Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல் செய்கையால் அழுதிருக்கிறேன்..பலமுறை கமல் மீது பொறாமை ஏற்பட்டிருக்கிறது.. மனம்திறந்த கன்னிகா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகிய கமலஹாசனை பற்றி கன்னிகா மனம் திறந்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சினேகன் மனைவி கன்னிகா தங்களுடைய திருமண வாழ்க்கையில் கமல் மீது பொறாமை பட்டிருப்பதாக உண்மையை உடைத்திருக்கிறார்.

கமலின் திடீர் முடிவால் ஏற்பட்ட கவலை

கமலின் திடீர் முடிவால் ஏற்பட்ட கவலை

சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட திரைப்பிரபலங்களான கன்னிகா மற்றும் சினேகன் ஜோடிக்கு திருமணத்தை செய்து வைத்த கமல்ஹாசனை பற்றி கன்னிகா மனம் திறந்து பேசியிருக்கிறார். கமலுடைய திடீர் முடிவுனால் தனக்கு ஏற்பட்ட மன நலன் குறித்து கன்னிகா பேசியதும், ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். தற்போது சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கியிருக்கும் கன்னிகா ரவி தன்னுடைய கணவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசனை நினைத்து ஃபீல் பண்ணியதை பார்க்கும்போது தனக்கும் பீலிங்காக தான் இருந்து உள்ளதாம். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவருக்கும் கமல் மீது வைத்திருக்கும் பாசத்தை பற்றியும் கூறியிருக்கிறார்.

செல்ல சண்டை

செல்ல சண்டை

பாடலாசிரியராக பலருக்கும் பரிச்சயமான சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய தனித்துவமான குணத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார். அவர் நடிகை கன்னிகா ரவியை காதலித்து கமல் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். கமல் மீது ஏற்கனவே தனி பாசத்தில் இருந்த சினேகன் கமலின் மக்கள் நீதி மையத்தில் பதவியிலும் இருந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே கமலுக்கும் சினேகனுக்கும் நெருக்கமான பாசம் இருந்து இருக்கிறதாம். யாரிடமும் இல்லாத பாசம் சினேகனுக்கு கமல் மீது தான் அதிகமாக இருக்கிறதாம். அதனை பார்த்து பல நேரங்களில் கன்னிகா பொறாமைப்பட்டு இருக்கிறாராம். தன்னை விடவும் சினேகனுக்கு கமலை தான் பிடிக்கும் என்று செல்ல சண்டையும் போட்டிருக்கிறாராம்.

எதிர்பார்க்காத முடிவு

எதிர்பார்க்காத முடிவு

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு கமல் வெளியேறி திரைப்படங்களில் கவனம் செலுத்த போகிறேன் என்று கூறியதும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சினேகன் அதிகமாக பீல் பண்ணி இருந்தார். கமலோடு மேலும் நெருக்கம் ஆவதற்கு தான் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தேன் என்று கூறியிருந்தார். அதைப் பார்த்த கன்னிகா தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார். கமலின் திடீர் முடிவு தனக்கு அழுகை வர வைத்து விட்டது. எங்களுடைய பேமிலி உறுப்பினர் போல இருக்கும் கமல் இப்படி ஒரு முடிவு எடுத்ததும் எங்களுக்கு வேதனையாகத்தான் இருந்தது. பல நேரங்களில் அவர் மீது தனக்கு பொறாமை இருந்திருந்தாலும் கமல் இந்த ஒரு முடிவை எடுத்தது எதிர்பார்க்காதது தான் என்று கூறியிருக்கிறார்.

இதுதான் பாசம்

இதுதான் பாசம்

கன்னிகா மேலும் சில விஷயங்களையும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதில் சினேகன் யாருடனும் போட்டோ எடுக்கும் போதும் தைரியமாக தனி ஸ்டைலோடு இருப்பாராம். ஆனால் கமலோடு இருக்கும்போது மட்டும் சினேகன் தன்னையும் அறியாமல் சினேகனுக்கு ஒரு பதட்டம் வந்துவிடுகிறது. அதை நான் பலமுறை நோட் பண்ணி இருக்கிறேன். எப்போதுமே கமல் எங்களுக்கு ஸ்பெஷல் தான் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் என்னதான் சினேகன் சோகமாக இருந்தாலும் கமலிடம் இருந்து ஒரு போன் வந்தாலே ரொம்பவும் ஆக்டிவாக மாறி விடுவார் என்ற உண்மையும் உடைத்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+