ஜீவானந்தம் விஷயத்தில் ஈஸ்வரி எடுத்த முடிவு.. வீட்டை விட்டு துரத்தும் குணசேகரன்..கலங்கி நிற்கும் ஜனனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் குணசேகரன் வீட்டு மருமகள்களை அப்பத்தாவிடம் போய் சொத்து வாங்கி விட்டு வரும்படி விரட்டி விடுகிறார்.

Ethirneechal Serial 2023 August 28th promo full update

அதே நேரத்தில் குணசேகரனுக்கு எதிராக ஜீவானந்தம் விஷயத்தில் பேசும் ஈஸ்வரியை பார்த்து ஜனனி பீல் பண்ணுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஜீவானந்தத்தோடு அப்பத்தா கிளம்பிவிட்டார். இதை பார்த்த குணசேகரன் கடும் கோபத்தில் இருக்கிறார். இனி ஜீவானந்தத்தோடு சேர்ந்து அப்பத்தா என்ன செய்யப் போகிறாரோ? என்று தெரியாமல் குணசேகரன், ஞானம், கதிர் மூவரும் பயத்தில் இருக்கின்றனர்.

அதனால்தான் நேற்று எபிசோடில் கூட ஞானம் ரேணுகாவிடம் அப்பத்தா இனி என்ன செய்யப் போகிறார் என்று உனக்கு தெரியுமா? தெரிஞ்சா சொல்லு என்று மிரட்டி கொண்டு இருந்தார். அதுபோல குணசேகரனும் வீட்டில் இருக்கும் பெண்களிடம் அப்பத்தா என்ன செய்யப் போகிறார் என்று சொல்லிவிடுங்கள் என்று மிரட்டி கொண்டு இருந்தார்.

அதே நேரத்தில் ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தது குணசேகரன் அனுப்பிய ஆட்களும் கதிரும்தான் என்பதை தெரிந்து கொண்ட வீட்டு மகள்கள் கதிர் மற்றும் குணசேகரன் மீதும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் கதிர் காபி போட்டு கேட்டதும் கூட நந்தினி கொடுக்காமல் கதிரை எதிர்த்து பேசி கொண்டிருந்தார்.

Ethirneechal Serial 2023 August 28th promo full update

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஏற்கனவே சொன்னது போல ஜீவானந்தத்தை பார்ப்பதற்காக வீட்டு பெண்கள் எல்லோரும் கிளம்பி இருக்கின்றனர். அப்போது குணசேகரன்" சும்மா தேவையில்லாமல் இங்கே பேசிக்கிட்டு நிற்காமல் போய் அந்த கிழவியை பார்த்து சொத்தை வாங்கிட்டு வர வழிய பாருங்க.." என்று குணசேகரன் அனைவரையும் விரட்டுகிறார்.

அதனால் எல்லோரும் அந்த இடத்தை விட்டு கிளம்பி பிறகு ஒரு கோவிலில் நிற்கின்றனர். அப்போது ஈஸ்வரி "ஜீவானந்தத்தோட வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூரம் நடக்கும், அதுவும் ஏன் சம்பந்தப்பட்ட ஒரு ஆளால் நடக்கும் என்று நான் சத்தியமா எதிர்பார்க்கல" என்று கவலையோடு சொல்கிறார். இதை கேட்டதும் ஜனனி, நந்தினி, ரேணுகா எல்லோரும் கலங்கி நிற்கின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.

Ethirneechal Serial 2023 August 28th promo full update

அதனால் இனி ஜீவானந்தம் மற்றும் அவருடைய குழந்தை விஷயத்தில் ஈஸ்வரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் இனி குணசேகரனுக்கு எதிராக ஈஸ்வரி எப்படி எல்லாம் கேள்வி கேட்க போகிறார் என்ற எதிர்பார்ப்போம் அனைவருக்கும் இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+