மாரிமுத்து அந்த அக்ரிமெண்ட்டை காட்டுனாரு.. குடும்பத்துக்குள் ஏன் இப்படி..? எதிர்நீச்சல் வாசு எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.

காலை வரைக்கும் நல்லபடியாக இருந்தால் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலரையும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது. அது குறித்து அவருடைய நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Ethirneechal vaasu interviewed about actor Marimuthus qualities

ஜனனியின் தோழியாக வாசு கேரக்டரில் நடித்து வரும் நடிகை வைஷ்ணவி நடிகர் மாரிமுத்து பற்றி பல நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள் அனைவருமே ஒரு குடும்பம் போன்று தான் பழகி வருகிறார்கள். பலர் நிஜப் பெயரை மறந்து சீரியலில் என்ன பெயரில் அவர்களுடைய கேரக்டர் இருக்கிறதோ அதே கேரக்டர் பெயரை சொல்லி தான் கூப்பிட்டு வருகின்றனர். அதுபோல அதே உறவு முறையை குறித்து தான் இவர்கள் பேசி வருகின்றனர். அது பற்றி பல பேட்டிகளில் பேசியிருக்கின்றனர்.

எதிர்நீச்சல்: மாரிமுத்துவுக்காக அவசரமாக மாற்றப்பட்ட கதை.. செல்போனில் இருந்த ஆதாரம்.. கிரேட் முயற்சி
அது மட்டும் அல்லாமல் நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு காரணமாக காலமான போது கூட பலரும் எங்களுக்கு மாரிமுத்து காலமாகி விட்டார் என்று சொன்னபோது எங்களுக்கு நினைவிற்கு வரவே இல்லை என்றும் தெரிவித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு அனைவரும் ஒரே குடும்பமாக பழகிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் யாரிடமும் நடிகர் மாரிமுத்து தனக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டது குறித்து சொல்லவில்லை என்று இந்த சீரியலில் வாசுவாக நடிக்கும் வைஷ்ணவி தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து நடிகை வைஷ்ணவி பேட்டி ஒன்றில் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பேசி இருக்கிறார். அதில் மாரிமுத்து சார் சூட்டிங் பாட்டில் ஜாலியாகவே பேசிக் கொண்டிருப்பார். ஆரம்பத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் தனக்கு இப்போது கிடைக்கும் அளவு கடந்த அன்பு குறித்தும் அவர் சந்தோஷத்தோடு எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வார். அவரைப் பற்றி வரும் மீம்ஸ்களை கூட எங்கள் எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்படுவார்.

அதுபோல மாரிமுத்து சாருக்கு இப்போது அதிகப்படியான வாய்ப்புகள் வந்ததும் அவர் ரெஸ்டே இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தார். அது கூட அவருடைய இந்த நிலைமைக்கு காரணமோ என்று எனக்கு தோன்றுகிறது. நான் அவரைப் போன்று சொந்தமாக உழைத்து ஒரு வீடு வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வீடு வாங்கி விட்டேன். அது குறித்து என்னை ரொம்பவே பாராட்டினார். அதுபோல ஜெயிலர் திரைப்படத்தில் அவர் நடிப்பதற்கான அக்ரீமெண்ட் வந்தபோதும் என்னிடம் அதை காட்டி ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

Ethirneechal vaasu interviewed about actor Marimuthus qualities

ஆனால் எல்லாமே எங்களிடம் சொன்னவர். அவருக்கு உடல் நிலையில் ஏற்கனவே பிரச்சனை இருக்கிறது என்பதை சொல்லாமல் மறைத்ததார் என்பதுதான் தெரியவில்லை. ஒரு வேலை நம்முடைய கஷ்டங்களை யாரிடமும் சொல்லி அனுதாபம் தேட வேண்டாம் என்று நினைத்து விட்டார் போல.

அவருடைய வெற்றியை சொல்லி அனைவருக்கும் மோட்டிவேஷன் கொடுத்தது தான் அவருடைய கேரக்டர். மாரிமுத்து சார் மரணம் அடைந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை என்று அந்த பேட்டியில் எமோஷனலாக எதிர்நீச்சல் வாசு பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+