புன்னகை தேசம் படத்தில் நடித்த நடிகர் தருணை நினைவிருக்கா? அஞ்சலியை மறக்க முடியுமா? இவரா இது?
சென்னை: "புன்னகை தேசம்" படத்தில் நடித்த நடிகர் தருணை நினைவிருக்கிறதா? இவர் குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

நடிகர் தருண்குமார், இவர் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானார். இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர். தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருந்தனர்.
"அஞ்சலி" படத்தில் தனது 7 வயதில் நடித்து அசத்திய தருணிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது. அது மட்டுமல்லாமல் குழந்தை நட்சத்திரத்திற்கான நந்தி விருதையும் இவர் 3 முறை பெற்றுள்ளார்.
தாயும் நடிகைதான்
இவருடைய தாயும் நடிகைதான். ரோஜா ரமணி. தந்தை சக்ரபாணி. ரோஜா ரமணி டப்பிங் கலைஞராகவும் 1980, 90-களில் இருந்தார். பல்வேறு முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். தருண், மனசு மமதா எனும் தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அஞ்சலி
தமிழில் 1990 ஆம் ஆண்டு "அஞ்சலி" படத்தில் பேபி ஷாமிலியின் அண்ணனாக நடித்திருந்தார். இதையடுத்து "அபயம்" எனும் மலையாள படத்திலும் நடித்திருந்தார். "தளபதி" படத்திலும் சிறு வேடத்தில் நடித்திருந்தார். அது போல் "மீரா" படத்தில் ஜேசு எனும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
புன்னகை தேசம்
2001 ஆம் ஆண்டு "புன்னகை தேசம்" எனும் படத்தில் கணேஷ் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் "எனக்கு 20 உனக்கு 18", என்ற படம்தான் அவருக்கு தமிழில் கடைசி படம். 2018 ஆம் ஆண்டு கடைசியாக தெலுங்கில் "இதி நா லவ் ஸ்டோரி" எனும் படத்தில் நடித்தார்.
தெலுங்கு படம்
2020 ஆம் ஆண்டு வெளியான அனுகோனி அதிதி என்ற தெலுங்கு படத்தில் பகத் ஃபாசிலுக்கு டப்பிங் செய்தார். அதன்பின்னர் அவர் சினிமாவில் நடிக்கவில்லை. தருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அதில் அவருடைய புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். என்னாது தருண் குமாரா இது என ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
130 படங்கள்
தருணின் தாய் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா ஆகிய மொழிகளில் 130 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் சுஹாசினி, மீனா, ரோஜா, ராதிகா, சவுந்தர்யா, ரம்பா, ரம்யா கிருஷ்ணன், விஜய சாந்தி, ஷில்பா ஷெட்டி, திவ்ய பாரதி, நக்மா, குஷ்பு ஆகியோருக்கு 400 படங்களுக்கு மேல் குரல் கொடுத்துள்ளார்.
13 வயதில் சூப்பர் ஹிட்
தருணின் அம்மா ரோஜா , "பருவ காலம்" எனும் படத்தில் நடித்துள்ளார். இவர் தனது 13 வயதில் செம்பருத்தி எனும் மலையாள படத்தில் நடித்திருந்தார். அது செம ஹிட்டானது. தெலுங்கில் பக்த பிரகலாதா எனும் படத்தில் 7 வயதில் ரோஜா நடிக்க ஆரம்பித்தார். இவரது டப்பிங்கிற்காக 50 -க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். நந்தி விருது, ஆந்திர அரசு விருது, கேரள அரசு விருது, பிலிம் பேர், சினிமா எக்ஸ்பிரஸ், மலையாள மனோரமா உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
மகள் என்ன செய்கிறார்
இவரது கணவர் சக்ரபாணி, ஈடிவி ஒரியாவின் தலைமை இயக்குநர். இவர்களுக்கு தருண் அல்லாமல் அமுல்யா என்ற மகளும் உள்ளார். இவர் சைக்காலஜி படித்துள்ளார். தற்போது interior designer ஆக பணியாற்றி வருகிறார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications