பதுங்கிய பப்லு... பதறிய மீரா ..பெரிய மனுஷன் செய்ற வேலையா இது...கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: சீரியலில் கோபமான கேரக்டராக மிரட்டிக் கொண்டிருக்கும் பப்லு சூட்டிங் ஸ்பாட்டில் செய்த செயல்தான் தற்போது அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலின் அப்பா கேரக்டரில் நடிக்கும் பிரித்வி தன்னுடைய மூத்த மகளாக நடிக்கும் நிமிஷிகாவிடம் செய்த சேட்டைகள் தான் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது.
தன்னை மறந்து மேக்கப் போட்டுக் கொண்டிருந்த நிமிஷிகா திடீரென பதறியபடி கத்தி ஆர்ப்பாட்டம் போட்டு சூட்டிங் ஸ்பாட்டை பதற வைத்து விட்டார்.

வில்லன் ஹீரோ
பொதுவாக சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி அதில் வில்லன்களாக நடிப்பவர்கள் எல்லாம் உண்மையில் அப்படி இருக்க மாட்டார்கள் என்பதை தற்போது சீரியலில் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்து கொண்டிருக்கும் பப்லு நிரூபித்திருக்கிறார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குணச்சித்திர வேடத்திலும் வில்லன் கேரக்டரிலும் அனைவரையும் தன்னுடைய நடிப்பால் மிரட்டியவர், தற்போது சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். சின்னத்திரை ஆக இருந்தாலும் தன்னுடைய நடிப்பு ஒன்றும் குறைந்து விடாது என்பதை நிரூபிக்கும் வகையாக இவர் சன் டிவியில் கண்ணான கண்ணே சீரியலில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி வெறுக்கலாமா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அது அனைவருக்குமே தெரிந்ததுதான். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து இப்ப வரைக்கும் டிஆர்பி யில் டாப்பில் தான் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் பல புதுமுகங்களும் பல வெள்ளி திரை நடிகர்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் பப்லு முக்கியமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இந்த சீரியலின் அப்பா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் ஆக இவர் இருந்தாலும் முதல் மனைவிக்கு பிறந்த மீராவை மட்டும் வெறுத்து ஒதுக்கி கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவர் ஒரு ராசி இல்லாதவர் என்று சொல்லி பலபேர் வயிற்று எரச்சலை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

மீரா ஆசை நிறைவேறுமா
தன்னை வெறுக்கும் அப்பா எப்படியாவது தன் மீது பாசம் வைக்க மாட்டாரா என்று ஒவ்வொரு நாளும் தவித்துக்கொண்டிருக்கும் மீராவை ரசிகர்கள் அனைவரும் பாவம் என்று உச்சுக் கொட்டி வருகின்றனர். ஒவ்வொருமுறையும் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க இவர்களின் குடும்பம் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் கௌதம் ஆக நடிக்கும் பப்புலு மீராவை வெறுத்துக் கொண்டே இருக்கிறார். மீராவாக நடிக்கும் நிமிஷிகாவிற்கு இளைஞர்கள் ரசிகர் பட்டாளம் அதிகமாகவே இருந்து வருகிறது. இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அடிக்கடி போட்டோஷூட் போட்டோக்களையும் வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவார். அவரை பின் தொடர்ந்து கொண்டிருக்கும் ரசிகர்கள் அவருக்கு கமெண்டுகளை மறக்காமல் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.

பதறி விட்டாரே மீரா
சீரியலில் மட்டும்தான் இவர்கள் இந்த மாதிரி பவ்யமாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தற்போது ரசிகர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் செய்யும் சேட்டைகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அந்த மாதிரி தான் பப்லு தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில் நிமிஷிகா மேக்கப் போட்டுக் கொண்டிருக்கும்போது இவர் பின்னாடியே சென்று பாம்பு போன்று ஊர்ந்து அவருடைய காலை பிடித்திருக்கிறார். அதை சற்றும் எதிர்பார்க்காத நிமிஷா கத்தி ஆர்ப்பாட்டம் போட்டு அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். அவர் பயந்து ஒரு நிமிடம் இதயமே நின்று போனது போல தவித்துக் கொண்டிருக்கிறார் ஆனால் அதனை பார்த்து பலருக்கும் சிரிப்புதான் வருகிறது. ஆனால் அவருடைய ரசிகர்கள் இந்த வயசுல பண்ணுற சேட்டையா என்று பப்லுவை திட்டி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications