இன்னும் 15 ஆபாச வீடியோ இருக்கா? அந்த நடிகை குளிக்குற வீடியோ கசிந்ததே? அதுவும் இதுவும் ஒன்றா: பிரபலம்
சென்னை: சிறகடிக்க ஆசை துணை நடிகையின் வீடியோ கசிந்தது குறித்து ஏன் யாருமே கேள்வி எழுப்பவில்லை.. யாராக இருந்தாலும் போராட முன் வரவேண்டும்.. அதுதான் ஜனநாயக நாடு.. பெண்களே இதை தட்டிக் கேட்க வேண்டும்.. புல்லட் ஓட்டுவதும், போலீசாரிடம் வாக்குவாதம் செய்வதும் மட்டுமே பெண்ணியம் அல்ல.. சமுதாய வேலையை சரியாக செய்து முடிப்பதும் பெண்ணியம்தான்" என்று வழக்கறிஞர் தமிழ்வேந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "துணை நடிகையின் 3 வீடியோ மட்டும்தான் வெளிவந்திருக்கிறது. 15 வீடியோ இருப்பதாக சொல்கிறார்கள்.. நடிகைகள் திறமைகளை காட்டி முன்னுக்கு வரவேண்டும்.

சான்ஸுக்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டு, 10 வருஷம் கழித்து, அந்த நடிகர் கையை பிடித்து இழுத்துவிட்டார் என்று புகார் சொல்லக்கூடாது. இலங்கை ராணுவம் போல உங்களது விருப்பமில்லாமல், துப்பாக்கியை காட்டி வீடியோகாலில் யாராவது உங்களை நிர்பந்தித்தார்களா?
வீடியோ கால் நபர் யார்
வீடியோ காலில் மறுமுனையில் பேசிய நபர் யார்? வீடியோவை லீக் செய்த அந்த நபர் யார்? சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தர வேண்டியதுதானே? "வீடியோவை லீக் செய்த நபர் மீது நடவடிக்கை எடுங்கள்" என்று புகார் தந்திருக்க வேண்டியதுதானே? புகார் தந்தால் உடனே கமிஷனரும் நடவடிக்கை எடுத்திருப்பார்..
கேரளா வெள்ளத்தில் 3 மாவட்டங்கள் படுசேதமடைந்துவிட்டன.. இந்த மழை பாதிப்பை மறைப்பதற்காகவே ஹேமா கமிட்டியை அங்கே கிளப்பி விட்டார்கள்.. அதேபோல பாட வாய்ப்பு கேட்டபோது பாடலாசிரியர் கட்டிப்பிடித்தார்? என்று 10 வருஷம் கழித்து ஏன் புகார் சொல்ல வர்றீங்க? உங்களிடம் தவறாக நடந்து கொள்வது உண்மையென்றால், அன்றே புகாரை சொல்லுங்கள்..
சொத்து, புகழ், பணம்
10 வருடம் கழித்து நடிகர்கள், டைரக்டர்கள் மீது புகார் சொல்வதாக இருந்தால், சம்பந்தப்பட்ட நடிகர்கள், டைரக்டர்களை வைத்து, 10 வருடத்துக்கு முன்பு சம்பாதித்த பணம், சொத்தையெல்லாம் அந்த நடிகர்கள், டைரக்டர்களுக்கே எழுதிவைத்துவிட்டு, அதற்கு பிறகு வந்து பொதுவெளியில் புகார் சொல்லுங்கள்.. நடிகர்கள், டைரக்டர்களை வைத்து உங்களுக்கு புகழ், பணம், பொருளாதார வசதிகள் எல்லாமே வேண்டும், கடைசியில்வந்து அவர்களையே புகார் சொல்ல வேண்டியது?
இந்த துணை நடிகையின் வீடியோ ஏஐ என்றால், இதுபோல 15 வீடியோ இருப்பதாக சொல்கிறார்களே, அத்தனையும் ஏஐ-யா? எதற்காக நடிகை இதுவரை புகார் தராமல் இருக்கிறார்? ஏற்கனவே ஒரு பிரபல நடிகை குளிப்பது வீடியோ ஒன்று வெளியானது. ஆனால், அது நடிகைக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட வீடியோ.. அது மிகவும் தவறான செயல்.. நடிகையின் குளிக்கும் வீடியோவும், இந்த துணை நடிகை வீடியோவும் ஒன்றா? துணை நடிகையின் முழு ஈடுபாட்டுடன், சம்மதத்துடன் எடுக்கப்பட்ட வீடியோ போலவே தெரிகிறது.
எம்ஜிஆர் கொள்கை
எப்பேர்ப்பட்ட நாடு இது? பெண்களுக்கு முக்கியத்துவமும் பெருமையும் வாய்ந்த நாடு இது.. மங்கையராக பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றெல்லாம் பெண் இனத்தை புகழ்ந்து வைத்துள்ளார்கள்.. அப்படியிருக்கும்போது, இப்படி வீடியோ, ஆடியோ வெளியிட்டு கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?
இந்த வீடியோ கசிந்ததால், இப்போதும் பெண்தான் பாதிக்கப்பட்டுள்ளார்.. பெண்ணின் எதிர்காலம்தான் பாதிக்கப்பட்டிருக்கிறது.. ஒரு கேரக்டரில் நடித்தாலே, அதை வைத்துதான், வாய்ப்புகள் அமையும்.. உதாரணத்துக்கு ஒரு படத்தில் குத்துப்பாட்டு ஆடிவிட்டால், அதற்கு பிறகு அந்த நடிகைக்கு, ஹீரோயின் வாய்ப்பு வராது. அந்த அளவுக்கு தமிழ் சினிமா என்பது இந்த மண்ணுடன் தொடர்புடையது. அதனால்தான், எம்ஜிஆர் மது அருந்துவதுபோல, சிகரெட் பிடிப்பதுபோல கடைசிவரை நடிக்கவேயில்லை..
வக்கிர மனநிலை ஆண்கள்
எனவே, உங்களது கேரக்டரை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்களோ, அப்படித்தான் வாய்ப்புகள், எதிர்காலம் அமையும். அந்த வகையில், இப்போது இந்த துணை நடிகை மட்டும் மாட்டி கொண்டிருக்கிறார்.. இதுபோல் இன்னும் பல பேர் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். வக்கிர மனநிலைமையில் ஆண்கள் இருந்தால் அவர்களுடன் ஜாக்கிரதையாக இருக்கணும்.
சம்பளம் இல்லாவிட்டாலும், அல்லது குறைவான சம்பளம் என்றாலும் அந்த சான்ஸ் போதும் என்று சொல்லியிருக்கலாம். வீடியோ எடுத்த நபரின் பெயரை சொல்வதில் என்ன தயக்கம்? அப்போதாவது அந்த அயோக்கியன் திருந்த ஒரு வாய்ப்பு கிடைக்குமே? இனி வேறு பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்குமே? எனவே துணை நடிகை, இது சம்பந்தமாக கமிஷனரை சென்று போய் மனு தரவேண்டும்.
மாதர் சங்கம் எல்லாம் எங்கே
மாதர் சங்கம் எல்லாம் எங்கே போனாங்க? லீவுல போயிட்டாங்களா? வேறு யாருமே இதுகுறித்து வாய் திறக்கவில்லை.. இதுவே அரசியல் ஆதாயம் என்றால், வீடியோ எடுத்த நபர் யார் என்று கேள்வி எழுப்பியிருப்பார்கள்..
அப்படியே வீடியோ எடுத்த நபர் யார் என்று தெரிந்தாலும், முதலில் அவரது சாதி என்ன என்று பார்ப்பார்கள்.,. பிறகு மதம், பிறகு அரசியல் பின்னணி என்னவென்று பார்ப்பார்கள்.. அதுக்கப்புறம்தான் போராடவே வருவாங்க.. அப்படி இருக்கக்கூடாது.. யாராக இருந்தாலும் போராட வரணும். அதுதான் ஜனநாயக நாடு.. புல்லட் ஓட்டுவது பெண்ணியம் அல்ல.. சமுதாய வேலையை சரியாக செய்து முடிப்பதும் பெண்ணியம்தான்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications