மிரட்டும் சர்வைவர்...துடிக்கும் ராம்..என்ன ஆச்சோ பதறும் ரசிகர்கள்
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
டாஸ்க் என்கிற பெயரில் இரண்டு டீம் களின் உடல் வலிமையும் மனவலிமையும் நிரூபிக்க வைத்து வருகிறது.
இங்கு திறமைக்கு மட்டும் தான் மதிப்பு என்பதை மீண்டும் மீண்டும் சர்வைவர் போட்டியாளர்களுக்கு உணர்த்தியுள்ளது.

முதல் ரியாலிட்டி ஷோ
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ இன்று காலை ஒளிபரப்பான நேரத்திலிருந்து ரசிகர்களின் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே ஒரு சில நாட்களாக இந்த நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளோடு போய்க் கொண்டிருந்த நிலையில் இன்று எலும்பு உடையும் சத்தங்களை கேட்டதும் ரசிகர்களுக்கு என்ன நடக்கிறதோ என்று எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

புது போட்டியாளர்கள்
முதல் முறையாக ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்பும் ஜீ தமிழ் சேனலுக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இந்த ரியாலிட்டி ஷோவில் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான நபர்கள் அறிமுகமாகி இருப்பது இந்த நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு சிறப்பு தான். இதில் ஆரம்பத்தில் 16 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். அவர்கள் அனைவரும் இரண்டு அணியாக பிரிக்கப்பட்டனர். காடர்கள் வேடர்கள் என்று அணிக்கு தலா எட்டு போட்டியாளர்கள் இருந்தனர். இந்த நிலையில் இரண்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் தற்போது மீண்டும் 2 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே வந்து இருக்கின்றனர்.

பிரபலமான போட்டியாளர்கள்
நிகழ்ச்சிக்கு மட்டுமல்லாமல் போட்டியாளர்களுக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது. பல திரைப்படங்களிலும் அந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆகாமல் இருந்தாலும் கூட தற்போது இந்த நிகழ்ச்சியின் மூலமாக நன்றாக பிரபலமாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்களும் தங்களுடைய கற்பனைத் திறனை இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்கள் மீதும் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

என்ன சத்தம்
அதுவும் இன்றைய முதல் ப்ரோமோ இரண்டு சக்கரங்களை இரண்டு அணியினரும் மாற்றி மாற்றி கோல் போட்டு தங்களுடைய ஹிம்முனிட்டி பவரை நிரூபிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். இரண்டு அணியிலும் மூன்று பேர் நின்றுகொண்டு கோல் போடுவதில் கவனமாக இருக்கின்றனர். இந்த நிலையில் காடர்கள் அணியிலிருந்து விக்ராந்த், ராம் சி, லேடி கேஷ் மூவரும் இந்த டாஸ்கில் பங்கு பெறுகின்றனர். எப்படியும் இந்த டாஸ்கில் வென்று விட வேண்டுமென்று இரண்டு அணியும் முழு கவனத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஐயோ என்ன ஆச்சு
இதில் அந்த சக்கரத்திற்குள் சிக்கிக்கொண்ட ராம் சி சுற்றுவதை கூட கவனிக்காமல் போட்டியாளர்கள் விட்டுவிட்டாலும், வெளியே இருக்கும் மற்ற போட்டியாளர்கள் ராமுக்கு என்ன ஆச்சு என்று பதறுவதை பார்த்ததும் தான் சக போட்டியாளர்களுக்கும் கவனித்திருக்கிறார்கள். இதனை பார்த்த ரசிகர்களால் ஐயோ என்ன ஆச்சு என்று பதறிப்போய் இருக்கின்றனர். இன்று இரவு பார்த்தால்தான் தெரியும் ஏற்கனவே ராம் பூச்சிக்கடி அலர்ஜியினால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் இந்த மாதிரி ஒரு தடங்கலா?? என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications
