For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Disney Plus App: உலக அளவில் 54.5 மில்லியன் சந்தாதாரர்...டிஸ்னி பிளஸ் சானல்!

Google Oneindia Tamil News

உலகம்: மே 4 ஆம் தேதி நிலவரப்படி, டிஸ்னி பிளஸ் உலகளவில் 54.5 மில்லியன் சந்தாதாரர்களை எட்டியுள்ளது என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் சானல் நிறுவனத்தின் முக்கிய அம்சமே அதன் நேரடி நுகர்வோர் வணிகத்தில் அதிக கவனம் செலுத்துவதுதான் என்று சொல்கிறார்கள்.

நவம்பர் மாதம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் காரணமாகத்தான் டிஸ்னி பிளஸ் சந்தைப்படுத்துதலில் இத்தனை சந்தாதாரர்களை பெற முடிந்தது என்றும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மார்ச் மாத இறுதியில், COVID-19 இருந்தபோதிலும், மேற்கு ஐரோப்பாவில் டிஸ்னி பிளஸ் அப்போது சூடு பிடிக்க துவங்கி இன்று உலகம் முழுவதும் அதிகப்படி சந்தாதாரர்கள் என்று எங்கள் வெற்றி இலக்கை நெருங்கி வருகிறோம் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 அதிகம் இல்லை 4 வாரம்தான்

அதிகம் இல்லை 4 வாரம்தான்

டிஸ்னி பிளஸ் இயங்குதளத்தின் இந்த வளர்ச்சி அபரிமிதமானது.சந்தாதாரர்களை எட்ட அதிகம் காலம் எடுத்துக்கொள்ளவில்லையாம். வெறும் 4 வாரங்கள்தான்...கோவிட் 19 தொற்று காலத்தில் குழந்தைகளுக்கு பிடித்ததை கொடுத்து, இந்த இலக்கை அடைந்து இருக்கிறோம். குழந்தைகளை குழந்தைகளாக உணர வைக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே டிஸ்னி பிளசில் கொடுக்கிறோம் என்றும் கூறுகிறார்கள்.

 டிஸ்னி பிளஸ் சானல்

டிஸ்னி பிளஸ் சானல்

டிஸ்னி பிளஸ் சானல்.. உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ஓடிடி இயங்கு தளங்களுடன் டை அப் வைத்துக்கொண்டு, தனது கரங்களை உலகளாவிய அளவில் விரித்து, இந்த இலக்கை எட்டி உள்ளது. அனிமேஷன் படங்கள், கார்ட்டூன் படங்கள் என்று கைவசம் குழந்தைகளுக்கான நிறைய படங்களை வைத்துக்கொண்டு தொழிலில் வெற்றி நடை போட்டு வருகிறது.

 லாக்டவுன் காலம்

லாக்டவுன் காலம்

டிஸ்னி பிளஸ் லாக்டவுன் காலத்தை வெகு சிரத்தையாக கையாண்டு, குழந்தைகளின் மனதை லேசாக்கும் வகையில் நிகழ்ச்சிகளைத் தர முடிவு செய்ததாகவும், அதே சமயம்.. லாக்டவுன் காலத்தில் அறிவிக்க வேண்டிய சலுகைகளை அறிவித்து, சந்தாதாரர்களை கவர்ந்ததாகவும் டிஸ்னி பிளஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 பின்னாட்களில் கவரும்

பின்னாட்களில் கவரும்

லாக்டவுன் காலம் முடிந்தும், டிஸ்னி பிளஸ் இயங்குதளம் , இதே இடத்தில் அல்லது இதைவிட ஒரு படி முன்னோக்கி செல்லும் திட்டத்தில் இப்போது செயல்பட்டு வருகிறதாம். காரணம், குழந்தைகள் லாக்டவுன் முடிந்து பள்ளி, படிப்பு என்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும், அவர்கள் டிஸ்னி பிளஸ் சானலை விரும்பும் அளவுக்கான நடவடிக்கைகளை இப்போதே ஆலோசித்து வருவதாகவும் டிஸ்னி பிளஸ் தரப்பு தெரிவித்து இருக்கிறது.

English summary
As of May 4, Disney Plus reached 54.5 million subscribers worldwide. Disney Plus Channel says that the main feature of the company is to focus more on its direct consumer business.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X