ஆரம்பத்திலே ஜாதக பொருத்தம் சரி இல்லை.. வாழ்க்கை இப்ப ரொம்ப மாறிடிச்சி..மனம் திறந்த கன்னிகா
சென்னை: கன்னிகா ரவி தான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் தன்னுடைய வாழ்க்கை இப்போது இருக்கும் நிலைமையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே பல பிரச்சனைகளை தாண்டி நடந்த திருமணத்தால் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை கன்னிகா ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார்.

மனைவியால் தெரிந்த இன்னொரு முகம்
திரைத்துறையின் பிரபலமான தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கன்னிகா ரவி மற்றும் சினேகன் ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். கவிஞர் சினேகன் என்று சொன்னால் பலருக்கும் தெரிந்திருந்தாலும் பெயரையும் புகழையும் ரசிகர்களின் மத்தியில் அவருடைய முகத்திற்கு அடையாளத்தைக் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். சினேகன் எழுதிய பல பாடல்கள் ஹிட்டாகி ரசிகர்கள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் அந்த பாடல் இவர்தான் எழுதியது என்று கூட பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் சினேகனின் மனைவியான கன்னிகா பலருக்கும் தன்னுடைய கணவரின் படைப்புகளை பற்றி தெரியப் படுத்தி வருகிறார்.

ஜாதகமும் செட்டாகவில்லையாமே
ஒரு ஆணின் வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பது போல, ஒரு பெண்ணின் வளர்ச்சிக்குப் பின்னால் ஆண் இருந்தால் அந்த வாழ்க்கை சொர்க்கம் தான் என்று சொல்வார்கள். அந்த மாதிரி தான் தற்போது கன்னிகா மற்றும் சினேகன் தம்பதியினர் இருந்து வருகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே இவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு பல்வேறு பிரச்சனைகளும் இடைஞ்சல்களும் வந்து கொண்டிருந்ததாம். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவர்களின் வீட்டிலும் முதலில் சம்மதிக்காமல் தான் இருந்து வந்துள்ளனர். அதுபோல இவர்களுடைய ஜாதக பொருத்தம் கொஞ்சம்கூட செட்டாகவில்லையாம்.

இதுகூட தெரியவில்லையாம்
ஜாதகத்தின் மீது இவர்களுக்கு நம்பிக்கை அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் இவர்கள் ஜாதகம் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் அதில் இவர்கள் இருவருக்கும் பொருத்தம் இல்லாததால் ஆரம்பத்தில் கன்னிகா ரொம்பவே அழுது இருக்கிறாராம். ஆனால் அது தான் இவர்கள் இருவருக்குள்ளும் மேலும் அதிகமான காதலை ஏற்படுத்தியதாம். ஜாதகத்தை எப்படியாவது பொய்யாக்க வேண்டும் என்று இவர்கள் இருவரும் விட்டுக் கொடுத்தும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் வாழ்க்கையை தொடங்கி வருகிறார்கள். ஆரம்ப காலகட்டத்தில் கிராமத்தில் இருந்து வந்ததால் பலரிடமும் எப்படி பேசவேண்டும் என்று கூட தெரியாமல் தான் கன்னிகா இருந்து வந்துள்ளாராம்.
Recommended Video

நம்பிக்கை அதிகம் தான்
தற்போதைய சூழலில் கன்னிகா மற்றும் சினேகன் இருவருடைய வாழ்க்கையும் அதிகமாக மாறி விட்டதாம். சினேகன் பழையபடி பல பாடல்களை எழுதத் தொடங்கியிருக்கிறார். அப்படி அவர் எழுதும் திரைப்படங்களில் கன்னிகாக்காக வாய்ப்புகளையும் கேட்டு வருகிறாராம். அந்த மாதிரிதான் தற்போது கூட கன்னிகா ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அதற்கு காரணம் என்னுடைய கணவர் சினேகன் தான் என்று உருக்கமாக அவருக்கு நன்றி கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னைப் பற்றியும் இந்தத் துறையைப் பற்றியும் நன்று தெரிந்ததால் அவர் நல்ல ஒரு முடிவைத்தான் எடுப்பார் என்று கன்னிகா நம்பிக்கொண்டு இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications