நடிப்பை விட்டு விலகிய லட்சுமி ராமகிருஷ்ணன்...காரணம் அந்த நடிகை தானா..!! பிரச்சனை பெருசு தான் போல
சென்னை:நடிகை, இயக்குனர், சமூக ஆர்வலர் என்று பன்முகத்தன்மை கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் இரண்டரை ஆண்டுகளாக தான் எந்த படத்திலும் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அதற்கு காரணம் நடிகை வனிதா தான் என்று பெயரைக் குறிப்பிடாமல் கூறி உள்ளது லட்சுமி ராமகிருஷ்ணன் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
வனிதா உடனான மோதலால் நான் ஏன் சினிமாத்துறைக்கு வந்தேன் என்று வருத்தப்பட்டதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

முதல் பட அனுபவம்
சமீபத்தில் தான் நடிக்க வந்ததை குறித்தும் அதில் தான் பட்ட அனுபவங்களையும், கஷ்டங்களையும் சுவாரசியமாக பகிர்ந்து கொண்டார் லட்சுமி ராமகிருஷ்ணன். தான் முதலில் மலையாள படத்தில் தான் அறிமுகமானதாகவும் திலீப்- காவியா மாதவன் படத்தில் நடித்ததாக கூறியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். தான் நடித்த முதல் படத்தின் முதல் சீனை ஒரே டேக்கிலே ஓகே செய்து விட்டதாக பெருமையாக கூறியுள்ளார். ஆனால் அடுத்த சீனிற்கு 17 டேக் வாங்க வேண்டியதாயிற்று என்று உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

விஜய் சேதுபதி வியந்த பெர்பாமன்ஸ்
தான் நடிக்க வந்தது ஒரு விபத்து போன்றது தான் என்று கூறியுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழில் தன்னுடைய முதல் படம் பிரிவோம் சந்திப்போம் என்றும் அந்தப் படத்தில் சூட்டிங் பொழுது கேமராமேனிடம் திட்டு வாங்கி பயங்கரமாக அழுததாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு ஆங்கிள் பார்த்து பிராப்பராக நடிக்க தெரியாது என்றும் கேரக்டரையம் கதையையும் கூறினால் அந்த கேரக்டராகவே மாறி நடித்து விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். நான் மகான் அல்ல படத்தின் படப்பிடிப்பின் போது கூட விஜய் சேதுபதி தன்னுடைய நடிப்பை பார்த்து வியந்து பாராட்டியதாகவும் கூறியுள்ளார்.

வனிதா பீட்டர் பால் திருமணம்
பிரபல இயக்குனர்கள் மற்றும் முன்னணி ஹீரோக்கள் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனக்கு வந்த பட வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்து விட்டதாகவும் அதற்குக் காரணம் ஒரு நடிகை தான் என்றும் கூறியுள்ளார்.பிரபல நடிகை வனிதா-பீட்டர் பால் திருமணத்தின்போது அந்த திருமணத்தை குறித்து நெகட்டிவ் கருத்துகளை கூறியவர்களை எல்லாம் வனிதா பதிலுக்கு சமூக வலைதளங்களில் வசைபாடி வந்தார்.

நடிப்பை தவிர்ப்பதன் காரணம்
அந்த நேரத்தில் பீட்டர் பால் குடும்பத்திற்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதனால் கோபம் அடைந்த வனிதா,லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு தனியார் யூடியூப் சேனலில் பேட்டியில் இருக்கும் பொழுது லைவில் வந்து லட்சுமி ராமகிருஷ்ணனின் மரியாதை குறைவாக பேசி லட்சுமி ராமகிருஷ்ணனையும் வசைபாடிவிட்டார். அந்த சம்பவத்தை இப்பொழுது நினைத்தாலும் அருவருப்பாக இருப்பதாகவும், இதனால் ஏன்டா நடிக்க வந்தோம் என்று தான் ஃபீல் பண்ணுவதாகவும் கூறியுள்ளார். அதனால்தான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றும் வந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications