டிஜே பிளாக் வாழ்க்கையில் இத்தனை சோகங்களா? அம்மா வாங்கிய கடனால் வந்த வினை! எமோஷனல் சக்சஸ்
சென்னை: விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு டிஜே பிளாக் பற்றி தெரியாமல் இருக்காது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அந்த நிகழ்ச்சி நடுவர்கள், தொகுப்பாளர்களை கலாய்த்து டிஜே பிளாக் கவுண்டர் கொடுத்து கொண்டு இருப்பார். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவருடைய பெர்பார்மன்ஸ் நிகழ்ச்சியே கலகலப்பு ஆக்கி இருந்தது.
ஒவ்வொரு சீசனிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை கலாய்த்தும், அவர்களை பாராட்டியும் அந்த டைமில் டிஜே பிளாக் பாட்டு மற்றும் கவுண்டர் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் விஜே அர்ச்சனா வாவ் லைப் எனும் youtube சேனலில் அவளும் நானும் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் கலந்துகொண்ட டிஜே பிளாக் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்து மனம் விட்டு பேசி இருக்கிறார்.

அதில் தன்னுடைய சுதன் குமார் என்ற பெயரை எப்படி டிஜே பிளாக் என மாற்றினார் என்பது பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அந்த வகையில் அவர் பேசுகையில் என்னுடைய பெயர் சுதன் குமார் தான். என்னுடைய வீட்டில் நானும் என்னுடைய தம்பி அம்மா அப்பா என 4 பேர் இருக்கிறோம். அதுபோல எங்க குடும்பம் வசதியான குடும்பம் கிடையாது. அதுக்குன்னு ரொம்ப கஷ்டப்பட்ட குடும்பமும் கிடையாது.
ஓரளவுக்கு போய்க்கொண்டிருந்த நடுத்தர குடும்பம் தான். ஆனால் ஒருமுறை என்னுடைய அம்மாவிடம் ஒருவர் உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் அதற்கு பணம் கட்ட வேண்டும் என்று சொல்ல அம்மாவும் 10 வட்டிக்கு கடன் வாங்கி அவருக்கு பணம் கொடுத்திருந்தார். ஆனால் அவர் சொன்னது போல அம்மாவுக்கு வேலை கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் எங்க அப்பாவுடைய சம்பளம் பன்னிரண்டாயிரம் ரூபாய் தான். அம்மா வாங்கிய பணத்திற்கு பத்தாயிரம் வட்டியை கட்டிவிடுவோம்.
மீதமுள்ள இரண்டாயிரம் தான் வீட்டு செலவு நடத்த வேண்டும். வீட்டில் ரேஷன் அரிசி சாப்பாடு இருக்கும். அந்த நேரத்தில் நான் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது கவர்மெண்ட் மூலமாக கிடைத்த லேப்டாப்பில் நான் என்னுடைய நண்பர்களிடம் கேம், பாட்டு வாங்கி என்னுடைய லேப்டாப்பில் ஏற்றி வைத்திருந்தேன். அந்த நேரத்தில் டிஜே ஆப்பும் அதில் இருந்தது. அதில் என்ன இருக்கிறது என்று நான் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
அதற்கு பிறகு என்னுடைய சித்தப்பா பொண்ணு பிறந்தநாள் பங்க்ஷனில் நான் டிஜேவாக மாறினேன். அதற்குப் பிறகு நண்பர்கள் உறவினர்கள் என்று சின்ன சின்ன பங்க்ஷனில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் ஒரு டிஜே ஆக நான் மாறியதும் என்ன பெயர் வைக்கலாம் என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது டிஜே சுதன் என்று வைத்தால் ஏற்கனவே பலர் அந்த பெயரில் இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.
அதற்கு பிறகு பல பெயர் யோசித்து தான் டிஜே பிளாக் என்று பெயர் வைத்தோம். ஏனென்றால் நான் பிளாக் ஆக இருப்பதால் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறேன். அந்த அவமானத்தையே என்னுடைய அடையாளமாக மாற்றி வேண்டும் என்று தான் அந்த பெயரை வைத்தேன்.
அந்த நேரத்தில் பேஸ்புக்கில் டிஜே ஸ்ரீதர் அண்ணா அறிமுகம் கிடைச்சது. அவர்கிட்ட எனக்கு டிஜே பற்றி கற்றுத் தர முடியுமான்னு கேட்டேன். அவரும் சரி என்று பணம் வாங்காமலே கற்றுத் தந்தார்.
அதற்கு பிறகு எனக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதல் நாள் அங்கே வேலை பார்க்கும் போது நான் திட்டு வாங்கினேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மேலே வந்தேன். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் பட்ட அவமானங்கள் என்னால் மறக்க முடியாது. அம்மா அப்பாவை நான் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்படுகிறேன்.
அம்மா கடன் வாங்கியதும் எங்கள் குடும்பத்தினர்கள் எல்லோருமே ரொம்ப அவமானப்படுத்தினாங்க. அதுவும் அப்பாவுடைய சொந்த தம்பி குடும்பத்தினர் எங்களை ரொம்பவும் கேவலப்படுத்தினாங்க. வீட்டு வாசலில் வட்டிக்காரங்க வந்து கத்துக்கிட்டு இருக்கும்போது அம்மா எங்களையும் அப்பாவையும் வெளியே வர வேண்டாம்னு சொல்லிடுவாங்க. நான் தானே கடன் வாங்கினேன் நான் சமாளிக்கிறேன் என்று சொல்லி அவர்களிடம் திட்டு வாங்குவார்.
நான் கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதிக்க தொடங்கிய பிறகு எல்லா கடனையும் அடைக்க தொடங்கினேன். இப்போ கடனை அடைத்தாலும் அம்மா பழைய இட்லி கடையை தான் வைத்திருக்கிறார். அதுபோல அப்பா நான் படிக்க வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டார். அவர் நினைச்ச மாதிரி நான் இன்ஜினியரிங் படிக்கவில்லை என்பது அவருக்கு வருத்தம் தான். ஆனால் இப்போ நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன் என்பது சந்தோஷம்.
ஆனால் அதை என்னிடம் நேரடியாக காட்டிக்க மாட்டார். அவர் வேலை செய்ற இடத்தில் என்னை பற்றி பெருமையாக பேசுவாராம். அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் என்னுடைய பழைய வீடியோக்களை வைத்து இருப்பார். ஆனால் நேரில் என்னிடம் எதையுமே காட்ட மாட்டார். அம்மாவும் அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடையில் பிங்கர் பிரிண்ட் வைக்க வேண்டும் என்று சொல்லியதால் நான் அம்மாவை அங்கே கூட்டிட்டு போனேன்.
அப்போ அங்கு காரில் நான் அம்மாவை கூட்டிக்கொண்டு போய் இறங்கும்போது அம்மாவுக்கு வட்டி கொடுத்து திட்டியவர்கள் எல்லாரும் அங்கே நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு உண்மையில் கார் வாங்கிய அன்று இருந்த சந்தோஷத்தை விட அன்னைக்கு அந்த ரேஷன் கடை முன்பு அம்மாவை காரில் இருந்து இறக்கியது தான் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது என்று உருக்கமாக டிஜே பிளாக் பேசியிருக்கிறார்.
-
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு












Click it and Unblock the Notifications