Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைவர் பதவியில் தடுமாறும் இசைவாணி...ஒத்துழைக்காமல், ஒதுங்கி நிற்கும் போட்டியாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெருப்பு காயின் மூலமாக நெருப்பு ஆற்றலை பெற்றிருக்கிறார் இசைவாணி.

தன்னுடைய பேச்சை யாரும் கேட்கவில்லை என புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இதற்கு முன்பு இருந்த தலைவர்களுக்கு கொடுத்த அங்கீகாரத்தை போட்டியாளர்கள் ஏன் இவருக்கு மட்டும் கொடுக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இன்னும் செயல்படவில்லையே

இன்னும் செயல்படவில்லையே

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னதான் நடக்கிறது என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சக போட்டியாளர்களாக இருந்தாலும் ஒருவருக்கு பதவி கிடைத்ததும் மற்றவர்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை என்பதை தங்களுடைய செய்கைகளாலும், அசைவுகளாலும் காட்டி வருகிறார்கள் என்று போட்டியாளர்களின் மீது காண்டில் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் என்னதான் பொறுப்பு கிடைத்திருந்தாலும், அதை செயல்படுத்த தெரியாமல் இசைவாணி புலம்பிக் கொண்டிருப்பதும் பலருக்கு வெறுப்பாகத்தான் இருந்து வருகிறதாம்.

முதல் டார்கெட் இசைவாணி

முதல் டார்கெட் இசைவாணி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது காயின் டாஸ்க் என்ற ஒன்றை வைத்து கொளுத்தி போட்டிருக்கிறது. இந்த வீட்டிற்குள் பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து கொண்டிருப்பதற்கு இந்த டாஸ்க் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகை என்கிற பெயரில் மேலும் பிரச்சினைகளை கிளப்பி விடுகிறது, பிக் பாஸ். இதில் முதலாவதாக சிக்கியிருப்பது இசைவாணி தான். இவர் நெருப்பு காயினை வைத்திருப்பதால் அவருடைய கண்ட்ரோலில் இந்த வாரம் கிச்சன் டீம் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஒரே புலம்பல் தானா??

ஒரே புலம்பல் தானா??

இதற்கு முன்பு எல்லோரும் என்னை ஒதுக்கி வைக்கிறார்கள். நான் தனிமையாக ஃபீல் பண்ணுகிறேன் என்று புலம்பிக் கொண்டிருந்த இசைவாணி, தற்போது சக போட்டியாளர்களிடம் சகஜமாக பழகவில்லை பதவி வந்ததும் ஒரு கெத்தா இருக்கிறார் என்று சக போட்டியாளர்கள் இவர் மீது குற்றம் சாட்டி கொண்டிருக்கும் போது, யாரும் என்னுடைய பேச்சை கேட்பதில்லை என்று இவரும் பதிலுக்கு குற்றம்சாட்டி வருகிறார். இப்படியே மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தால் எப்படி என்று ரசிகர்களுக்கு தோன்றுகின்றன.

கடுப்பாகும் ரசிகர்கள்

கடுப்பாகும் ரசிகர்கள்

நேற்றைய எபிசோட்டில் இவர் தலைவர் பதவியில் இருப்பதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் சக போட்டியாளர்கள் சமயலறைக்குள் புகுந்து பொருட்களை எல்லாம் காலி செய்து வருகின்றனர். இதைப்பார்த்த பிக்பாஸ் இசையை கூப்பிட்டு நன்றாக அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி இருக்கிறது. உள்ளே போய் வந்த பிறகு வெகுண்டெழுந்த சிங்கமாக இவர் தரிசித்துக் கொண்டிருக்கும் போது, பிரியங்கா நக்கலாக உள்ளே பிக் பாஸ் நல்லா திட்டி விட்டு இருக்கிறார் என்று கலாய்த்துக் கொண்டு இருக்கிறார். இதை பார்த்து சக போட்டியாளர்களும் சிரித்து தான் கொண்டிருக்கிறார்களே தவிர யாரும் சீரியசாக நடந்து கொள்ளவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+