கொஞ்சம் கூட லாஜிக் வேண்டாமா? நம்புற மாதிரியா இருக்கு? பாரதி கண்ணம்மா முடிவை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலின் எபிசோட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பாரதி திருமணம் செய்து கொள்ளாததால் தன்னுடைய வயிற்றில் இருந்த குழந்தையை வெண்பா கலைக்க வேண்டும் என்பதற்காக மாடி படியில் இருந்து உருண்டு குழந்தையை கலைத்திருப்பார். அதை குறித்து தற்போது நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு கலாய்த்து வருகிறார்கள்.

கண்டன்ட் கொடுத்த கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பத்திலே நெட்டிசன்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகிவிட்டது. இந்த சீரியல் ஆரம்பகாலகட்டத்தில் அந்த அளவிற்கு பிரபலமாகாமல் இருந்த நிலையில் கண்ணம்மா பாரதியோடு சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி கையில் பேக்கோடு தெருவில் நடந்து கொண்டிருப்பார். அது பல மாதங்களாகவே அதே பாணியில் கண்ணம்மா நடந்து கொண்டிருந்ததால் நெட்டிசன்கள் அதை மீம்ஸ்களாக கலாய்த்து வந்தனர்.

ஏமாற்றிக் கொண்டிருக்கும் முடிவு
பாரதி கண்ணம்மா சீரியலின் கதை ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் முடிந்துவிடும் என்று இருந்த நிலையில் எப்போது அந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்படும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்விகளை தொடர்ந்து எழுப்பியதன் காரணமாக தற்போது அந்த சீரியல் முதல் பாகம் முடிவடைய இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. ஆனால் இந்த தகவல் வெறியாகி ஒரு சில வாரங்கள் ஆகிவிட்டது .ஆனால் சீரியலில் முதல் பாகம் முடிவடைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை .இதை பலரும் பார்த்து ஏமாற்றம் அடைந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

குழந்தையை கலைத்த வெண்பா
இந்த நிலையில் பாரதியை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்த வெண்பா ரோஹித்தால் கர்ப்பமாக இருந்தாலும் இந்த குழந்தை எப்படி உருவானது என்று எனக்கு தெரியாது. நான் பார்ட்டிக்கு சென்ற இடத்தில், மயக்க மருந்து கொடுத்து என்னுடைய வாழ்க்கையை யாரோ சீரழித்து விட்டார்கள் என்று ஏமாத்தி பாரதியை திருமணம் செய்ய நினைத்திருப்பார். ஆனால் கடைசி கட்டத்தில் கண்ணம்மா குடும்பத்தோடு வந்து திருமணத்தை நிறுத்திவிட்டார். தன்னுடைய குழந்தையை காட்டி பாரதியை ஏமாற்றி திருமணத்தை செய்துவிடலாம் என்று நினைத்திருந்த வெண்பாவிற்கு ரோஹித் தற்போது தாலி கட்டி விட்டதால் இனி இந்த குழந்தை வேண்டாம் என்று நினைத்து மாடியில் இருந்து கீழே விழுந்து குழந்தையை அபார்ஷன் செய்து விட்டார்.

லாஜிக்கே இல்லையா
ஏற்கனவே டி என் ஏ டெஸ்டில் ஒரு டாக்டராக இருக்கும் பாரதி சரியான முடிவு எடுக்காமல் இருக்கிறார் என்று தொடர்ந்து கலாய்த்து கொண்டிருக்கும் நேரத்தில், ஒரு டாக்டர் வெண்பா இப்படி ஒரு குழந்தையை அபார்ஷன் செய்வதற்கு மாடியில் இருந்து கீழே விழுந்து தான் அபார்ஷன் செய்ய வேண்டுமா? இது எல்லாம் நம்பற மாதிரியா இருக்கு? கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் இப்படி கதை போய்க்கொண்டிருக்கிறது என்று நெட்டிசன்கள் இந்த சீரியலை பங்கம் செய்து வருகிறார்கள். இப்போ முடிந்துவிடும் ,அப்போ முடிந்து விடும் என்று ரசிகர்களின் மனதை ஏமாற்றம் அடைய செய்து கொண்டிருக்கும் இந்த சீரியல் எப்போது தான் முடியும் என்று சிலர் ஏக்கமாக கேள்விகளையும் எழுப்பி இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications