நாஞ்சில் விஜயன் மனைவி வளைகாப்பில் டான்ஸ் ஆடிய இன்ஸ்டா பிரபலம்.. கலாய்த்த தாமரை.. அதிருப்தியில் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் மனைவியின் வளைகாப்பு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சின்னத்திரை வெள்ளித்திரை பலரும் கலந்து கொண்டனர். இந்த ஃபங்ஷனில் இன்ஸ்டா பிரபலம் "பிளாக்கி ஸ்டார்" என்பவர் டான்ஸ் ஆடி இருக்கிறார். அப்போது பிக் பாஸ் பிரபலமான தாமரை செல்வி அவருடைய டான்ஸை கிண்டல் செய்து சிரித்திருக்கிறார். இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் தாமரை செல்வியை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த நாஞ்சில் விஜயன் கடந்த 2023 ஆம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நாகர்கோவிலை சொந்த ஊராகக் கொண்ட நாஞ்சில் விஜயன் தன்னுடைய சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த பிறகு 33 வயதில்தான் திருமணம் முடிவடைந்தது.

வயது வித்தியாசம்
அவருடைய மனைவிக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும் ஆரம்பத்தில் இது தெரியாமல் தான் நண்பர்கள் மூலமாக திருமணம் நடந்து விட்டது என்று அவருடைய மனைவி பேட்டிகளில் பேசியிருக்கிறார். அதுபோல திருமணத்திற்கு பிறகு நாஞ்சில் விஜயன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டனர்.
மகிழ்ச்சி செய்தி
இந்த நிகழ்ச்சி முடிவடைந்த சில மாதங்களிலேயே இவர்கள் இருவரும் அப்பா அம்மா ஆகப் போகும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தனர். அதுபோல கர்ப்பமாக இருக்கும் மனைவியோடு அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை எடுத்து நாஞ்சில் விஜயன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய மனைவியின் ஆசைக்காக இன்று பிரம்மாண்டமாக வளைகாப்பு பங்க்ஷன் நடத்தி இருக்கிறார்.

சொந்த ஊர் நாகர்கோவில்
இந்த பங்க்ஷனில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதுபோல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு இந்த தம்பதியை வாழ்த்தி இருக்கிறார்கள் இதில் இன்ஸ்டா பிரபலமான பிளாக்கி ஸ்டார் கலந்து கொண்டு இருக்கிறார். நாஞ்சில் விஜயனின் ஊரான நாகர்கோவிலை சேர்ந்த பிளாக்கி ஸ்டார் இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு "ஜூன் ஜூலை மாதத்தில்" என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்.
பிக் பாஸ் தாமரைச்செல்வி
அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த தாமரை செல்வி பிளாக்கி ஸ்டாரின் டான்ஸை கிண்டல் செய்து சிரித்து இருக்கிறார். தன்னால் பிளக்கி ஸ்டார் போல டான்ஸ் ஆட முடியவில்லை என்று இவர் பின் பக்கத்தில் நின்று சைகை காட்ட அதை பார்த்ததும் பிளாக்கி ஸ்டாரின் ரசிகர்கள் தாமரை செல்வியை திட்டி இருக்கிறார்கள். அதோடு தாமரை செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு மேடை நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடி பிரபலமானவர் தான்.
இன்ஸ்டா பிரபலம் டான்ஸ்
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கியதும் இதுபோன்று அடுத்தவர்களை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளலாமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதோடு இந்த பங்க்ஷனில் தாமரை செல்வியோடு சேர்ந்து நாஞ்சில் விஜயனின் மனைவியும் பிளக்கி ஸ்டார் டான்ஸை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார். அதனால் இதுபோன்ற பங்க்ஷனில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிளாக்கி ஸ்டாரின் ரசிகர் ஒருவர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
இன்ஸ்டா பிளாக்கி ஸ்டார்
அதற்கு பிளாக்கி ஸ்டார் நீங்கள் நாஞ்சில் விஜயன் மற்றும் அவருடைய மனைவியை திட்டாதீங்க அவங்க ரொம்ப நல்லவங்க என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே பிளாக்கி ஸ்டார் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமானவர் தான். அதிகமாக லேடி கெட்டப் போட்டு கொண்டு இவர் டான்ஸ் ஆடுவது அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனாலும் அதையெல்லாம் அவர் கண்டு கொள்வதே கிடையாது.

சோசியல் மீடியா பிரபலம்
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி, ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல ஆசிரியரான இவர் சோசியல் மீடியாவில் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தும் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட ஒரு கல்லூரியில் விழா ஒன்றில் பிளாக்கி ஸ்டார் கலந்து கொண்டது அதிகமான விமர்சனங்களை சந்தித்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications