அபிஷேக்கை பார்த்து வெளிப்படையாக பேசிய அண்ணாச்சி... இது பிடிக்கவில்லை என பொங்கும் சிபி
சென்னை: ரசிகர்களின் மனதில் இருப்பதை தற்போது அண்ணாச்சி வெளிப்படையாக பேசி விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுநாள் வரையிலும் இல்லாமல் திடீரென சிபி, அபிஷேக் பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
அபிஷேக்கின் முகத்துக்கு நேராகவே அவருடைய கேரக்டரை பற்றி விமர்சித்து இருப்பது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நிகழ்ச்சி சூடு பிடிச்சிருக்கு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக கலக்கி வருகிறது. இந்த வார தலைவராக சிபி பொறுப்பேற்றிருக்கும் நேரத்தில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் தான் இருந்து கொண்டிருக்கிறது. இந்த வாரத்தில் காயின் எடுக்கும் டாஸ்க் இருப்பதால் போட்டியாளர்களுக்குள் சந்தேகங்களும் மோதலும் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் ஏற்படத் தொடங்கி இருக்கிறது. இதை பார்க்கும்போது ரசிகர்கள் ஒருவழியாக இப்போதான் நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

தினமும் ப்ரமோவில் அபிஷேக்
ரசிகர்கள் என்னதான் அபிஷேக் ராஜாவை திட்டி தீர்த்தாலும் அவர் செய்யும் செயல்கள் தான் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யத்தை கூட்டிக் கொண்டு இருக்கிறது என்று ஒரு பக்கமாக அவருக்கு ஆதரவு கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருக்கும் சக போட்டியாளர்களும் அவர் மீது காண்டாக இருக்கும் நேரத்தில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் போட்டியாளர்களும் இருக்கின்றனர், என்பதை இன்றைய ப்ரமோ காட்டியிருக்கிறது. ஒவ்வொரு ப்ரோமோ வெளியாகும் போதும் அதில் அபிஷேக் தெளிவாக பதிந்துவிடுகிறது. அபிஷேக் தன்னுடைய இருப்பை அந்த வீட்டில் அழுத்தமாக பதிவிட்டு வருகிறார். அதனாலேயே தினமும் ப்ரமோவில் இவரைப் பார்த்ததும் சில ரசிகர்கள் இவர் மீது கடுப்பில் நெகட்டிவ் களையும் அனுப்பி வருகின்றனர்.

கூட்டுக்குடும்பம் என்னாச்சி??
இந்த சீசனில் முதல் வாரம் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் விட்டுக் கொடுத்துக் கொண்டு கூட்டுக் குடும்பம் போல வாழ்ந்து கொண்டு இருந்ததை பார்த்ததும், ரசிகர்கள் அப்போ இந்த சீசன் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்து விட்டார்கள் போல. ஆனால், இரண்டு வாரங்களில் அனைவரின் சுயரூபம் தெரிந்து விடும் என்று ஏற்கனவே அண்ணாச்சி கூறியிருப்பது தற்போது நடந்து வருகிறது. அதனால் இமான் அண்ணாச்சியின் ரசிகர்கள் ஒரு பக்கம் அன்றே கணித்தார் என்று இவருடைய புராணத்தை பாடி வருகின்றனர்.

பிரியங்காவுக்கு அறிவுரை
ஆரம்பத்தில் பிரியங்கா, அபிஷேக், அண்ணாச்சி, ராஜு, நிரூப் என அனைவரும் ஒரு அணியாக தான் இருந்தது போல இருந்து வந்தனர். ஆனால் தற்போது இவர்களுக்குள் ஏற்படும் சின்னச்சின்ன கருத்து வேறுபாடு காரணமாக அனைவரும் தனித்தனியே விளையாட்டை தொடங்கியிருக்கின்றனர். இதில் அபிஷேக் மற்றும் பிரியங்கா ஒன்றாக விளையாடிக் கொண்டிருப்பது சக போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை. அபிஷேக்கை பற்றி பிரியங்காவிடம் அடிக்கடி எடுத்து கூறி வருகின்றனர். ஆனால் நேற்றைய ப்ரமோகளில் சக போட்டியாளர்கள் சொல்வது சரிதான் என்பது போல தலையை ஆட்டிக் கொண்டிருந்த பிரியங்கா நிகழ்ச்சியில் அப்படி எதுவும் செய்யவில்லை.

கருத்து கணிப்பு சரியா
இன்றைய முதல் ப்ரமோவில் இந்த வீட்டிற்குள் இருக்கும் நெருப்பை பற்றி போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை கூறிக் கொண்டிருக்கின்றனர். அதில் அண்ணாச்சி அபிஷேக்கை பார்த்து அபிஷேக் மீது எனக்குள்ள ஒரு குறை இருக்கிறது, கொளுத்தி போடுவார்கள் என்பார்களா?? அந்த மாதிரி இவர் இருப்பாரோ என்று எனக்கு தோன்றுகிறது என தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதற்கு அபிஷேக்கும் மௌனமாக தலையை ஆட்டிக்கொண்டு இருக்கிறார். ஆனால் இந்த கருத்தை கேட்ட சிபி நீங்க அபிஷேக்கை பற்றி சொன்னது தவறாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் ரசிகர்கள் அண்ணாச்சியின் கருத்துக்கு ஆதரவளித்து அவருக்கு ஆதரவாக கமெண்டுகளை அனுப்பி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications