மாரிமுத்துவின் இறப்பு 4 நாட்கள் முன்னாடியே.. நான் சனாதனத்தை நம்புறவள்..கோபத்தில் பட்டம்மாள் அப்பத்தா
சென்னை: நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக திடீரென்று மரணம் அடைந்து விட்ட நிலையில் அவருடைய இறப்பிற்கு பல பிரபலங்களும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதாக அவருடைய வீட்டிற்கு பல பிரபலங்கள் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் கேரக்டரில் நடித்து வரும் பாம்பே ஞானம் சில youtube காரர்கள் குறித்தும் கோபமாக திட்டி இருந்தார்.

சில நாட்களுக்கு முன்பே எதிர்நீச்சல் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார் என்று சில youtube சேனல்களில் செய்தி வெளியாகி இருப்பதாக பட்டம்மாள் அதில் கோபத்தோடு பேசி இருக்கிறார்.
இன்று இருப்பார் நாளை இல்லை என்று சொல்வது நிஜம் என்பது நாளுக்கு நாள் நம்முடைய நிஜ வாழ்க்கையில் தெரிந்து கொண்டுதான் இருக்கிறோம். பிரபலங்களாக இருந்தாலும் சரி நமக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் சரி எல்லோருக்குமே இறப்பு என்பது நிச்சயம் தான். ஆனால் அதை நமக்கு பிடித்தவர்களுக்கு வரும்போது தான் நம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அந்த வகையில் தான் பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போது தான் தன்னுடைய திறமையின் மூலமாக நடிகர் மாரிமுத்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து கொண்டிருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் கஷ்டங்களை தாண்டி இயக்குனராக வேண்டும் என்று முயற்சி எடுத்து இருந்த நிலையில் அதில் அவர் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் தற்போது சின்ன திரையில் குணசேகரனாக பலருக்கும் பரீட்சையமாக மாறி இருந்தார்.
இந்த நிலையில் தான் இவர் இன்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்கான டப்பிங் பேசுவதற்காக சென்றிருந்த நிலையில் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு போயிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் இவர் மரணம் அடைந்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் உடலை பார்த்த அவரோடு எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவாக நடித்து வரும் நடிகை பாம்பை ஞானம் கதறி அழுதிருந்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் மாரிமுத்து நாங்கள் மாரிமுத்து என்று சொல்வதை விடவும் குணசேகரன் என்று தான் சொல்லுவோம். அவர் எதிர்நீச்சல் வந்து சீரியலில் வந்து தான் எங்களுக்கு அறிமுகம் ஆனார். அந்த சீரியலில் குணசேகரன் ஆக உலக அளவில் பிரபலம் ஆனார் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த சீரியலில் அவர் வில்லன் கேரக்டரில் தான் நடித்து வந்தார். அந்த வில்லனுக்கும் இவ்வளவு பெரிய பவர் இருக்கு என்பதை அவர் நடித்து நிரூபித்து வந்தார். குணசேகரன் கேரக்டரோடு வாழ்ந்தவர்தான் மாரிமுத்து. என்னை சீரியலில் கண்டபடி திட்டுவார். எனக்கு அவர் பேரனாக தான் நடித்திருந்தார். பணத்துக்காக எந்த அளவிற்கு போகக்கூடிய நபராக இருப்பார். இப்ப ரெண்டு மூணு எபிசோடாக கூட அவர் அதை நிரூபிச்சுக்கிட்டு இருக்கார்.
குணசேகரனுடைய இழப்பை எங்களால ஏத்துக்க முடியல. எங்களாலே ஏத்துக்க முடியலன்னா அவங்க குடும்பத்து காரங்க எப்படி ஏத்துக்குவாங்கன்னு எங்களால சொல்ல முடியல. ஆசை ஆசையா இப்பதான் ஒரு வீடு கட்டிக்கிட்டு இருந்தாரு. வீட்டிற்கு எல்லாரும் கண்டிப்பா வரணும்னு சொல்லி இருக்காரு. வீட்டிற்க்காக கூட மரம் எங்கெங்கெல்லாம் இருந்து வாங்கி போட்டு இருக்காரு என்றெல்லாம் எங்க கிட்ட ஷேர் பண்ணி இருக்காரு .
இன்னொரு விஷயம் நான் எல்லார்கிட்டயும் சொல்லுகிறேன். நாலு நாள் முன்னாடி அவர் ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடைந்து விட்டார். அவருடைய மனைவி கதறி அழுதாங்க என்று ஒரு வீடியோ போட்டு இருக்காங்க. இது மிகப் பெரிய தப்பு. ஒவ்வொருத்தங்களுடைய சென்டிமென்டையும் எமோஷனலையும் டச் பண்ணி நீங்க பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சீங்கன்னா? அந்த பணம் உங்களுக்கு நிக்காது. ஏன்னா என்னைக்காவது ஒருதங்களோட வார்த்தை எங்கேயாவது பளிச்சிடும். அதை நாங்க நம்புறோம். சனாதன தர்மத்துல அது இருக்கு. நான் சனாதனத்தை நம்புகிறேன். அதனால தப்பான ஒரு விஷயத்தை பரப்பி நீங்கள் பணம் சம்பாதிக்காதீங்க என்று பாம்பே ஞானம் பேசியிருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications