சிறப்பாக விளையாடி வின் பண்ணுங்க...பிரியங்காவை வாழ்த்தி குடும்ப போட்டோவை ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்
சென்னை: பிரியங்கா பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தாலும் அவருடைய குடும்ப போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அவருடைய கணவருடன் இவர் எடுத்த பல புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கிறார்கள்.
எப்படியும் இந்த சீசனில் பிரியங்காவை ஜெயிக்க வைத்துவிட வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் சபதம் எடுத்து வருகிறார்களாம்.

சுவாரஸியம் கூட்டும் போட்டியாளர்
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் பைவ் ல் போட்டியாளராக வீட்டிற்குள் சென்று.. தனது பாணியிலே இந்நிகழ்ச்சிக்கு சற்று சுவாரசியம் குறையும் பொழுது கலகலப்பு ஏற்றி ஓட்டிக் கொண்டிருக்கிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. தற்பொழுது இவர் இவரது கணவருடன் இருக்கும் போட்டோக்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளை
ஆரம்பத்தில் 'ஜீ தமிழ்' சானலில் பார்ட் டைம் 'விஜே' வாக அறிமுகமாகி... சன் நெட் ஒர்க் சேனலுக்கு மாறி.. தற்பொழுது விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டி ஆகவே மாறிவிட்டார் பிரியங்கா. விஜய் டிவியின் எந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தாலும் தொகுத்து வழங்குவதற்கு முதல் சாய்ஸாக இருந்து வருகிறார். அந்த அளவிற்கு இவருக்கு ஆதரவு இருப்பதால் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத நபராக இருக்கிறார். இவரது தாய்மொழி தமிழ் இல்லை என்றாலும் தமிழ் நிகழ்ச்சிகளை கலகலப்பாக கொண்டு செல்வதில் இவர் செம கில்லாடி தான்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி
பெரும்பாலான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் பிரியங்கா ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இணை இயக்குனராக இருந்த பிரவீன் குமார் என்பவரை 2016 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்த ஜோடிகள் திருமணத்திற்கு பின்பு பெரிதாக எந்த போட்டோக்களையும் ஜோடியாக வெளியிட்டதில்லை. பிரியங்கா அவரது இன்ஸ்டாகிராம் பேஜ்ஜில் கூட தன் கணவர் போட்டோவை ஜோடியாக போஸ்ட் செய்ததில்லை. இதனாலேயே சில நாட்களுக்கு முன்பு கூட இவர்கள் விவாகரத்து வாங்கி விட்டதாக ஒரு வதந்தி இணையத்தில் பரவியது. ஆனால் இதையெல்லாம் மறுத்த பிரியங்கா, தாங்கள் இருவரும் ஒரே துறையில் இருப்பதால் நல்ல புரிதலுடன் இருப்பதாகவும், சிறுவயதிலேயே தந்தையை இழந்த தனக்கு சமூகம் குறித்த நல்ல புரிதலும்,பொறுப்பும், இருப்பதாக விளக்கம் அளித்திருந்தார்.

ரசிகர்களின் வாழ்த்துக்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவரது பெர்பாமன்ஸ்கள் மக்களால் வெறுகப்பட்டாலும்.., தற்போது ஓரளவு அதை சரி செய்து வருவதாகவே தெரிகிறது என்றும், இப்படியே சிறப்பாக விளையாடி டைட்டில் வின் பண்ணுங்க என்றும் இவரது ரசிகர்கள் இவரை வாழ்த்தி இவர்களது குடும்ப போட்டோக்களை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications