வைரமுத்து பற்றிய பேச்சு.. கங்கை அமரன் வருந்துவார்.. இதை மட்டும் தவிர்த்து இருக்கலாம்- ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் வைரமுத்துவின் கருத்து மோதல் சில வருடங்களாகவே தொடர்ந்து கொண்டிருந்தாலும் இப்போது இளையராஜா தொடுத்த வழக்கு காரணமாக கருத்து தெரிவித்த வைரமுத்துவிற்கு இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பதிலடி கொடுத்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் இளையராஜாவிற்காக கங்கை அமரன் வைரமுத்துவை நேரடியாக தாக்கி பேசியது குறித்து இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய கருத்தை ஃபிலிமிபீட் தமிழுக்கு அளித்திருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து “நிழல்கள்” திரைப்படத்தில் தொடங்கி பல திரைப்படங்கள் இசையமைப்பாளர் இளையராஜாவோடு சேர்ந்து பணியாற்றி இருந்தார். இவர்கள் இருவருடைய காம்பினேஷனில் வெளியான படங்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் பாடல்கள் இப்போதும் பலரால் ரசிக்கப்படுகிறது. அதிலும் வைரமுத்துவின் முதல் பாடலான “இது ஒரு பொன்மாலை பொழுது” என்ற பாடல் எவர்கிரீன் பாடலாகத்தான் இருந்து வருகிறது. ஆனாலும் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு அவ்வப்போது கிடைக்கும் கேப்பில் எல்லாம் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டு இருப்பது வாடிக்கையாகத்தான் இருக்கிறது. அந்த மாதிரி தான் சமீபத்தில் கூட இசையமைப்பாளர் இளையராஜா இசையை உருவாக்கியவருக்கு தான் பாடல் சொந்தம் என்று வழக்கு தொடுத்து இருந்த நிலையில், இது பற்றி வைரமுத்து படிக்காத பக்கங்கள் என்ற நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போது இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
“அந்த” பாட்டு ஹிட் ஆக காரணம் வரிகளா? இசையா?.. இளையராஜா பஞ்சாயத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் கேள்வி
அதைத்தொடர்ந்து வைரமுத்து பேசிய அடுத்த நாளே கங்கை அமரன் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் இளையராஜாவுக்கு ஆதரவாக வைரமுத்துவை கண்டித்து அதில் பேசியிருந்தார். வைரமுத்து இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணமே நாங்க போட்ட பிச்சை தான். நாங்கள் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர் ஒரு ஆளாகவே ஆகி இருக்க மாட்டார். இளையராஜா தனது இசையை கொடுக்க, அதில் வந்து அமர்ந்து கொண்டு அந்த நிலம் உருவானது என்னால்தான் என்று மடத்தனமாக கூறுகிறார் என்று வைரமுத்துவை குறிப்பிட்டு திட்டி இருந்தார். இது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவிக்கையில் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை தனி மனித பிரச்சனை தான். இதில் இசை பெரிதா? வரிகள் பெரிதா? என்று விவாதிப்பது அபத்தமானது.
அதே நேரத்தில் கங்கை அமரன் இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சித்து இருக்க வேண்டாம். அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மரியாதை இருக்கு. எப்போதும் ஜாலியாக கிண்டல் செய்துதான் எல்லோரிடமும் பேசுவார். எனக்கு கூட பர்சனலாக கங்கை அமரன் நிறைய உதவிகளை செய்திருக்கிறார். நான் கஷ்டப்பட்ட நேரத்தில் எனக்கு ஒரு ஆல்பம் பாடலுக்கு பணமே வாங்காமல் நான்கு ஐந்து நாட்கள் முழுமையாக இருந்து பாடல் எழுதி தந்தார். அதை எல்லாம் நான் மறுக்கவில்லை. ஆனால் இத்தனை நாட்களாக இவர் பெற்றிருந்த நல்ல பெயரை இப்போது வைரமுத்து குறித்து பேசி இழந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக வரும் கருத்துகளை பார்த்தால் கங்கை அமரன் வருந்துவார். ஆரம்பத்தில் கங்கை அமரனே தன்னுடைய அண்ணன் இளையராஜாவை விமர்சித்து பேசி இருக்கிறார். ஆனால் இப்போது வைரமுத்துவிற்காக கங்கை அமரன் இவ்வளவு கோபமாக பேசியிருக்க வேண்டாம்.
காசு இல்லாமல் வறுமையிலா இருக்கிறார்.. போட்ட மியூசிக்கிற்கு உரிமை கேட்ட இளையராஜா மீது பிரபலம் தாக்கு
காரணம் நாம் கஷ்டப்பட்டு ஒரு இடத்திற்கு வந்து விட்டோம். அதை பலர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்மை ரோல் மாடலாக நினைப்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் முன்பு நாம் இப்படி ஒருவரை விமர்சிப்பது சரியாக இருக்காது. அதிலும் இளையராஜா போட்ட மியூசிக்கில் வைரமுத்து எழுதிய பாடல்களுக்கு வேறு ஒருவரை வைத்து மியூசிக் போட்டு அந்த பாடலை வைரமுத்துவால் வெற்றி அடைய செய்ய முடியுமா? என்று கங்கை அமரன் சேலஞ்சு விட்டிருக்கிறார். அது எப்படி செய்ய முடியும்? ஒரு பாடலை இப்படித்தான் என்று மக்கள் மனதில் பதிய வைத்து விட்ட பிறகு வேறு எந்த இசையமைப்பாளரை வைத்து மியூசிக் போட்டாலும் அது மக்களுக்கு பிடிக்காது. இது கங்கை அமரனுக்கு தெரியாமலா போய்விட்டது? என்று ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications