அண்ணாச்சியை ஒருமையில் திட்டிய அபிஷேக்....வயசுக்கு மரியாதை கொடுக்காமல்...கொந்தளிக்கும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் கலந்து கொண்டு இருக்கிறார் என்று தெரிந்ததுமே நெட்டிசன்கள் எங்களுக்கு கண்டெண்ட்க்கு பஞ்சமில்லை என்று கூறிவந்தனர்.
வாய் இருக்கிறது என்பதற்காக கேமரா முன்னாடி கண்டதையும் பேசலாமா என்று தற்போது இவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர், அண்ணாச்சியின் தீவிரமான ரசிகர்கள்.
இது என்ன ஆள் பார்த்து இப்படி எல்லாம் ஏத்தி இறக்கி பேசுனா அதை பாத்துக்கிட்டு இருக்க நாங்க சும்மா இருக்க மாட்டோம் என்று நெட்டிசன்கள் ட்ரோல்களை உருட்ட ஆரம்பித்துவிட்டனர்.

அதிகரிக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கியதும் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் ரசிகர்களாக இருந்தவர்களை விடவும் தற்போது போட்டியாளர்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். பலருடைய சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பாலோவர்ஸ் அதிகரித்து வருகின்றனர். ஆனால் ஏற்கனவே தன்னுடைய காமெடியால் ரசிகர்களை சிரிக்க வைத்து ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்ட இமான் அண்ணாச்சிக்கு தற்போது ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பு அதிகரித்திருக்கிறது. எந்த மாதிரி சூழ்நிலையிலும் தனக்கே உரிய நக்கல் காமெடியோடு அதனை கடந்து போவது அவருக்கு கைவந்த கலைதான்.

அபிஷேக் பேசுவது சரியா
இந்த நிகழ்ச்சியில் வயதில் மூத்தவராக இவர் இருந்தாலும் சக போட்டியாளர்கள் உடன் நானும் சளைத்தவரல்ல என்று காமெடியாக இருந்தாலும் சரி நடனமாக இருந்தாலும் சரி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். போட்டிகள் இன்னமும் தொடங்காத நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் அங்கேயும் இங்கேயும் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் அதில் அவர்கள் பேசும் வார்த்தைகள் சிலருடைய மனதை புண்படுத்தும் விதமாக அமைந்து இருக்கிறது. அதுவும் இந்த நிகழ்ச்சியின் அபிஷேக் நெட்டிசன்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமடைந்தவர், தற்போது வேற லெவல் வைரலாகி வருகிறார். இவர் எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கும் ரசிகர்கள் அவரைக் கமெண்டுகளில் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

எபிசோட்டில் ஒன்னும் இல்லையே
நேற்றைய ப்ரோமோக்களில் சண்டையை ஆரம்பித்த போட்டியாளர்கள் எபிசோடுகளில் சமாதானம் செய்து கொண்டு கொஞ்சுவது ரசிகர்களுக்கு கடுப்பாக தான் இருக்கிறதாம். ஆனால் எபிசோட் நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் செய்தது ரசிகர்களுக்கு பிடிக்காததாகவும் இருந்து வருகிறது. அதில் அபிஷேக் தான் காமெடி செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு பலருடைய மனதையும் புண்படுத்தி கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இரவு நேரத்தில், பகலில் நடந்த நிகழ்வுகளை பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணாச்சியை அவரைப்போலவே தூத்துக்குடி பாஷையில் அபிஷேக் பேசி இருக்கிறார்.

இப்படி பேசலாமா
நேற்றைய எபிசோட்டில் இமான் அண்ணாச்சி தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை கூறி முடித்தார். அதற்கு போட்டியாளர்கள் தங்களுடைய இமோஷிகளை கொடுத்து கொண்டிருந்தனர். அதில் சிலர் மட்டும் அன்லைக் கொடுத்திருந்தனர். அதைப்பற்றி அபிஷேக் அண்ணாச்சியிடம் "அந்த வார்த்தையை உன்கிட்ட எவனாவது கேட்டானா...ஊருக்கே டிஸ் லைக் போட சொன்ன. ..அப்புறம் என்னத்துக்கு காரணம் கேக்கால..."என்று கன்னாபின்னாவென ஒருமையில், மரியாதை குறைவாகவும் பேசியிருக்கிறார். இதைக்கேட்டதும் இமான் அண்ணாச்சியின் ரசிகர்கள் என்னதான் ஜாலியாக பேசினாலும் இந்த மாதிரி வயசுக்கு மரியாதை கொடுக்காமல் பேசலாமா? ?நேற்றைய எபிசோடில் கூட பிரியங்கா இதேபோலத்தான் அண்ணாச்சியை அவரைப் போலவே பேசி கலாய்க்கிறார்கள் என்று "ஏல சொல்லலுல"என்று கூறியிருக்கிறார் இந்த மாதிரி பல பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் பெரியவர்களை இப்படி பேசுவது தவறு என்று ரசிகர்களும் நெட்டிசன்களும் சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications