Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சண்முக பாண்டியனுக்கும், இளையராஜா குடும்பத்திற்கும் இப்படி ஒரு பந்தமா? விஜயகாந்த் ஆசை நிறைவேறியது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்திருக்கும் கொம்பு சீவி படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா குடும்பத்திற்கும் சண்முக பாண்டியனுக்கும் இருக்கும் பந்தம் பற்றிய தகவலும் தெரிய வந்திருக்கிறது. இது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

சண்முக பாண்டியனின் கொம்பு சீவி படத்தில் இசை அமைத்தது யுவன் சங்கர் ராஜா தான். இது பற்றி யுவன் சங்கர் ராஜா நெகழ்ச்சியுடன் பேசி இருந்தார். என்னிடம் இந்த படத்தின் கதையை பற்றி சொல்ல வந்தாங்க அப்போ இந்த படத்தில் ஹீரோ யாரு என்று கேட்டேன், சண்முக பாண்டியன் என்று சொன்னார்கள். உடனே நான் இந்த படத்தில் மியூசிக் போடுறேன் என்று சொல்லிவிட்டேன். அதற்கு காரணம் இந்த படத்தில் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

Shanmuga Pandian Vijayakanth Yuvan Shankar Raja

யுவன் சங்கர் பேட்டி

ஏன் என்றால் விஜயகாந்த் சார் குடும்பத்திற்கும் எங்க குடும்பத்திற்கும் அந்த அளவிற்கு ஒரு பாசமும் கனெக்ட்டும் இருக்கிறது. விஜயகாந்த் சார் கல்யாணம் முடிந்து முதல் முறையாக எங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்தாங்க அப்போ நான் அவங்களை வரவேற்று டான்ஸ் எல்லாம் ஆடுனேன். ரொம்ப குட்டி பையனா இருந்தேன் ஆனாலும் அந்த நினைவுகள் எல்லாம் இப்போதும் இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு பேசி இருந்தார்.

அதை தொடர்ந்து விஜயகாந்தின் மனைவியும் சண்முக பாண்டியனின் அம்மாவான பிரேமலதா பேசும்போது, அவரும் இளையராஜா குடும்பத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் இருக்கும் பாசத்தை பற்றி பேசி இருந்தார். பேசும்போது நான் இளையராஜா குடும்பத்தை பற்றி பல பேட்டிகளில் பேசியிருக்கிறேன் அதைத்தான் இப்போதும் சொல்லப்போகிறேன், எங்களுக்கும் இளையராஜா குடும்பத்திற்கு நீண்ட ஒரு பந்தம் இருக்கிறது.

பிரேமலதா உருக்கம்

எனக்கு இளையராஜாவின் மனைவி ஜீவா மேடம் உடன் அதிக பாசம் உண்டு. எந்த படம் ப்ரீ ஷோ போட்டாலும் நானும் அவங்களும் தான் போவோம். அவங்க சார் இசை அமைத்த படத்திற்கு அவங்க பிரண்ட்ஸ் எல்லாம் கூட்டிட்டு வருவாங்க. அதேபோல நான் விஜயகாந்த் படத்திற்கு என்னுடைய பிரண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிட்டு போவேன். அப்ப கூட யுவன் குழந்தையா இருப்பான். நான் யுவனை குட்டி பையனா இருக்கும்போது இருந்தே பார்த்திருக்கிறேன்.

இன்னைக்கு என்னுடைய ரெண்டு பசங்க கூட யுவன் சங்கர் ராஜாவும் இருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவும் எனக்கும் ஒரு மகன் தான். அந்த அளவிற்கு தான் எங்களுடைய பாசம் இருந்தது என்று சொல்லி இருந்தார். அதுபோல சண்முக பாண்டியனின் அண்ணனான விஜய பிரபாகரன் பேசும்போது, இதுவரைக்கும் இளையராஜா குடும்பத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் இருக்கும் பாசத்தை எல்லாரும் சொன்னாங்க, ஆனா அப்பா ஆசைப்பட்ட ஒரு சம்பவம் சண்முக பாண்டியன் மூலமா இப்போ நிறைவேறி இருக்கிறது.

மூன்று தலைமுறை கூட்டணி

அதாவது சண்முக பாண்டியன் சினிமாவுக்கு வரும்போது அவர் இளையராஜா குடும்பத்திலிருந்து தான் மியூசிக் போடணும் என்று சொன்னாரு. சண்முக பாண்டியன் முதல் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைத்தார். இரண்டாவது படமான படை தலைவனுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்போது கொம்பு சீவி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இதுவே எங்களுக்கு ஒரு பெருமையாக இருக்கிறது. அப்பாவின் ஆசையும் நிறைவேறி இருக்கிறது என்று விஜய பிரபாகரன் மகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+