுகளாக சீரியலை விட்டு விலகி இருந்த திருச்செல்வன் மீண்டும் சீரியலுக்கு வருகிறார் என்றதும் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த முறை இயக்கம் மட்டும்தான் என்று சீரியலை இயக்கி வருகிறார். எதிர்நீச்சல் சீரியலில் பலரையும் கவர்ந்த கேரக்டராக இருந்து வரும் குணசேகரன் கேரக்டர் பார்த்து பார்த்து உருவாக்குனதாம். கதாநாயகி ஜனனியின் கேரக்டருக்கு ஈக்வலாக இருக்க வேண்டும். அதுபோல, வில்லத்தனம் செய்தாலும் அந்த வில்லத்தனத்தையும் ரசிக்கும் ரசிகர்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் குணசேகரன் கேரக்டரை உருவாக்கி இருப்பதாக கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் இவர் ஏற்கனவே நடித்து இயக்கிய கோலங்கள் சீரியலுக்கும் இந்த சீரியலுக்கும் சிறிது ஒற்றுமை இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

கிராமத்து வில்லன்
கோலங்கள் சீரியலின் கதாநாயகன் கார்ப்பரேட் வில்லன் ஆனால் இந்த சீரியலின் வில்லன் கிராமத்து வில்லன் கிராமத்தில் அவரைப் பார்த்தாலே பயப்படும் அளவிற்கு தன்னுடைய கேரக்டரை விரைப்பாக வைத்துள்ளார். அதனால் இவருக்கு அதிகமான ரசிகர்களும் இப்போது உருவாகி விட்டனர் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடிக்கும் நான்கு பெண்களையும் யோசித்து தான் இவர் செலக்ட் செய்து இருந்தாராம். ஒரே குடும்பத்தில் வாக்கப்படும் பெண்களுடைய ஸ்டைலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கேரக்டர் பேச்சு வழக்கு என அனைத்தையும் பார்த்து பார்த்து கையாண்டு வருவதாக கூறியிருக்கிறார்.

இது எதிர்பார்த்ததுதான்
அது மட்டுமில்லாமல் இந்த சீரியலில் கிளிசரின் போடாமல் சீரியல் கதாநாயகிகள் நான்கு பேரும் நடித்து விடுவார்களாம். அதுவும் ஹரிப்பிரியா பிரியதர்ஷினி போன்றவருக்கு ஏற்கனவே சீரியல் நடித்த அனுபவம் இருப்பதால் இவர்களால் எந்த கஷ்டமும் இல்லை என்று கூறி இருக்கிறார். ரசிகர்கள் எதிர்பார்த்த மாற்றம் இனிதான் இந்த சீரியலில் நடக்கப்போகிறது. ஜனனியோடு சேர்ந்து மற்ற மூன்று பெண்களும் இனி குணசேகரனின் முன்பு தனது திறமையை நிரூபிக்க பல முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள் என்று திருச்செல்வன் கூறியிருக்கிறார். இந்த சீரியலில் கதாநாயகி ஜனனியின் கேரக்டர் எவ்வளவு முக்கியமோ அதுபோலத்தான் குணசேகரின் கேரக்டரும் முக்கியம், அதனால் தான் அவருக்கு சரியாக கேரக்டராக நடிகர் மாரிமுத்து இருப்பார் என்று அவரை இந்த சீரியலில் நடிக்க வைத்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தபடியே தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக மாரிமுத்து காட்டி வருகிறார். இதனாலே ரசிகர்களின் மத்தியில் குணசேகரன் கேரக்டர் ஈர்க்கப்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications