Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிராயுதபாணியாக நின்ற தாமரை..பாவனி,சுருதி நடந்து கொண்டது ...குவியும் கமெண்டுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்க் என்றால் அதற்காக எப்படியும் விளையாடலாமா என நெட்டிசன்கள் கொதித்தெழுந்து வருகின்றனர்.

தான் செய்தது தவறா சரியா என தெரியாமலே சுருதியும் பாவனியும் பேசி வருகின்றனர்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அடுத்தவர்களின் இயலாமையை பயன்படுத்தி கொள்ள கூடாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்

அதிகரிக்கும் கண்டனங்கள்

அதிகரிக்கும் கண்டனங்கள்

கிராமத்து பெண்ணாக இருந்தாலும் தன்னுடைய வெகுளித்தனத்தால் சக போட்டியாளர்களிடம் குழந்தை போல நடந்து கொண்டிருந்த தாமரைச்செல்வி தற்போது கதறி அழுது கொண்டிருப்பது பார்ப்பவர்களுக்கு ரொம்ப ஃபீலிங்கா இருந்து வருகிறது. ஆனாலும் இவர் அழுவதற்கான காரணம்தான் ரசிகர்களை கோபப்பட செய்திருக்கிறது. என்னதான் போட்டி என்றாலும் அதற்காக இப்படியா செய்வார்கள் என்று பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

காயின் டாஸ்க்

காயின் டாஸ்க்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு டாஸ்க்கும் ஒரு பிரச்சனையை ஏற்படுத்திவிடும். அது போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் சில நேரங்களில் கடுப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த மாதிரி தான் தற்போது காயின் டாஸ்க் என்ற ஒன்றை வைத்து போட்டியாளர்களுக்குள் மனக் கசப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காயின்களை எப்படியும் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டுமென்று போட்டியாளர்கள் ஒருபுறம் திணறி கொண்டிருக்கும்போது அதை மற்றவர்கள் கைப்பற்றி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் குமுறல்

ரசிகர்களின் குமுறல்

தாமரைச்செல்வி சக போட்டியாளர்கள் இடம் நல்ல மதிப்பை பெற்றிருந்தாலும் ஒரு சில போட்டியாளர்கள் இவர் உண்மையான கேரக்டரில் தான் இருந்து வருகிறாரா?? இல்லை நடிக்கிறாரா என்று கேள்விகளை கேட்டு வந்து கொண்டிருந்தனர். ஆனால் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் அதிகரித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரைச்செல்விக்கு ஏற்பட்டிருக்கும் பரிதாபமான நிலையைப் பார்த்து ரசிகர்கள் தங்களுடைய மனக் குமுறல்களை கொட்டி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து

ரசிகர்களின் கருத்து

தாமரை செல்வியை காப்பாற்றுவதற்காக இவரிடம் போட்டியாளர்கள் காற்றுக் காயினை எடுத்த கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இவர் உடை மாற்றும் போது இந்த காயினை பக்கத்தில் வைத்துக்கொண்டு உடை மாற்றிக் கொண்டு இருக்கும்போது, சுருதியும் பாவனியும் அதை கைப்பற்றி விட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியான தாமரை உங்களை எந்த அளவிற்கு நம்பினேன்!!?? நீங்கள் இப்படி எனக்கு துரோகம் செய்து விட்டீர்களே!! என கூறிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சுருதிக்கும், பாவனிக்கும் எதிராக நெகட்டிவ் கமெண்டுகள் அதிகரித்து வருகிறது. நிராயுதபாணியாக நின்ற தாமரையிடம் இப்படி ஒரு துரோகமான விளையாட்டை விளையாடியது தவறு என்று பலர் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+