Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரைப்படத்திற்கு இணையாக சீரியலில் அதிரடி..நடிப்பு என்றாலும் நியாயம் வேண்டாமா?உசுரு முக்கியம் பாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்படங்களுக்கு இணையாக தற்போது கலர்ஸ் டிவி சீரியலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    திரைப்படத்திற்கு இணையாக சீரியலில் அதிரடி..நடிப்பு என்றாலும் நியாயம் வேண்டாமா?உசுரு முக்கியம் பாஸ்

    கலர் டிவியில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே சீரியலில் சூட்டிங் ஸ்பாட் வீடியோ தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சீரியல் மோகம்

    சீரியல் மோகம்

    வெள்ளித்திரைக்கு சளைத்ததல்ல சின்னத்திரை என்று தற்போதைய சூழ்நிலையில் சின்னத்திரையும் நிரூபித்து வருகின்றது. அதனால்தான் பல நடிகர்கள் சின்னத்திரையில் அறிமுகமானாலும் போதும் என்று சீரியல்களை நோக்கி படை எடுத்து வருகின்றனர். காரணம் சீரியல்களில் நடித்து பிரபலமானால் கூட அவர்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் பிரகாசமாக அமைந்துவிடுகிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இருக்கும் அளவிற்கு சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் பலம் அதிகரித்து வருகிறது. வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மட்டும்தான் சீரியல் பார்ப்பார்கள் தற்போது அப்படி அல்ல. அனைத்து தரப்பட்டவர்களும் சீரியல் பார்க்க தொடங்கி இருக்கின்றனர்.

    இளைஞர்களை கவர்ந்த ஜோடி

    இளைஞர்களை கவர்ந்த ஜோடி

    சீரியலின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் டிவியில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் சீரியல்களில் அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதால் ரசிகர்களுக்கு அவர்களை அறியாமல் சீரியல் பக்கம் ஆர்வம் அதிகரித்து விடுகிறது. அதுவும் இளைஞர்களை அதிகமாக கவர்ந்து வரும் சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் இதயத்தை திருடாதே சீரியல் தற்போது இரண்டாவது பாகத்தில் அடியெடுத்து வைத்து இருந்தாலும் இதில் விருவிருப்பு குறையவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். காரணம் இந்த சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருமே இளைஞர்களை அதிகமாக கவர்ந்த ஜோடியாக இருந்து வருகின்றனர்.

    ஆயிரம் எபிசோடுகளை கடந்த வெற்றி

    ஆயிரம் எபிசோடுகளை கடந்த வெற்றி

    இதயத்தை திருடாதே சீரியல் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலின் சூட்டிங் வீடியோ தற்போது சீரியல் ஹீரோவான நவீன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் பதறிப் போய் இருக்கின்றனர். திரைப்படங்களுக்கு இணையாக சீரியல்களில் சூட்டிங் எடுப்பதை பார்த்து பலரும் அசந்துபய் இருக்கின்றனர். ஒரு சில ரசிகர்கள் என்னதான் நடிப்பாக இருந்தாலும் அதற்காக இப்படியா செய்யவேண்டும். உடல்நலத்தில் கவனம் வேண்டும் என்றெல்லாம் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

    வைரலான சண்டை சீன்

    வைரலான சண்டை சீன்

    இதயத்தை திருடாதே சீரியலில் ஹேமா பிந்து மற்றும் நவீன் இருவரும் பைக்கில் வரும்போது அவர்களை வழிமறித்து ரவுடிகள் தாக்குவது போன்ற சீன்கள் படமாக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரிஜினல் ஆகவே நவீன் சண்டை போட்டு வருகிறார். இதை பார்த்த பலரும் திகைத்துப்போய் இருந்தாலும், நவீன் இந்த வீடியோவிற்கு வேற லெவல் கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதில் எனக்கு ஆக்சன் மற்றும் சண்டைக் காட்சிகள் பிடிக்கும். இந்த மாதிரியான காட்சிகளை செய்ய நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். மேலும் இது ஒரு சிறுவனின் விஷயம் என்று நான் நினைக்கிறேன். இது நன்றாக வந்துள்ளது. மேலும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்ததும் நவீனுக்கு வெள்ளித்திரையில் ஆக்ஷன் வாய்ப்பு கொடுத்தால் செமையாக இருக்கும் என்று அவருடைய தீவிரமான ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+