பிக்பாஸ் விதியை மீறிய அபிஷேக், பிரியங்கா, நிரூப்...சிறை காத்திருக்கிறதா?....குறும்படம் உண்டா?
சென்னை: எதையெல்லாம் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்களோ அதையே இப்போ பிரியங்காவும் அபிஷேக்கும் மற்றும் நிரூப் செய்திருக்கிறார்கள்.
இவர்கள் கேங் சேர்ந்த பிறகு வேற மாதிரி மாறி விட்டார்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
போன வாரமே ரகசியம் பேசி தப்பித்து விட்டார்கள் இந்த வாரமாவது இதை கமல் கவனிப்பாரா என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

பெருகும் ரசிகர்களின் ஆதரவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருந்து வருகிறது. ரசிகர்களின் பேராதரவினால் தான் ஒவ்வொரு சீசனிலும் அதிகமான அளவில் வெற்றி பெற்று வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது 4 சீசன்கள் முடிவடைந்து ஐந்தாவது சீசனில் காலடி எடுத்து வைக்கிறது. இதற்கு முன்பு சீசன்களில் நிகழ்ச்சி தொடங்கிய அடுத்த நாளிலிருந்தே பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வெடிக்க தொடங்கி விடும் ஆனால் தற்போது 4 சீசன்களையும் நன்றாக பார்த்துவிட்டு போட்டியாளர்கள் திறமையானவர்களாக தான் இந்த சீசனில் அடிஎடுத்து வைத்திருக்கின்றனர்.

ஒரிஜினல் முகம் வெளிவருமா
இந்த சீசனில் இதில் 18 போட்டியாளர்கள் அறிமுகமாகி தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வருகின்றனர். இதுவரைக்கும் ஒற்றுமையாக இருந்த போட்டியாளர்கள் தற்போது பல கேங்க்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்று அவர்களுக்குள்ளே சில மனக்கசப்புகள் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் அதையெல்லாம் வெளியே காட்டிக் கொள்ளாமல் சகஜமாக இருப்பது போல தான் ஒரு சில நேரங்களில் நடித்து வருகின்றனர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். என்ன தான் இவர்கள் நடித்தாலும் ஒரு சில நேரங்களில் அவர்களுடைய ஒரிஜினல் கேரக்டர் வெளியே வந்துவிடுகிறது. அப்படித்தான் தற்போதும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது.

ரகசியத்தை உடைத்து விட்டார்களே
அந்த மாதிரி தான் தற்போது இந்த சீசனில் பிரியங்கா, அபிஷேக், நிரூப், அண்ணாச்சி, ராஜூ இவர்கள் அனைவரும் ஒரு குரூப்பாக இருக்கிறார்கள் என்று சக போட்டியாளர்கள் இவர்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் இவர்கள் செய்த செயல்தான் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. காரணம் இந்த நிகழ்ச்சியில் யாரும், யாரை எலிமினேஷன் செய்கிறார்கள் என்ற ரகசியத்தை வெளியே சொல்லக் கூடாது ஆனால் இவர்கள் தாங்கள் யாரை எலிமினேஷன் செய்தார்களோ அவர்கள் பெயரை மாற்றி மாற்றி கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்ததும் நெட்டிசன்கள் வழக்கம்போல இது என்ன புது கதையா இருக்கு என்று கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

தண்டனை இருக்கிறதா
அதுவும் அபிஷேக் ராஜூவிடம் நீ யாரை எலிமினேஷன் செய்தாய் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு நான் சொல்ல மாட்டேன் என்று சொல்லும்போது செல்லமாக சண்டை போடுவது போல சண்டை போட்டு என் கிட்ட சொல்ல மாட்டியா என்று கேட்டுக்கண்டிருக்கிறார். இது ரசிகர்களுக்கு கோபமாக தான் வருகிறது. ஆனால் ராஜு, சொல்லக்கூடாது இதுதான் ரூல்ஸ் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அதை கண்டு கொள்ளாமல் அவரை கலாய்த்து கொண்டிருக்கிறார் அபிஷேக். அப்போ இந்த வாரம் இதற்கு தண்டனை கமல் கொடுப்பாரா?? இல்லையா?? என்று கமெண்டுகளில் பல அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் சிறை இல்லை...இருந்தால் இவருக்கு சிறை கொடுப்பாரா?? அல்லது என்ன தண்டனை கொடுப்பார்கள்?? என்று கேட்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications