விஜய் சேதுபதியோடு மிரட்டப் போகும் ஸ்ரீசாந்த்... என்ன கேரக்டர்...ஆர்வத்தில் ரசிகர்கள்.
சென்னை: விஜய் சேதுபதியோடு புது படத்தில் ஸ்ரீசாந்த் நடிப்பதை கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்
அவருடைய வழக்கமான ஆக்ரோஷம் திரைப்படத்தில் என்ன மாதிரி இருக்க போகிறது என்று ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு டப் கொடுப்பாரா ஸ்ரீகாந்த் என்று ஆர்வம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்
ஒரு காலத்தில் தனது வேகப்பந்து வீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை மிரட்டி வந்த ஸ்ரீசாந்த், தற்பொழுது காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது இன்னிங்சை ஆரம்பித்துள்ளார்.அவருக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதியோடு கூட்டணி
'நானும் ரவுடிதான்' படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிவரும் படம் 'காத்துவாக்குல இரண்டு காதல்'. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகின்றனர்.அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். விக்னேஷ் சிவன்- நயன்தாரா இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் விஜய்சேதுபதி,நயன்தாரா, சமந்தா, மூவரின் 'லுக்'போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .பல்வேறு நட்சத்திர பட்டாளங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு வீடியோக்கள் இணையத்தில் லீக் ஆகி செம வைரலானது.

ரசிகர்களை கவர்ந்த ஹேர் ஸ்டைல்
தற்பொழுது இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ஒப்பந்தமாகி இருப்பது சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி ஆயுட்கால தடை பெற்ற ஸ்ரீசாந்த், பின் சட்டப்படி நீதிமன்றத்தில் போராடி தான் நிரபராதி என்று நிரூபித்த பின்பும் எந்தவித போட்டியிலும் பங்குபெற வாய்ப்பில்லாமல் இருந்தார். இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தபோதே மாடலிங்,விளம்பரம் என்று அப்போதே ஸ்ரீசாந்த் வித்தியாசமான கெட்டப்புகளில் புது புது ஹேர் ஸ்டைலுடன் வலம் வருவதுண்டு. அதன் தாக்கமே தற்போது அவரை சினிமாவில் நடிக்க தூண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.

என்ன மாதிரி கேரக்டர்
விளையாடும்போது ஆக்ரோஷம் ஆகவே விளையாடும் குணம்படைத்தவர் ஸ்ரீசாந்த். அந்த ஆக்ரோசத்தின் காரணமாக ஐபிஎல் சீசனின் போது ஹர்பஜன் சிங்கிடம் ஒரு முறை அறை வாங்கி அழுத நிகழ்ச்சியும் நடந்தது. காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்து வரும் ஸ்ரீசாந்த் நடிப்பிலும் அதேபோன்ற ஆக்ரோஷமான ரோலாக இருந்தால்,"நானும் ரவுடிதான்" படத்தில் கிள்ளிவளவன் என்ற வில்லன் கேரக்டரில் நடித்து கலக்கிய பார்த்திபனை போல் இந்த படத்திலும் ஆக்ரோஷமான ஸ்டைலான வில்லனாக ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications