ஆஹா... இன்னைக்கு அபிஷேக்குக்கு ஆண்டவரே அபிஷேகம் செய்வாரா... ஆர்வத்தில் ரசிகர்கள்
சென்னை : வாரத்தின் இறுதி நாள் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் காத்திருந்தனர்
இந்த வாரம் எலிமினேஷன் யார் என்பதில் தெரிந்துகொள்வதில் ரசிகர்கள் செம்ம ஆர்வத்தில் காத்திருக்கின்றனர்.
முதல் வாரத்திலேயே பிரபலமான அபிஷேக் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு கமல்ஹாசனை பற்றி பேசி இருப்பதால் அதைப் பற்றி அவர் எதுவும் கேள்வி கேட்பாரா என்பதை ப்ரோமோவில் காட்டவில்லையே என ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.

ஆரம்பமான ஐந்தாவது சீசன்
கடந்த நான்கு சீசன்களை சர்ச்சைகள் உடன் கூடிய பிரம்மாண்ட வெற்றியுடன்... கடந்து வந்த பிக் பாஸ் ஷோ.... மறுபடியும் பிரம்மாண்டமாக தனது ஐந்தாவது சீசனை ஆரம்பித்திருக்கிறது. ரியாலிட்டி ஷோவா..? மாடலிங் ஷோவா..? என்று குழம்பும் அளவிற்கு.., பெரும்பாலும் மக்களுக்கு பரிச்சயமில்லாத முகங்களை வைத்து இந்த முறை தனது வித்தியாசமான ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது பிக் பாஸ். குறிப்பிட்ட சிலர் மட்டுமே மக்களுக்குத் தெரிந்த முகமாக இருக்கும் இந்த சீசனில், மக்களுக்கு தெரிந்து இருக்கிறதோ.. இல்லையோ.., இணைய வாசிகளுக்கு மிகவும் பரிச்சயமானவர்தான் இந்த அபிஷேக்..
Recommended Video

சினிமா பையன் அபிஷேக்
பிரபல யூடியூபர் ஆன அபிஷேக் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையும் வைத்து பிரபலமானவர் என்று சொல்லலாம். சினிமா பையன் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் அபிஷேக், தான் நேர்காணல் செய்யும் செலிபிரிட்டிகளிடமெல்லாம் அதிமேதாவி போல் பேசி மொக்கை வாங்கிய.. பப்ளிசிட்டி ஆனவர். இவரது யூடியூப் சேனல்களில் இவர் அப்லோட் செய்யும் வீடியோக்களின் கமெண்ட் பாக்ஸ் களில், பெரும்பாலும் நவரசம் பொங்கும் வார்த்தைகளே நெட்டிசன்கள் கமெண்ட் போட்டிருப்பார்கள். இருந்தாலும் இந்த எதிர்மறையான விமர்சனங்களையே தனது பிளஸ்ஸாக நினைத்து கொண்டு யூடியூப் சேனலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

வைரல் ஆன பழைய வீடியோ
தங்களைப் பற்றி நல்ல இமேஜ் இருக்கும் பிரபலங்களே...பிக்பாஸ் நிகழ்ச்சியால் தங்களது இமேஜை டேமேஜ் செய்து கொண்டனர். அப்படி இருக்க ஏற்கனவே நெகட்டிவ் கேரக்டராக பிரபலமான அபிஷேக் பிக் பாஸ் ஷோவில் என்ன ஆவார்..! என்று தெரியவில்லை. அவரை கன்டஸ்டன்ட் ஆக உலகநாயகன் கமல் அவர்கள் அறிமுகப்படுத்தியதுமே அபிஷேகத்திற்கு செக் வைக்கும் வேலையை நெட்டிசன்கள் தொடங்கிவிட்டனர். எங்கோ.. எப்பொழுதோ...ஏதோ ஒரு விழாவில் பிக்பாஸ் ஷோவையும், உலகநாயகன் கமல் அவர்களையும் செமையாக கலாய்த்து அவர் பேசிய பழைய வீடியோவை தூசுதட்டி வைரல் ஆகி விட்டனர்.

கமல் பார்த்திருப்பாரா
சில நாட்களாக அபிஷேக் கமலையும், பிக்பாஸ் ஷோவையும், கலாய்த்து பேசிய வீடியோ வைரலான சூழ்நிலையில்.. கமல் மட்டும் பார்க்காமல் இருந்து இருப்பாரா..! என்ன..? சனி, ஞாயிறு கிழமைகளில் வழக்கம்போல் தனது பஞ்சாயத்தை வைக்கும் ஆண்டவர், பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கும் தவறுகளுக்கு குட்டு வைத்தார் போல் பேசுவார். தன்னையே கலாய்த்த அபிஷேக்கை எப்படி டீல் செய்யப்போகிறார் என்று பார்ப்பதற்கு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கூட்டமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

பஞ்சாயத்து இருக்கு
பிக் பாஸ் வீட்டிற்குள் பாவனியுடன் ஒரு மார்க்கமாக சென்று கொண்டிருந்தார் அபிஷேக். இதைப் பார்த்து சில நெட்டிசன்கள் வயித்தெரிச்சலில் அபிஷேக்கை திட்டி தீர்த்தனர். ஆனால் அபிஷேக் 'நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லப்பா.. பாவனி எனக்கு அக்கா மாதிரி...!என்று கூறியது,பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களைப்.. அப்படியா..!என ஆச்சரியப்பட வைத்தது. இன்று ஆண்டவர் பஞ்சாயத்தில் தன் பாணியில் அபிஷேக்கை எப்படி பதில் கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications