Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிஜமாவே நம்ம மக்கள், பிக் பாஸ் 3 சீசன் பார்க்குறாங்களா, இல்லையா? இதோ ஒரு ஜாலி சர்வே

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Bigg Boss 3 Tamil : Highlights: மது தன்னை தமிழ் பெண் என்று அடையாளம் காண்பது சரியா?- வீடியோ

    சென்னை: இதோ மறுபடியும் பிக்பாஸ் சீசன் ஆரம்பித்துள்ளது. இது சீசன் 3. கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால், இயல்பாகவே இந்த ஷோ மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதை போலவே, துவக்க உரையின்போதே, அரசியல் மசாலாவை தூவி, காரத்தை தூக்கலாக்கியுள்ளார் உலக நாயகன்.

    ராத்திரி 9 மணியாகிவிட்டால் போதும், டிவிட்டரில், பிக்பாஸ் பற்றிய தகவல்களை நெட்டிசன்களை லைவாக ஷேர் செய்து வருகிறார்கள். ஆளாளுக்கு ஆர்மி ஆரம்பித்து, சோஷியல் மீடியாவில் முட்டுக் கொடுத்து வருகிறார்கள்.

    ஆனால், வெகு ஜனம். அவர்கள் மனநிலைதானே, எந்த ஒரு நிகழ்ச்சியின் வெற்றி தோல்விக்கும் முக்கியம். எனவேதான், மக்கள் கருத்தை அறிய நமது 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளத்தில், ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினோம்.

    நான்கு ஆப்ஷன்கள்

    நான்கு ஆப்ஷன்கள்

    பிக்பாஸ் 3 பார்க்கிறீர்களா? என்று ஒரு கேள்வியை கேட்டு, அதற்கு நாலு ஆப்ஷனும் கொடுத்தோம்ங்க. நமது வாசகர்கள், வாக்குகளை அள்ளித் தெளித்துவிட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். கலவையாக கருத்துக்களை அவர்கள் பதிவு செய்துள்ளதை கிடைத்த ஓட்டுக்களை வைத்து பார்க்க முடிந்தது.

    பார்க்கிறார்கள்

    பார்க்கிறார்கள்

    ஆமாங்க என்ற ஆப்ஷனுக்கு 20.22 சதவீதம் வாசகர்கள் வாக்குகளை அளித்துள்ளனர். ஆக நமது வாசகர்களிலேயே சுமார் கால்வாசி பேர், பிக்பாஸ் ரசிகர்கள்தான் என்பது உறுதியாகிவிட்டது. இப்போதுதானே, முதல் வாரம் முடிஞ்சிருக்கு. இன்னும் சூடு பறக்க பறக்க இந்த எண்ணிக்கை கூடும் வாய்ப்புதான் இருக்குமே தவிர குறையாது என்பது அப்போ கன்பார்ம்.

    இல்லைங்க

    இல்லைங்க

    இல்லைங்க என்போர் 33.7 சதவீதம். இவர்கள்தான், இந்த கருத்துக் கணிப்பில் கருத்து தெரிவித்த, 2வது அதிகப்படியான மக்கள். அப்படியானால் பெரும்பான்மையோர் எந்த ஆப்ஷனுக்கு ஓட்டு போட்டனர் என்ற கேள்வி எழுமே. பொறுங்க, அடுத்து அந்த விஷயத்துக்குத்தான் வருகிறோம். முன்னதாக பார்க்கணும் என்று சொல்வோர் 4.69 சதவீதம் பேர் உள்ளனர் என்பதையும் பதிவு செய்துவிடுகிறோம். இதுவரை ஏதோ காரணத்தால் பார்க்க முடியாமல் இருப்போர் இவர்கள் என புரிகிறது.

    பார்க்கவே மாட்டேன்

    பார்க்கவே மாட்டேன்

    இந்த கருத்துக் கணிப்பில் அதிகம் பேர் தேர்ந்தெடுத்த ஆப்ஷன், பிக் பாஸ் 3 பார்க்க மாட்டேன் என்பதுதாங்க. மொத்தம், 41.39 சதவீதம் பேர் இப்படி சொல்லியுள்ளார்கள். என்ன கோவமோ தெரியலை அவர்களுக்கு. இந்த மக்களையும் சேர்த்து திருப்திப்படுத்த வேண்டிய கட்டத்தில் பிக் பாஸ் 3 குழு உள்ளது என்பதை தெரிவித்துக் கொண்டு, இன்னொரு ஜாலியான சர்வேயோடு பின்னர் உங்களை சந்திக்கிறோம். வணக்கம்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+