ஐயப்பனுக்கு மாலை அணிந்த ஹுசைன்! வந்து விழுந்த விமர்சனம்! மணிமேகலையின் மாஸ் பதில்: குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: விஜே மற்றும் தொகுப்பாளினியான மணிமேகலைக்கும், நடனக் கலைஞர் ஹுசைனுக்கும் இடையே மலர்ந்த காதல், சாதி மத எல்லைகளைத் தாண்டி இன்று வரை வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது திருமணத்துக்கு இரு குடும்பத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதிலும் மணிமேகலையின் வீட்டில் நடந்த சம்பவம், இன்றும் பல காதல் ஜோடிகள் சந்திக்கும் துயரத்தின் பிரதிபலிப்பு.

மணிமேகலையின் போராட்டம்
"நான் ஒரு பையனைக் காதலிக்கிறேன், அவர் பெயர் ஹுசைன்" என்று மணிமேகலை தன் வீட்டில் சொன்னதுமே, அவருடைய அப்பா கோபத்தில் அடிக்கத் துடைப்பத்தை எடுத்துவிட்டாராம் "வேற்று மதத்தில் எப்படி நாம் கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்?" என்று கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். பெற்றோரின் சம்மதம் கிடைக்காததால், மணிமேகலை வீட்டை விட்டு வெளியேறி, ஹுசைனைத் தன்னுடைய விருப்பத்தின் பேரில் காதல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு இருவரும் ஆரம்பத்தில் நிதி ரீதியாகவும், குடும்ப ஆதரவு இல்லாமலும் கஷ்டப்பட்டு, இன்று ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளனர். ஹுசைன் குடும்பத்தினர் சில மாதங்களிலேயே மணிமேகலையை ஏற்றுக்கொண்டாலும், மணிமேகலையின் குடும்பத்தினர் நீண்ட வருடங்கள் கழித்துதான் இப்போது ஹுசைனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மணிமேகலையின் அப்பா இன்னும் அவரிடம் பேசுவதில்லையாம்.
ஐயப்பனுக்கு மாலை
இந்த நிலையில், ஹுசைன் செய்த ஒரு செயல், உண்மையான அன்பின் அடையாளமாக இணையத்தில் வைரலாகி வருகிறது. மனைவிக்காகவும், அவளுடைய நம்பிக்கைக்காகவும், ஹுசைன் தற்போது ஐயப்பன் சாமி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கியிருக்கிறார்.
மணிமேகலையின் உருக்கமான பதிவு
இதைப் பற்றி மணிமேகலை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். "எல்லாப் போராட்டங்களையும் தாண்டி, நம்முடைய அன்பு தான் ஜெயிக்கும்" என்பதுபோல் அவருடைய பதிவு அமைந்துள்ளது. ஹுசைனின் இந்தச் செயலுக்கு இணையத்தில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பாராட்டு
பலரும், "உண்மை அன்புக்கு மதம் இல்லை, இதுதான் உண்மையான காதல்" என்று உசேனைப் பாராட்டி வருகின்றனர். ஆனால், ஒரு சிலர், "ஹுசைன் இப்படி மதம் மாறி வேற மதத்தைச் சார்ந்த கோவிலுக்குச் செல்கிறாரே, ஆனால் மணிமேகலை ஹுசைனுக்காக மதம் மாறுவாரா?" என்று சீண்டி வருகிறார்கள். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையோடு மணிமேகலை முஸ்லிம் பெண்கள் அணியும் உடை அணிந்தது அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. மணிமேகலையை ஹுசைன் மதம் மாற்றிவிட்டார் இது லவ் ஜிகாத் என்றெல்லாம் சிலர் கமெண்ட் கொடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் ஆசீர்வாதம்
இவற்றையெல்லாம் கடந்து, அதிகமான ரசிகர்கள், அடுத்த வருடத்தில் மணிமேகலைக்குக் 'குட்டி ஐயப்பனை' குழந்தையாகப் பெற வேண்டும் என்று ஆசீர்வாதங்களையும் வாழ்த்துகளையும் வழங்கியிருக்கிறார்கள். மணிமேகலை மற்றும் ஹுசைன் ஆகியோரின் இந்தப் பயணம், காதல் மட்டுமே முக்கியம்; மதங்கள் அன்பைத் தடுப்பதில்லை என்பதை அழுத்தமாக நிரூபித்து வருகிறது. ஹுசைனின் இந்தச் செயல், மணிமேகலையின் அப்பாவிடம் மாற்றம் ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications