Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியலில் என்ட்ரியாகும் “வாடாமல்லி காரி” பாடல் நடிகர் அசோக்.. அவருக்கு ஜோடி பிரபல நடிகரின் மகள் தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோழி கூவுது திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் அசோக்குமார் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மௌனம் பேசியதே சீரியலில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரைக்கும் திரைப்படங்களில் நடித்து பெயர் வாங்கிய நடிகர்கள் நடிகைகள் அங்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் சீரியல் நோக்கி அடி எடுத்து வைத்து விடுவார்கள். ஆனால் சமீப காலத்தில் பல சின்னத்திரை நடிகர், நடிகைகளும் சீரியலில் இருந்து சினிமாவை நோக்கி அடி எடுத்து வைத்து அங்கு கலக்கி கொண்டிருக்கிறார்கள் .அதற்கு எடுத்துக்காட்டாக சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், வாணி போஜன், யோகி பாபு என்று பலரை சொல்லலாம்.

zee tamil

ஆனால் தற்போது சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பே நடித்து பிரபலமடைந்த ஒரு நடிகர் இப்போது ஜீ தமிழில் விரைவில் வெளியாக இருக்கும் ஒரு சீரியலில் நடித்து இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் அசோக் குமார் தான். இவருக்கு பிரபலம் கொடுத்தது கோழி கூவுது என்ற திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற வாடாமல்லிக்காரி என் வருங்கால கொலைகாரி என்ற பாடல் பிரபலமானது. இந்த பாடல் கிராம புற ரசிகர்களை பலரையும் கவர்ந்தது.

எனக்கு ஒரு மகன் இருக்கான்.. கஷ்டங்களை தாண்டி வந்துட்டேன்! பாக்யராஜின் மகள் எமோஷனல்

இந்த திரைப்படத்தில் நடித்த அசோக் குமார் தற்போது ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் மௌனம் பேசியதே என்ற சீரியலில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த சீரியல் வித்தியாசமான கதை அம்சம் கொண்டதாக இருக்கிறது. இவருக்கு ஜோடியாக நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் நடிக்கிறார். நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான அருவி சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார்‌. சமீபத்தில் தான் அந்த சீரியல் முடிவடைந்தது.

zee tamil

அதை தொடர்ந்து அவர் ஜீ தமிழில் புது சீரியலில் கமிட் ஆகி இருக்கிறேன் என்று சில போஸ்டர்கள் வெளியிட்டு இருந்தார். இப்போது அந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. கேஜிஎப் திரைப்படத்தில் நிழல்கள் ரவி அந்த திரைப்படத்திற்கான கதையை சொல்லி பில்டப் கொடுப்பது போல இந்த சீரியலுக்கான கதையும் மிரட்டலான வசனங்களோடு சொல்லப்படுகிறது. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா அதில் ஒருவர் நல்லவர், ஒருவர் கெட்டவர்.

தொடரும் கனமழை.. பிக்பாஸ் வீட்டின் நிலைமை? நிகழ்ச்சி தொடருமா? இல்லையா? இப்படி ஒரு மாற்று ஏற்பாடா?

zee tamil

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது பின்பு ஒரு விபத்தில் ராஜாக்களின் மனைவிகள் மாறி விடுகிறார்கள் என்பது போன்று கதை சொல்லப்படுகிறது. இந்த வித்தியாசமான ப்ரோமோ இணையத்தில் பலருடைய கருத்தை பெற்று இருக்கிறது. ஆனால் இது ஹிந்தி பட ரீமேக் போல இருக்கிறது என்று விமர்சனங்களும் சந்தித்து வருகிறது.

zee tamil

சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர் அசோக் குமார் சீரியலில் என்ட்ரி ஆகி இருக்கும் நிலையில் இவருக்கு நல்ல பிரபலம் இந்த சீரியல் மூலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரையில் முதல்முறையாக என்ட்ரி ஆகும் அசோக்குமாருக்கு நம்முடைய சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+