"நான் அந்த மாதிரி எதுவும் பண்ணலையே”... பொறுக்கின்னு சொல்றவங்களுக்கு அசல் கூறிய பதில்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இருந்து அசல் கோலார் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவரைப் பற்றி அதிகமான நெகட்டிவ் கருத்துகள் பரவி வரும் நிலையில் அவர் பேசிய பழைய வீடியோவை ரசிகர் பகிர்ந்து வருகிறார்கள்.
கானா பாடகர் ஆன அசல் கோலார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக பெண் போட்டியாளர்களிடம் சில்மிஷ செயல்களில் ஈடுபட்டு வந்த பல வீடியோக்களும் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
சமூக வலைத்தளத்தில் அசல் கோலார்க்கு எதிராக பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அதிகமாக அறிமுகமான போட்டியாளர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத அளவில் அதிகமான போட்டியாளர்கள் பல்வேறு துறைகளில் இருந்து கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 20,000 மேற்பட்ட போட்டியாளர்கள் விருப்பம் தெரிவித்த வந்த நிலையில் 21 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் .இதில் ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோலார் என மூன்று போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். அசல் கோலார் ஒரு கானா பாடகராக இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் ஆனார்.

பிரபலங்களுடன் பாடல்
அசல் கோலார் வசந்தகுமார் என்ற தனது பெயரை அசல் கோலார் என மாற்றி வைத்திருக்கிறார். இவர் "ஜோர்த்தாலு" என்ற கானா பாடல் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் இவர் சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை எழுதி இருக்கிறார். அவருக்கு கிடைத்த வெற்றியின் காரணமாக சந்தோஷ் நாராயணன் இசையில் குளுகுளு, மகான் படங்களிலும் யுவன் இசையில் காபி வித் காதல் பாடலிலும் படத்திலும் பாடல் எழுதி இருக்கிறார். அது போல ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் திரைப்படத்திலும் அசல் பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். தற்போது இவரை பற்றி அதிகமான நெகட்டிவ் கருத்துகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

சில்மிஷங்கள்
அசல் கோலார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது ஒரு பாடகராக அனைவரையும் மகிழ்விப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இவர் சக பெண் போட்டியாளர்களிடம் கடிப்பது, தடவுவது போன்ற பல சில்மிஷ செயல்களை செய்து கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரோடு இருந்த நிவேதாவுடன் இவர் பழகி வருவதாகவும், இவர்கள் இருவரும் தனி அறையில் இருந்ததாகவும் பல வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதை குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து இவரை திட்டி வந்தனர்.

பரவி வரும் பழைய வீடியோ
அசல் கோலாருக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் உருவாகி கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு வாக்குகள் மிக குறைவாக இருந்ததால் கடந்த வாரம் இவர் வெளியேறி இருந்தார். இந்த நிலையில் இவருக்கு ஆதரவாக ஒரு சில ரசிகர்கள் இவர் இதற்கு முன்பு பேசிய வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் தன்னை பற்றி தரகுறைவாக பேசுபவர்களுக்கு நான் கவலைப்படுவதே கிடையாது. நான் பாடலில் எந்த ஒரு தப்பான வார்த்தையும் யூஸ் பண்ணுவது கிடையாது. பெண்களை தரக்குறைவாகவும், வன்முறையை தூண்டுவதுமாகவும், எந்த ஒரு வரியையும் நான் சேர்த்தது கிடையாது. அதனால் என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் நான் கண்டுகொள்ளவே மாட்டேன் என்று இவர் பேசிய வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர் .நெட்டிசன்கள் பலர் இவர் அப்போதே இப்படித்தானா? என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications