போகும் இடம் எல்லாம் இப்படியா பண்ணுவீங்க கன்னிகா.. கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: சின்னத்திரை நடிகையான கன்னிகா தற்போது தன்னுடைய காதல் கணவருடன் திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
செல்லும் இடமெல்லாம் திருமணத்தை நடத்தி ஆசிர்வாதங்களை அள்ளி தெளிக்கும் கன்னிகாவுக்கு ரசிகர்கள் அறிவுரைகளை கூறி வருகிறார்கள்.
புதிய படத்தின் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கன்னிகாவின் இந்த மாதிரி வீடியோக்கள் சில ஏமாற்றங்களாக இருந்து வருவதாக ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

கன்னிகாவின் ஆரம்ப காலம்
கன்னிகா ரவி தமிழ் நடிகையாக இருந்தாலும் ஆரம்பத்தில் அவர் ஒரு விஜே வாக தான் காலடி எடுத்து வைத்திருக்கிறார். தீயா வேலை செய்யணும் குமாரு, சத்திரபதி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து இருந்தலும் அவருக்கு அந்த வாய்ப்பு சிறப்பாக அமையவில்லை. இவர் தமிழ்நாட்டின் விருதுநகரில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாமே திண்டுக்கல் தானாம். கன்னிகா முதன்முதலில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பான அமுதா ஒரு ஆச்சர்யக்குறி சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
திரைத்துறை தம்பதிகளான கன்னிகா மற்றும் பாடல் ஆசிரியர் சினேகன் பலருக்கும் பரிச்சயமான நபர்கள் தான். கன்னிகா வெள்ளித்திரைகள் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடுத்திருக்கிறார். இவர் எப்போது மீண்டும் சீரியலுக்கு வருவார் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். இவருடைய அழகான தமிழ் உச்சரிப்பு பல ரசிகர்களுக்கு பிடித்ததாக இருந்து வருகிறது. கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் காதலித்த திருமணம் செய்து கொண்டிருந்தாலும் இப்ப வரைக்கும் காதலர்களாக தான் சுற்றி வருகிறார்கள்.

திருமண வீடியோக்கள்
திருமணத்திற்கு பிறகும் கொஞ்சம் கூட காதல் குறையாத இந்த தம்பதியினர் பல திருமணங்களை நடத்தி வைத்து ஆசீர்வாதங்களை வழங்கி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா இந்த வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தட்டி விட்டு வருகிறார். கன்னிகா வெளியிடும் போஸ்டுக்கு எப்போதும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அதிகமான வீடியோக்கள் கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் சேர்ந்து திருமணத்தை நடத்தி வைக்கும் வீடியோக்களாக இருப்பதால் பலர் செல்லமாக கோபித்து வருகிறார்கள்.

பல திறமைகள் இருக்கு
கன்னிகாவிற்குள் பல திறமைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது. அது அவரை விடவும் ரசிகர்களுக்கு அதிகமாக தெரிந்திருக்கிறது. அவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவராக இருக்கிறார். புத்தகங்கள் எழுதுவதும் இவருக்கு கைவந்த வேலைதான் அதுமட்டுமல்லாமல் சமையல் செய்வது, ஓவியம் வரைவது, சிலம்பம் சுற்றுவது, இயற்கை விவசாயத்தை காப்பது என பல்வேறு முகங்கள் இவருக்கு இருக்கும் வேளையில் அதைப் பற்றிய வீடியோக்களையும் தங்களுடைய ரசிகர்களுக்காக வெளியிட வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விட்டு வருகிறார்கள். ஒரு சிலர் புது திரைப்படத்தின் அப்டேட் கேட்டும் வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications