புஸ்ஸி ஆனந்த் பவர் கரைகிறது? எஸ்ஏசி இறக்கிய 6 புள்ளிகள் இவங்கதானா? தவெக அடுத்த மாஸ்டர் பிளான் பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சில மாதங்களுக்கு முன் கட்டிய புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்திருந்தார்.. அந்த புது வீட்டின் வீடியோ சோஷியல் மீடியாவில் சமீபத்தில் வெளியானது.. இதில், விஜய், அவரது மனைவி, மகன், மகள் கலந்து கொள்ளவில்லை என்பதும் தெரியவந்தது. இப்போது எஸ்ஏசி, தவெக தலைவர் விஜய்யிடம் நெருங்கியிருக்கிறார்.. இதுகுறித்து பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ், "விஜய் தன்னை சுற்றியிருந்த எல்லாரையுமே நம்பினார்.. அதற்காகவே பலருக்கும் பொறுப்புகளை தந்தார்.. புஸ்ஸி ஆனந்த் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே, எஸ்ஏ சந்திரசேகரும், அவருடைய ஆட்களும் ஓரம் கட்டப்பட்டிருந்தார்கள்..

Bussy Anand SAC TVK

கரூர் சம்பவம் நடந்த பிறகு, பொறுப்புகளை ஒப்படைத்தவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அனைவருமே பார்த்தோம்..

தவெக விஜய் - தவறுகள்

அந்தவகையில் தன்னுடைய தவறுகளை இந்த ஒரு மாத காலமாகவே விஜய் ரொம்பவே சிந்தித்து பார்த்துள்ளார்.. இதுவரை ஒதுக்கி வைத்திருந்த எஸ்ஏசி இப்போது விஜய்யிடம் வந்துள்ளார்.. அந்தவகையில், 28 நபர்களில் எஸ்ஏசியின் 6 நபர்கள் விஜய்யிடம் தற்போது இருக்கிறார்கள். அதுக்காக தந்தை, மகன் பேசிகொண்டேயிருக்க மாட்டார்கள்..

தான் நினைப்பதை, தன்னுடைய 6 நபர்களிடம் எஸ்ஏசி சொன்னால், அந்த 6 பேரும் அந்த தகவலை விஜய்யிடம் தெரிவிப்பார்கள். உடனே விஜய், மற்ற 22 பேரிடமும் இந்த விஷயத்தை கலந்து ஆலோசிப்பார்.. அந்தவகையில், 28 பேரும்தான் ஒரு முடிவை சேர்ந்து எடுக்கிறார்கள். அந்தவகையில் விஜய்யின் நேரடி மேற்பார்வையில்தான் இனிமேல் அனைத்துமே நடக்க போகிறது.

எஸ்ஏசியின் மூளை

விஜய் அவர்களுடைய ஆணைக்கிணங்க, புஸ்ஸி ஆனந்தின் வழிகாட்டுதல்படி என்றுதான் இதுவரை அறிக்கைகள் வெளியாகி கொண்டிருந்தன.. இப்போது விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் என்று அறிக்கைகள் வர துவங்கியிருக்கின்றன. கரூருக்கு பிறகு விஜய்யிடம் இந்த மாற்றம் தென்பட்டுள்ளது.. இதற்கு எஸ்ஏசியின் மூளையே காரணம்..

ஒரு சினிமா ஸ்டாராக வரவேண்டும் என்று நினைத்ததும் எஸ்ஏசிதான், அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்ததும் எஸ்ஏசிதான்.. எனவே விஜய்க்கு அரசியல் உந்துதலை தந்ததே எஸ்ஏசிதான்..

இப்போது கரூர் சம்பவத்துக்கு பிறகு தன்னுடைய நிர்வாகிகள் மீது விஜய்க்கான உடன்பாடு குறைந்துவிட்டது.. பொறுப்புகளை தந்தும் அதை அவர்கள் சரியாக செய்யவில்லை என்பதும் விஜய்யை கவனிக்க வைத்துள்ளது.

ஆலோசகராக மாறிய அப்பா

அதுமட்டுமல்லாமல், அப்பாவை ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்? என்று பல தரப்பிலிருந்தும் கேட்டதும் விஜய்யை யோசிக்க வைத்தது. எனவேதான், அப்பாவின் ஆலோசனையை விஜய் தற்போது ஏற்றுக்கொள்கிறார்.. விஜய்யின் ஆலோசகராகவும் எஸ்ஏசி மாறி வருகிறார்.

இனி மக்களை எப்படி சந்திக்கலாம்? எங்கே சந்திக்கலாம்? என்ற ஆலோசனை தவெகவில் நடக்கிறது.. கண்டிப்பாக ரோடு ஷோ கிடையாது.. பிரச்சாரமும் கிடையாது.. ஆனால், காவல்துறை, தமிழக அரசின் அனுமதியுடன் மக்களை சந்திப்பதும் என்றும், மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும், சேதாரமுமின்றி எப்படி சந்திக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

நவம்பர் 5ம் தேதி பொதுக்குழு நடத்த உள்ளதால், அது முடிந்ததுமே இந்த மாத இறுதியில் தன்னுடைய பயணத்தை துவங்கலாம். ஆனால் கரூருக்கு சென்றுவிட்டுதான், பிறகு அடுத்த ஊருக்கு போகப்போவதாக தகவல் உள்ளது.

புஸ்ஸி பவர் குறைகிறதா?

அதேபோல எஸ்ஏசி உள்ளே வந்திருப்பதால் புஸ்ஸி ஆனந்த்துக்கு மவுசு குறைந்துவிடும் என்று நினைக்கிறார்கள்.. இது அவர்களாகவே உருவாக்கி கொள்வது.

பொதுச்செயலாளர் பதவி என்பது மிகவும் வலிமை நிறைந்தது. அப்படிப்பட்ட வானளாவிய பதவியை புஸ்ஸிக்கு தந்துள்ளார் விஜய்.. இந்த பதவியை புஸ்ஸி சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். அப்பா, பிள்ளைக்கு நடுவில் நாம் யார்? என்று நினைக்க வேண்டும்.

விஜய் நினைத்திருந்தால் இப்போதுகூட பொதுச்செயலாளராக புஸ்ஸியை நீக்கிவிட்டு எஸ்ஏசியை நியமித்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லையே.. அதே நிர்வாகிகள்தான் தற்போதும் தொடர்கிறார்கள்.. எஸ்ஏசி மட்டும் உள்ளே வந்திருக்கிறார். இது கட்சிக்கும் நல்லது, நிர்வாகிகளுக்கும் பிளஸ் பாயிண்ட்தான்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+