மதுரை சூரியின் மட்டன் கோலா உருண்டையும்.. வடிவுக்கரசியின் கருவாட்டுக்குழம்பும்.. அட, நளினி இப்படியா?
சென்னை: நடிகை வடிவுக்கரசி, யூடியூப் சேனலுக்கு தந்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதற்கு காரணம், முழுக்க முழுக்க சாப்பாடு பற்றி மட்டுமே சுவையாக பேசியிருக்கிறார் வடிவுக்கரசி.
Provoke TV என்ற சேனலுக்கு வடிவுக்கரசி தனக்கு பிடித்த உணவுவகைகளை பற்றி பேசியிருக்கிறார்.. அதுவும் இலையில் சாப்பிட்டுக் கொண்டே, தனக்கு பிடித்த சமையல் பற்றியும், தனக்காக அன்புடன் சமைத்து தந்த நடிகர், நடிகைகளை பற்றியும் விலாவரியாக கூறியுள்ளார்.

"நான் ஒரு படத்தில் ஹீரோயினா நடிச்சிட்டு இருந்தேன்.. அப்போ திருச்சியில் ஷூடிங் எடுக்கறாங்க.. ஷூட்டிங் பார்க்க நிறைய ஃபேன்ஸ் வந்துட்டாங்க.. அப்போ என்கிட்ட உங்களுக்கு சாப்பிட என்ன பிடிக்கும்னு கேட்டாங்க.. உடனே நான் முட்டையும் ரசம் சாதமும் பிடிக்கும்னு சொல்லிட்டேன்..
முட்டை வகைகள்: அவ்வளவுதான். ஒவ்வொருத்தர் வீட்டிலிருந்தும், ஒவ்வொரு வகையான முட்டை வந்துடுச்சு.. ஒருத்தர் வீட்டில் முட்டை குழம்பு, ஒருத்தர் வீட்டில் பொடிமாஸ், ஒருத்தர் வீட்டில் ஆம்லெட் இப்படி முட்டை வகைகள் வந்து இறங்கிடுச்சு.. ரசத்திலும் இப்படித்தான் ஒவ்வொரு வகையான ரசம்.. ஆனால், ரசம் தூக்கில் வருது.. இப்படியெல்லாம் ரசிகர்கள் அப்போது இருந்தார்கள்..
நடிகை நளினிக்கு சாப்பாடு என்றால் ரொம்ப பிரியம்.. நளினியுடன் நாங்கள் அனைவரும் சேர்ந்து அஞ்சாதே சிங்கம் என்று ஒரு படம் பண்ணினோம்.. பிரபு ஹீரோ, நளினி ஹீரோயின்.. அப்போ நளினி வீட்டுக்கு போனால், "அக்கா கருவாட்டு குழம்பு இருந்தால் நல்லா இருக்குமே"ன்னு கேட்பாங்க.. உடனே அவங்க அவங்க திட்டுவாங்க.. சாப்பிட்டால் குண்டாயியிடுவேன்னு திட்டிட்டே இருப்பாங்க.
பூஜைகள்: ஆனால், விதவிதமாக நளினி சமைப்பாங்க.. காலையில் 3 மணிக்கு எழுந்துடுவாங்க.. 3.30க்கு பூஜை பண்ணி முடிச்சிடுவாங்க.. 3.40 க்கு எனக்கு மெசேஜ் வந்துடும்.. நாலரை மணிக்கெல்லாம் சமையல் முடிச்சிட்டு, ஷூட்டிங் கிளம்பி வந்துடுவாங்க.. அந்த அளவுக்கு எல்லாத்திலும் ஃபாஸ்ட் நளினி.
கோலா உருண்டை பற்றி ஒன்னு சொல்லணும்.. கருடன் பட ஷூட்டிங்கின்போது, சூரி, சசிகுமாருக்கு அப்பத்தா கேரக்டர் செய்திருந்தேன். அப்பவும் எனக்கு கோலா உருண்டை பிடிக்கும்னு சொல்லிட்டேன்.. எங்களுக்கு தேனியில் ஷூட்டிங் நடந்தால், மதுரையிலுள்ள சூரியின் ஓட்டலிலிருந்து கோலா உருண்டை வந்து இறங்க ஆரம்பிச்சிடுச்சு..
பார்ட்னர்: எப்போ நான் மதுரைக்கு ஷூட்டிங் வந்தாலும், தன்னுடைய ஓட்டலில்தான் சாப்பிட்டு போக சொல்லுவாரு சூரி. மதுரை ஏர்போர்ட் பக்கத்தில், k4 என்று பார்ட்னர்களுடன் சேர்ந்து ஓட்டல் வெச்சிருக்கார் சூரி.. அதனால் தேனி போகும் வழியில், மதுரையில் இந்த ஓட்டலில்தான் தங்கி, சாப்பிட்டுவிட்டு போவோம்.. அல்லது ஏதாவது பங்ஷன் போனாலும், அங்கே போயிட்டுதான் போவோம்.. விதவிதமான கோலா உருண்டை அங்கே கிடைக்கும்.. சூரி அசத்திட்டாரு.
அதேமாதிரி கார்த்தி நடித்த விருமன் படத்திலும் இப்படித்தான், எனக்கு கோலா உருண்டை பிடிக்கும்னு சொல்லிட்டேன்.. 2டி ராஜாவின் அப்பா, அப்பா சிவகங்கையில் இருந்தாங்க.. அவங்க வீட்டிலிருந்து தினமும் கோலா உருண்டை வந்துடும்..
கோலா உருண்டை: பெரிய ஹாட் கேரியரிர் முழுக்க இருப்பதை, இதெல்லாம் எனக்கு மட்டுமா? எல்லாருக்குமான்னு கேட்பேன்.. எல்லாருக்கும் தந்தாச்சு.. உங்களுக்கு மட்டும்தான் இந்த கோலா உருண்டைன்னு சொன்னாங்க. அந்த அளவுக்கு கோலா உருண்டை எனக்கு பிடிக்கும்" என்றெல்லாம் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் வடிவுக்கரசி.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications