விஜய்யை பற்றி புகழ்ந்து தள்ளிய சம்யுக்தா..கடைசியில் இப்படி சொல்லிவிட்டாரே..!? கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: காப்பி வித் காதல் பட ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக் பாஸ் புகழ் சம்யுக்தா, தளபதி விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங் குறித்து பேசி உள்ளதை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே பல நடிகைகள் விஜய்யை குறித்து பேசியதையே சம்யுக்தாவும் பேசி இருந்தாலும், அவர் பேசியதை வாரிசு படத்தின் அப்டேட் ஆக எடுத்துக் கொண்டு விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.

ஒரிஜினல் சூப்பர் மாடல்
பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் நல்ல உயரமாக சிக்கென்று வலம் வந்த சம்யுக்தாவை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். மாடலிங் துறையில் ஆர்வம் கொண்ட சம்யுக்தா பல்வேறு பேஷன் ஷோக்கள், விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி நாடகத்தில் ராதிகா சரத்குமார் அவர்களுக்கு வில்லியாக ருத்ரா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.அதுவரை அந்த அளவிற்கு பிரபலமாகத சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரா!? அதில் எல்லாம் நடித்தவர் என்று கேட்கும் அளவிற்கு பிரபலமானார். இந்துலேகா ஆயில் விளம்பரத்தில் இவரது முடியின் நீளத்தை பார்த்து நிறைய பேர் இந்துலேகா ஆயிலை வாங்கி இருப்பார்கள்.ஆனால் அந்த விளம்பரத்தில் வந்தது சம்யுக்தாதான் என்று இதுவரை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்டேட்களில் ஆர்வம்
முன்னணி கதாநாயகர்களின் படங்கள் படத்திற்கான பூஜை போடப்பட்டதிலிருந்து ரிலீஸ் ஆகும் வரை அந்த படத்திற்கான அப்டேட்களை தெரிந்து கொள்வதில் அவர்களது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தங்கள் அபிமான கதாநாயகர்கள் நடித்து வரும் படங்களின் பட குழுவினர் மற்றும் படங்களில் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் வலைதள பக்கங்களுக்கு சென்று படத்திற்கான அப்டேட்களை கேட்டு அன்புத் தொல்லை செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

வாரிசு படத்தில் இணைந்தது
தன்னுடைய சமூக வலைதள பக்கங்களை எப்பொழுதும் ஆக்டிவாக வைத்திருப்பவர் சம்யுக்தா. தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் சம்யுக்தாவும் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததிலிருந்து சம்யுக்தாவின் வலைதள பக்கங்களை தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. வழக்கம்போல் சம்யுக்தாவிடமும் விஜய் ரசிகர்கள் படத்தில் அவரது கேரக்டர் குறித்தும் ஏதேனும் பட அப்டேட்கள் தருமாறும் தொடர்ந்து கேட்டு வந்தனர். சம்யுக்தா எந்த போஸ்ட் போட்டாலும் கமெண்ட் பாக்ஸ்களில் படத்தின் அப்டேட் குறித்த கேள்விகளே குவியத் தொடங்கின.

விஜய் மற்றும் படத்தை குறித்து
சமூக வலைத்தள கணக்குகளுக்கு சென்று அப்டேட் கேட்பவர்கள், அவரே நேரில் கிடைத்தால் விடுவார்களா!? சமீபத்தில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா,ஜெய்,ஸ்ரீகாந்த் நடிக்கும் காப்பி வித் காதல் ஆடியோ ரிலீசுக்கு வந்த சம்யுக்தாவிடம் வாரிசு பட ஷூட்டிங் குறித்தும், விஜய் பற்றியும் கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்துள்ள சம்யுக்தா,தான் கூட்டத்தில் ஒருவராக நடிப்பதாக சொல்லாமல் சொல்லி உள்ளார். விஜய்யை பற்றி கூறும் போது ஏற்கனவே பல நடிகைகள் கூறியதைப் போன்றே அவர் மிகவும் அமைதியானவர், தன் குடையை தானே பிடித்துக் கொள்பவர் என்று அரைத்த மாவையே அரைத்துள்ளார். தளபதி விஜய்யை புகழ்ந்தால் அந்த வீடியோவை என்ன செய்ய வேண்டும் என்று விஜய் ரசிகர்களுக்கு சொல்லியா தர வேண்டும்!!?? வீடியோவை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications