கோபிக்கு பாடம் புகட்டிய அப்பா.. கடைசியில் இப்படியா பண்ணுவீங்க பாக்கியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் திருமணம் நடக்குமா நடக்காதா என்ற கேள்விகளுக்கு தற்போது முடிவு தெரிந்து விட்டது.
கோபியின் திருமணத்தை எப்படியும் நிறுத்தி ஆவேன் என்று அவருடைய அப்பா செய்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
மணமேடையில் இருக்கும் கோபியிடம் அவருடைய அப்பா இப்படி நடந்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

நடக்குமா நடக்காதா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பரபரப்பான திருப்பங்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த சீரியலில் தற்போது கோபியின் திருமணம் நடக்குமா நடக்காதா என்று ஒரு சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். கடைசியாக ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த அந்த இறுதி கட்டம் நெருங்கி இருக்கிறது. கோபி மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு பாக்கியவே சமையல் செய்து வருவது ரசிகர்களின் மத்தியில் கலாய்க்கப்பட்டு வருகிறது.

தன்மானத்திற்காக போராட்டம்
பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெண் தன்னுடைய தன்மானத்தை நிரூபிப்பதற்காக எவ்வளவு கஷ்டங்களை கடந்து வருகிறார் என்பதை பற்றியதாக இருந்து வருகிறது. வீட்டு வேலைகளை செய்து வீட்டை நிர்வகித்து வந்தாலும் அவருக்கு கணவர் மாமியார் பிள்ளைகள் என யாரும் ஆறுதலும் மரியாதை கொடுக்காமல் இருந்து வந்தனர். தன்னுடைய சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக பாக்கியலட்சுமி எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் பல போராட்டங்களாக தான் இந்த சீரியலாக இருந்து வருகிறது.

நடப்பது சரி இல்லையே
ஆரம்பத்தில் இருந்தே பாக்யாவை பிடிக்காமல் இருந்து வந்த கோபி அவருக்கு பிடித்த அவருடைய தோழியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இது பல்வேறு பிரச்சனைகளையும் போராட்டங்களையும் சந்தித்து வந்திருந்தாலும் தற்போது ராதிகா மற்றும் கோபியின் திருமணம் நடைபெறக்கூடாது என்று இந்த சீரியலின் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் நடப்பதை எல்லாம் பார்க்கும்போது திருமணம் நடந்து விடும் போல என்று சிலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

கடைசியில் எப்படி ஆகிவிட்டதே
எப்படியும் நிறுத்தியே ஆவேன் என்று கோபியின் தந்தை கோபியின் அம்மாவிடம் சத்தியம் செய்து இருந்தார். அதே நேரத்தில் கோபி மற்றும் ராதிகா இருவரும் மண மேடைக்கு திருமணம் செய்வதற்காக வந்துவிட்டனர்.அதே மண்டபத்தில் தான் கோபியின் திருமணத்திற்கு பாக்கியா சமையல் செய்து வருகிறார். ஆனால் பாக்யாவிற்கு கோபிக்கு தான் கல்யாணம் என்பது தெரியாது. இந்த நிலையில் கோபியின் தந்தை மணமேடையில் இருந்த கோபியை, "காலம் போன காலத்துல உனக்கு கல்யாணம் ஒரு கேடா" என்று அவர் கழுத்தில் அணிந்திருந்த மாலையைப் பிடித்து இழுத்து ரகளை பண்ணுகிறார். இதனால் கோவமான கோபி மண்டபத்தை விட்டு வெளியே செல்ல கூறி திட்டி விடுகிறார். அப்போது அங்கே வந்த பாக்யா மாமனாரை கூட்டிவிட்டு கிளம்பி விடுகிறார். அது மட்டும் அல்லாமல் தனக்கு இந்த கல்யாண ஆர்டர் ரொம்பவே முக்கியமானது. அதனால் நான் இங்கு இருந்து வர முடியாது என்று பேசியிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications