இந்த வாரம் தாமரையின் வாரமா..??கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: தினமும் ப்ரமோவில் இடம் பிடித்துவிடும் தாமரையைப் பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அபிஷேக்குக்கு பிறகு கண்டெண்ட் கொடுப்பதில் தாமரைச்செல்வி கலக்கி வருகிறார் என்று நெட்டிசன்கள் ஒரு பக்கம் கொளுத்திப் போடுகின்றனர்.
போன வாரத்தில் முதல் ஆளாக சேவ் ஆனதால் இந்த வாரம் முழுக்க இவர் முகம் தான் ப்ரமோவில் வலம் வருகிறதா..!!??என சிலர் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.

கிளம்பிய புது பிரச்சனை
வெளி உலக ரசிகர்கள் அதிக அளவில் இல்லாத நிலையில் ரியாலிட்டி ஷோவில் அறிமுகமான தாமரைச்செல்வி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் அடைந்து வருகிறார். இவருடைய வெள்ளந்தியான பேச்சுக்கும், கிராமத்து குணத்துக்கும் ரசிகர்கள் இவருக்கு அதிகமாகி விட்டனர். இந்த நிலையில் இந்த வாரம் முழுக்கவே இவருக்கு போதாத காலம் தான் போல. இவர் சும்மா இருந்தாலும் இவரை சுற்றி சுற்றியே பிரச்சனைகள் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே காயின் பிரச்சனை இன்னும் முடிவடையாத நிலையில் இன்று பட்டிமன்றம் என்னும் பெயரில் தான் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார்.

மீண்டும் முதலில் இருந்தா
2 தினங்களுக்கு முன்பு ப்ரமோவில் இவருடைய அழுகையை பார்த்த ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வந்தனர். இவர் மீதுதான் குற்றம் என்று கூறி பலர் கமெண்டுகளை கொட்டிக் கொண்டிருந்த நேரத்தில் எபிசோடு பார்த்த பிறகுதான் இவர் மீது தவறு இல்லை என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர். அதற்கு பிறகே பல ரசிகர்கள் ப்ரமோ பார்த்து யாரையும் தப்பாக நினைக்க கூடாது என்று முடிவெடுத்து இருக்கும், நிலையில் இன்றைய ப்ரமோவிழும் தாமரை பேசிய சீன்கள் தான் வைரலாக பரவி வருகிறது.

என்னதான் நடக்குது அங்கே
காயின் விஷயத்தில் இவருக்கு சப்போர்ட் செய்து ஆண் போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக நின்ற நிலையில் இன்றைய பட்டிமன்றத்தில் இவர் பேசிய வார்த்தை தவறு என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் இவருடைய கருத்து தவறானது என்று ஒருபக்கம் கூறிக் கொண்டிருக்கும் போது, மற்றொரு பக்கம் கண்டென்க்காக தான் தாமரை செல்வியை இப்படி அனைவரும் டார்கெட் செய்கிறார்களா?? என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் பேசியதில் அந்த அளவு ஒன்னும் தப்பில்லை என்று பல தங்களுடைய ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.

எபிசோட்டில் தான் உண்மை தெரியும்
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலர் அரைகுறை ஆடையோடு வலம் வந்து கொண்டிருக்கின்றனர் என்று குறை கூறிக் கொண்டு இருக்கும்போது அதைதான் தாமரை செல்வியும் கூறியிருக்கிறார். கிராமத்தில் நாங்கள் இப்படி எல்லாம் உடை உடுத்த மாட்டோம், பட்டணத்தில் நீங்கள் உடுத்தும் உடை சரியானதல்ல என்று இவர் கூறியதற்கு, சிபி பட்டணத்தை அணியில் இருப்பதால் மதுவுக்கு சப்போர்ட்டாக துள்ளிக்கொண்டு நீங்கள் உடுத்தும் உடை மட்டும் அடக்கமாக இருக்கிறீர்களா?? என்று கேட்டிருக்கிறார். இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாத தாமரை, தன்னைப் பற்றி எப்படி...இப்படி ஒரு வார்த்தையை சொன்னீங்க என்று தன்னுடைய ஆர்கியூமேட்டை தொடங்கி இருக்கிறார். இதைப் பார்த்ததும் பலர் ப்ரமோவை பார்த்து யாரையும் முடிவு பண்ண வேண்டாம். எபிசோடில் தான் உண்மை தெரியும் என்று அலாட் பண்ணி வருகின்றனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications