நீயா நானா நிகழ்ச்சி சூப்பர் அப்பாவின் வாழ்க்கையில் இத்தனை சோகங்களா?? இதனால் தான் அப்படி சொன்னாராம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சூப்பர் அப்பா பட்டத்தை பெற்ற சீனி ராஜா தான் அடைந்து கொண்டிருக்கும் வேதனைகளைப் பற்றி கூறியிருக்கிறார்.
படிக்காததால் தான் பட்ட அவமானங்களை பற்றி வெளிப்படையாக சீனி ராஜா கூறியிருக்கிறார்.
தயங்கி தயங்கி பேசிய சீனி ராஜா மனதில் இருக்கும் சோகங்களை முதல் முறையாக வெளிக்காட்டி இருக்கிறார்.

நீயா நானா சூப்பர் அப்பா
விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியின் மூலமாக பலருடைய ஃபேவரைட் சூப்பர் அப்பாவாக வலம் வந்து கொண்டிருக்கும் சீனி ராஜா இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய மனதில் இருக்கும் சோக கதைகளை கூறியிருக்கிறார். சீனி ராஜா அரேஞ்ச் மேரேஜ் தான் செய்திருக்கிறாராம். வீட்டில் பெண் பார்த்து முடித்த திருமணம் சந்தோஷமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனாலும் இவருக்கு சரியாக வேலை இல்லாததால் தன்னுடைய சுயமரியாதை குறைந்து போய் விட்டதை பல நேரங்களில் உணர்ந்து இருக்கிறாராம். அதை நினைத்து பல நேரங்களில் பீல் பண்ணி இருக்கிறாராம்.

செட் ஆகாத வியாபாரம்
ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே சீனி ராஜா படித்திருக்கிறாராம். சரியாக படிப்பு வராத காரணத்தினால் இவரால் மேற்கொண்டு படிக்க முடியவில்லை என்று மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். அதற்கு பிறகு திருமணம் முடிந்து மனைவியின் தம்பியின் உதவியோடு முட்டை கடை வியாபாரம் நடத்தி இருந்தாராம். ஆனால் அதில் இவரால் வெற்றி பெற முடியாமல் அந்த வியாபாரம் முடிவுக்கு வந்துவிட்டதாம். இதனால் விரக்தி அடைந்த இவருடைய மனைவியின் தம்பி இவரிடம் சரியாக பேசவில்லை என்று வேதனையோடு கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சீனி ராஜாவுக்கு உடல்நல பிரச்சனையும் இருக்கிறதாம்.

வருத்தமான செயல்
சீனி ராஜாவின் கிட்னியில் பிரச்சனை இருப்பதால் வாரம் இரு முறை டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறாராம். இதற்கு வாரத்திற்கு ஐந்தாயிரம் வரை செலவு ஆகிறதாம். மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் இவருடைய மருத்துவ செலவிற்கு மட்டும் ஆகிறதாம். அதற்கு அவருடைய மனைவி மற்றும் சீனி ராஜாவின் அப்பாவும் உதவி செய்து கொண்டிருக்கிறாராம். இது பெரிய அளவில் வேதனையை இவருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறதாம். அப்பாவை உட்கார வைத்து தான் சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாமல் அவரிடம் கைநீட்டி பணம் வாங்குவது வருத்தமாக இருக்கிறது என்று வேதனையோடு கூறி இருக்கிறார்.

நெகிழ்ச்சியான வார்த்தைகள்
சீனி ராஜா சிறுசிறு வேலைகளுக்கு சென்று வந்தாலும் அவரால் பெரிய அளவில் எந்த வேலையும் செய்ய முடியாத காரணத்தினால் அவருடைய மகள் இவரிடம் எந்த ஒரு பொருளையும் வாங்கி தரச் சொல்லி கேட்க மாட்டாராம். சீனி ராஜாவின் மனைவியிடம் தான் மகள் என்ன வேண்டும் என்றாலும் கேட்கிறாராம். இது இவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். இதுவரைக்கும் தன்னுடைய மகளை அடித்ததே இல்லை, தன்னுடைய மகள்தான் வாழ்க்கையில் மொத்தமும் என்று கூறி இருக்கிறார். பாடத்தில் மார்க் குறைந்தால் கூட நான் அதை கண்டு கொண்டதே இல்லை என்று கூறி இருக்கிறார். தான் படிக்காததால் பிறரிடம் பேசும் போது ஏதேனும் தவறாக பேசி விடுவோமோ என்று பயந்தே யாரிடமும் அதிகமாக பேச மாட்டேன் என்று கூறி இருக்கிறார். ஆனால் நீயா நானா நிகழ்ச்சியில் என் மனதில் இருப்பதை பேசி விட்டேன். அது இந்த அளவிற்கு அனைவரும் என்னை விரும்புவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை என்று நெகிழ்ச்சியாக கூறி இருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications