அகரம்க்கு செலவு செய்ய காசு தேவைப்பட்டபோது அண்ணி இதைத்தான் சொல்லுவாங்க! ஜோதிகா பற்றி கார்த்தி நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் (Agram Foundation) 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் கல்வித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சமீபத்தில் நடந்த அகரம் விழாவில், நடிகர் கார்த்தி தனது அண்ணி ஜோதிகா அகரம் பவுண்டேஷனுக்காகச் செய்த தியாகங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். சமீபகாலமாக ஜோதிகா பற்றிப் பல சர்ச்சைகள் பரவி வரும் நிலையில், கார்த்தியின் இந்தப் பேச்சு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, வைரலாகி வருகிறது.

ஜோதிகா - அகரம் பவுண்டேஷனின் தூண்
அகரம் பவுண்டேஷன் தொடங்கப்பட்டபோது, கல்விப் பணிகளுக்காக நிறைய நிதி தேவைப்பட்டது. அது குறித்துப் பேசிய கார்த்தி, "பசங்க படிக்க நிறைய காசு தேவைப்படும்போது அண்ணன் (சூர்யா) நிறைய காசு தேவைப்படுது என்ன பண்ண என்று சொல்லுவாங்க. அப்போ அண்ணி (ஜோதிகா) சொல்லுவாங்க, 'நாம காசை வச்சு தொடங்கினோமா? பசங்க படிக்கட்டும் தானா வரும்'னு சொல்லுவாங்க. அண்ணி இப்படி சொல்லலைன்னா அண்ணன் எப்படி தொடர்ந்து ஓட முடியும்?" என்று கூறினார்.
கோவிட் பெருந்தொற்று காலத்தில், பல மருத்துவமனைகளுக்குத் தேவையான சில உபகரணங்கள் கிடைக்காதபோது, அகரம் மூலம் கார்த்திக்கு அது தெரியவந்தது. அப்போது, "அண்ணி நான் பண்றேன்னு சொன்னாங்க. இதுக்கும் கல்விக்கும் சம்பந்தம் இல்ல. ஆனா ஹாஸ்பிடலில் ஒரு தேவை இருக்குன்னு அகரம் மூலமாகத்தான் நமக்கு தெரியுது," என்று கார்த்தி கூறினார்.
அன்புதான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்
"காசு போனால் போகட்டும் அன்பு கிடைக்கும்னு அண்ணி சொல்லுவாங்க. அதைத்தான் எங்க அப்பாவும் (சிவகுமார்) சொல்லுவாரு," என்று கார்த்தி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார். ரயில்வே ஸ்டேஷனில் சுமை தூக்குபவர்களுக்கு அப்பா நூறு ரூபாய் கொடுத்தபோது, "ஏன்பா இவ்வளவு பணம் கொடுத்தீங்க?" என்று தான் கேட்டதாகவும், அதற்கு அப்பா, "அந்த நூறு ரூபாவை வச்சு அவன் கோட்டையா கட்டப் போறான்? பிள்ளைங்களுக்கு ஏதாவது வாங்கி கொடுப்பான்," என்று சொன்னதாகவும் நினைவு கூர்ந்தார். "அப்படி நாம அன்பு மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, அந்த அன்பு இன்னொரு வழியில் நம்மை வந்து சேரும்," என்று கார்த்தி கூறினார்.
சூர்யா - ஜோதிகாவின் உறுதி
அகரம் பவுண்டேஷன் 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம், கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்க உதவி செய்து வருகிறது. இந்த விழாவில் பேசிய சூர்யா, "அகரம் பவுண்டேஷனில் படிக்கும் மாணவர்கள், எந்த இடத்திலும் தைரியமாக நின்று, தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்," என்று கூறினார்.
அகரம் பவுண்டேஷன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். இவர்களின் பேட்டிகள், "அகரம் எங்கள் வாழ்வில் ஒரு புதிய பாதையைத் திறந்துள்ளது," என்று உருக்கத்துடன் பேசுகின்றனர். நடிகர் கார்த்தி பேசிய இந்த உணர்வுபூர்வமான பேச்சு, ஜோதிகாவின் ஆதரவும் அன்பும் அகரம் பவுண்டேஷனுக்கு எவ்வளவு பெரிய பலம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
-
"வெறுப்புல கருப்பு படம் பார்க்கல!".. பிறகு நடந்த அதிசயம்.. மனம் திறந்த நடிகை ஆனந்தி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications