Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நான் ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது”துள்ளி குதித்து மகிழ்ச்சியை பகிர்ந்த டிடி.. குவியும் வாழ்த்துக்கள்

டிடி தான் சிறுவயதிலிருந்து ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் தற்போது அது நிறைவேறிவிட்டது என்று மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வரும் டிடி என்ற திவ்யதர்ஷினி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களோடு தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே ஆசைப்பட்ட தன்னுடைய கனவு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது ஆனால் தற்போது அந்த பல்கலைக்கழகத்திற்கு வந்து விட்டேன் என்று நெகிழ்ச்சியாக பேசி டி டி மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார்.

இந்த வீடியோவை பல மாணவர்களின் மனதை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

கலகலப்பான தொகுப்பாளர்

கலகலப்பான தொகுப்பாளர்

தொகுப்பாளர் என்று சொன்னதுமே டக் என்று மனதிற்கு வரும் நபர்களில் டிடியும் ஒருவர். திவ்யதர்ஷினி என்கிற தன்னுடைய பெயரை டிடி என சுருக்கி வைத்திருக்கும் டிடி நீலகண்டன் எப்போதும் கலகலப்பான வார்த்தைகளுக்கு சொந்தக்காரராக இருந்து வருகிறார். இவருடைய பேச்சு பலருக்கும் பிடித்ததாக இருந்து வருகிறது. மனதிற்குள் எவ்வளவு வலிகள் இருந்தாலும் வெளியே சிரித்த முகமாக எதிரில் இருப்பவர்கள் மனதிற்குள் இருக்கும் கவலைகள் அனைத்தும் சுக்குநூறாக உடைத்து எரிபவர்களில் இவரும் ஒருவர். என்னதான் தனக்கு எதிரே இருப்பவர் சோகமாக இருந்தாலும் இவருடைய படபடவென பேச்சை கேட்டாலே சோகங்கள் எல்லாம் பஞ்சாக பறந்து விடும் என்று இவரோடு நெருங்கி பழகிய பலரும் கூறி இருக்கின்றனர்.

சின்ன வயசு ஆசை

சின்ன வயசு ஆசை

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல்வேறு விருது வழங்கு நிகழ்ச்சிகளையும், இசை வெளியீட்டு விழாக்களையும் தொகுத்து வழங்கி பல பிரபலங்களை பேட்டி கண்ட டிடி அடிக்கடி மோட்டிவேஷனல் வீடியோ வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது டிடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து தன்னுடைய பல நாள் ஆசை நிறைவேறி விட்டது என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோ நான் சின்ன வயசிலிருந்து என்னுடைய கனவு, ஆக்ஸ்போர்டு யூனவர்சிட்டியில் படிக்க வேண்டும் இங்கே வரவேண்டும் என்பது ரொம்ப ஆசை. ஆனால் கடைசியாக நான் அந்த யுனிவர்சிட்டிக்கு வந்து விட்டேன் என்று குழந்தையாக துள்ளி குதிக்கிறார்.

ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி

ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி

இந்த யுனிவர்சிட்டி ஓல்ட் இஸ் யுனிவர்சிட்டி இன் இங்கிலீஷ் வேர்ட். இது எப்போ ஆரம்பிச்சாங்கன்னா இது லெவன்த் செஞ்சுரியில் ஆரம்பித்தது, இங்க டீச்சிங் நடந்தது என்று ஒரு பதிவு இருக்கு. லண்டன்ல இருந்து ஒரு ரெண்டு மணி நேரம் தள்ளி இருக்கும் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி இந்த யுனிவர்சிட்டி தான். என்னுடைய ட்ரீம் என்று யுனிவர்சிட்டியை சுற்றி காட்டி இந்த காலேஜில் படிப்பதில் பெஸ்ட் விஷயம் என்னவென்றால் இந்த கேம்பஸ், இந்த கேம்பஸ் அவ்வளவு அழகாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த ஆப்பர்சூனிட்டியை நான் மிஸ் பண்ணி விட்டேன். அதனால் ப்ளீஸ் நீங்கள் இங்கே வந்து படிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இங்க நிறைய ஸ்காலர்ஷிப் இருக்கிறது, நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அதை எல்லாம் பயன்படுத்திக்கோங்க. ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் படித்தால் நிறைய மரியாதை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ஆசிரியர்களுக்கு நன்றி

ஆசிரியர்களுக்கு நன்றி

அதுமட்டுமில்லாமல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆக்ஸ்போர்ட்டில் இருப்பது போன்ற உணர்வை விவரிக்க முடியாது. ஆங்கில பட்டதாரி ஆக இது எனது கனவு இங்க படிக்க முடியலை என்றாலும் அட்லீஸ்ட் வந்து பார்க்க முடிந்தது. எனது ஆங்கில ஆசிரியர்களுக்கு நன்றி என திருமதி டாசன் & பிரபாகரன் தயவுசெய்து இந்த ரீலை பார்த்துவிட்டு போகிறவர்களுக்கு அனுப்புங்கள். விரைவில் இது சில மனதை ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன் என்று அந்த வீடியோவிற்கு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+