ரசிகர்களை அதிர வைத்த எதிர்நீச்சல் டீம்.. குணசேகரன் இனி சொல்லப்போவது இதுவா? எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி 13ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் அதில் குணசேகரன் தன்னை எதிர்த்து வீட்டை விட்டு போகும் தம்பிமார்களிடம் நீங்கள் நாளைக்கு வீட்டுக்கு திரும்பி வரும்போது உங்களிடம் ஒரு பெரிய விஷயத்தை சொல்ல போறேன் என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

அதே நேரத்தில் கதிர் இத்தனை நாட்களாக தான் செய்த பிரச்சனைகளை சொல்லி சாருலதாவிடம் மன்னிப்பு கேட்டு தன் மனைவி மற்றும் அண்ணிமார்களையும் ஜெயிலிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு உதவும்படி கேட்டு இருக்கிறார். இது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Serial 13th february 2024 promo full update

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று இதுவரைக்கும் இல்லாத வகையில் ரசிகர்களை அழ வைக்கும் காட்சிகள் தான் இடம் பிடித்திருந்தது. வீட்டு மருமகள்களை போலீஸ் ஸ்டேஷனில் போட்டு அடித்து துவைத்த காட்சிகளை பார்த்து பல ரசிகர்கள் ஃபீல் பண்ணி இருப்பார்கள். அதுபோல இத்தனை நாட்களாக திமிராக திரிந்து கொண்டிருந்த கதிரை பார்த்து பல பேர் திட்டி இருந்தாலும் நேற்று நந்தினிக்கு உடம்பெல்லாம் அடிபட்டு அவரால் நடக்க முடியாமல் வந்த நிலையை பார்த்து கதறி அழுத கதிரை பார்த்ததும் இவர் இதற்கு முன்பு செய்த தவறெல்லாம் பலருக்கும் மறந்து போய்விட்டது.

அதிலும் நேற்றைய எபிசோடில் மட்டும் அல்லாமல் நந்தினியும் நானும் நடிப்புக்கு குறைந்தவர் இல்லை என்று சொல்ற மாதிரி தன்னுடைய நடிப்பை அருமையாக காட்டியிருந்தார். அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் சில சோகமான காட்சிகள் இருந்தாலும் அதிகமாக கலகலப்பு இருக்கும் அடிக்கடி டைமிங் காமெடி இருக்கும் ஆனால் நேற்றைய எபிசோடு முழுக்கவே ரசிகர்களுக்கு ஒருவித அழுத்தத்தை தான் கொடுத்து இருக்கிறது.

நேற்று மட்டுமல்லாமல் கடந்த சில வாரங்களாகவே எதிர்நீச்சல் சீரியலில் ஒரு வித இறுக்கத்தோடு தான் கதை நகர்ந்து வருகிறது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான். அதோடு காணாமல் போன தர்ஷினி என்ன ஆனார் என்ற கதையை மறந்து விட்டு சம்பந்தமே இல்லாமல் ஞானம் மற்றும் கதிரை திருத்துவதற்காக வீட்டு பெண்கள் எல்லோரும் ஜெயிலில் கஷ்டப்படுவதை காட்டி ரசிகர்களையும் கஷ்டப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

Ethirneechal Serial 13th february 2024 promo full update

அதே நேரத்தில் குணசேகரன் இன்று வெளியான ப்ரோமோவில் நீங்க நாளைக்கு வீட்டுக்கு திரும்பி வரும்போது உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லப் போறேன் என்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அப்படி என்றால் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஈஸ்வரியை பழிவாங்குவதற்காக தர்ஷினியை கடத்தி வைத்து நாடகம் போட்டுக் கொண்டிருக்கும் குணசேகரன் நாளைக்கு தர்ஷிணியை கூட்டிக் கொண்டு வந்து விடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தர்ஷினி அவர் கடத்தி வைத்துள்ள அடியாட்களிடமிருந்து தப்பித்துப் போயிருக்கும் நிலையில் இது தெரியாத குணசேகரன் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் யோசிக்க வைக்கிறது. அது போல ஆதிரை பேசியதும் வீட்டை விட்டு கரிகாலன் காணாமல் போயிருந்தார். அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை. குணசேகரன் ஜான்சி ராணியை மட்டும் தான் வீட்டை விட்டு விரட்டி விட்டிருந்தார்.

இதனால் ஒருவேளை கரிகாலானால் தர்ஷினி காப்பாற்றப்படுவாரா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது அதே நேரத்தில் அப்பத்தா நான்கு பேருடைய குழந்தைகளுக்காக எழுதி வைத்த சொத்துக்களை ஏதாவது நாடகம் போட்டு தன்னுடைய பெயருக்கு எல்லாவற்றையும் மாற்றி விட்டாரா? அதனால் தான் இவ்வளவு திமிராக பேசுகிறார? என்றும் யோசிக்க வைக்கிறது.

Ethirneechal Serial 13th february 2024 promo full update

ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். அது போல எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் ஸ்டேஷனில் இருப்பதால் கதிர் சாருலதாவிடம் அழுதப்படியே என்னால உங்க வீட்டிலேயே ஏகப்பட்ட பிரச்சனை வந்திருக்கு எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சிடுங்க. ஆனா இப்ப நீங்க தான் எனக்கு உதவி செய்யணும் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே குணசேகரனுக்கு எதிராக சக்தி மட்டும் மாறி இருந்த நிலையில் இப்போது கதிர், ஞானமும் மாறி இருக்கின்றனர் இனி விசாலாட்சியின் நிலைமை என்ன ஆகப் போகிறது என்று தெரியவில்லை. ஒரு வேலை வீட்டுக்கு எல்லோரும் திரும்பி வரும்போது விசாலாட்சியை போட்டு தள்ளிவிடலாம் என்று குனசேகரன் நினைத்திருக்கிறாரா என்றும் சிலர் பற்ற வைத்திருக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+