பகத்சிங் பார்த்தாலும் பதறி இருப்பார்...மதுரைக்காரங்க பார்த்த வேலைக்கு!!
மதுரை : மதுரையில் வலம் வரும் போஸ்டரை பார்த்து அஜித் ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.
இப்பவே இப்படியா என்று சொல்கின்ற மாதிரி போஸ்டர்களில் போட்டோக்கள் வேற லெவல் மிரட்டி வருகிறது.
பகத்சிங் கெட்டப்பில் அஜித்தை மாற்றி இருக்கும் ரசிகர்களின் திறமையை பார்த்து பலர் வாயடைத்துப் போய் இருக்கிறார்களாம்.

அஜித் ரசிகர்கள் செய்த வேலை
இவங்க எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல...!! என்றுதான் சொல்லத் தோன்றுகிறது,நம்ம மதுரை அஜித் ரசிகர்கள் செய்திருக்கிற வேலையப் பாத்தா.!! இந்த மாதிரி ரசிகர்கள் எல்லாம் உட்காந்து யோசிப்பாங்களா..!? இல்லை யோசிச்சுகிட்டே உட்காருவாங்களா..!? தான் தெரியல ஆனா இந்த மாதிரியும் பண்றதுக்கு தனித்திறமை தான் வேணும்..!!

மதுரையில் வலம்வரும் வால்போஸ்டர்
மதுரை முக்கிய வீதிகளில் உள்ள கட்டிடங்களுக்கு பெரும்பாலும் பெயிண்டிங் செலவு கம்மியா தான் இருக்கும்போல..! ஏன்னா நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வண்ணமயமான வால் போஸ்டர்கள் பல முக்கிய வீதி முழுவதிலுமுள்ள கட்டிட சுவர்களை ஆக்கிரமித்து தவறாது இடம் பிடித்துவிடுகிறது.இதுல மதுரைக்காரங்க மேட்டர் டிசைன் பண்ணும்போது வால் போஸ்டரா..? பிளக்ஸ் ஃபோடானு..? முடிவு பண்ணாம தான் டிசைன் பண்ண ஆரம்பிப்பாங்க போல, டிசைன் ஒர்க் முடிச்சப்புறம் தான் டிசைடு பண்ணுவாங்க போல..! என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது, ஏன்னா.. ப்ளக்ஸ்க்கும் வால்போஸ்டருக்கும் வித்தியாசமே இல்லாமல்...எல்லாமே பிரமாண்டமா தான் இருக்கு.

மாஸ் காட்டிய ரசிகர்கள்
ஓடி..ஓடி.. பொது வேலை, சமூக சேவை என்று உழைப்பவர்களை விட உட்கார்ந்த இடத்தில்..வித்தியாசமான யோசனையுடன் கூடிய வால் போஸ்டர் டிசைன் செய்து அதை மதுரை முக்கிய வீதிகளில் ஒட்டி உலக பிரபலம் ஆகி கவுன்சிலர், தொடங்கி எம்.எல்.ஏ,எம்.பி ரேஞ்சுக்கு சர்...சர்....ரென்று முன்னேறி விடுகிறார்கள் பல அரசியல்வாதிகள். நாங்கள் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று அவ்வப்போது சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களும் காட்டி வருகின்றனர். அப்படி தான் தற்பொழுது மதுரையில் அஜித் ரசிகர்கள் வால்போஸ்டர் மூலம் மாஸ் காட்டியுள்ளனர்.

குழப்பமடைய வைத்த வால்போஸ்டர்
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் ஷூட்டிங்கில் இருக்கும் போதே வெளிவரும் பஸ்ட் லுக், மற்றும் படக்குழுவினர் அவ்வப்போது வெளியிடும் படம் குறித்த அப்டேட் போட்டோக்கள் தொடங்கி.. அவ்வப்போது சூட்டிங் ஸ்பாட்டில் லீக் ஆகும் படங்கள் வரை சுடச்சுட வீதிகளில் விளம்பரம் செய்யும் வித்தை காரர்களான மதுரையன்ஸ்.. அந்த உச்ச நட்சத்திரங்களின் படம் ரிலீசாக போகிறது என்றால் சும்மா விடுவார்களா..!? வருகின்ற புத்தாண்டுக்காக வலிமை படத்தை வரவேற்று அஜித் ரசிகர்கள் அடித்துள்ள வால்போஸ்டரை பார்த்த உடன் ஒரு நிமிடம் குழப்பம் ஏற்பட்டாலும்.. உற்றுப் பார்த்து அட.. இவரா..!?என்று தெளிவான பின்பு சற்று புன்னகையுடன் கடந்து செல்லும்படி உள்ளது...
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications