என்னது பிக் பாஸ் வீட்டிற்குள்ளே அசீமை பார்க்க உதயநிதி வருகிறாரா!?அவரே கூறிய தகவல்.. இதுதான் காரணமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடந்து வரும் ஃப்ரீஸ் டாஸ்க்கில் கலந்து கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் வருகிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து இருக்கின்றனர்.
அசீம் சார்பாக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என்று அசீம் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
தன்னை அரசியல்வாதி என காட்டிக்கொள்ள முயற்சிக்கும் அசீம் பற்றி சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் அதிகமான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

ப்ரீஸ் டாஸ்க்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 80-வது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இந்த டாஸ்க் உள்ளே இருக்கும் ஒன்பது போட்டியாளர்களின் குடும்பத்தினர்களும் வரிசையாக வந்த வண்ணமாக இருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் மூன்று போட்டியாளர்கள் அதாவது மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன் என மூவரின் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். இன்று ரச்சிதா, ஏடிகே, மணிகண்டன் குடும்பத்தினர் வர இருக்கின்றனர். தொடர்ந்து நாளை விக்ரமன், கதிரவன், அசீம் குடும்பத்தினர் வர இருக்கின்றனர்.

முட்டி மோதும் பிரச்சனை
இந்த நிலையில் நடிகராகவும் தற்போது அமைச்சராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தனக்கு சார்பாக கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அசீம் விருப்பம் தெரிவித்து இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே விக்ரமன் தன்னைவிட குறைந்தவர் என்று சொல்லும் வகையில் தான் அடிக்கடி அசீம் நிரூபித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்து அதிகமாக விக்ரமன் மற்றும் அசீமுக்கு இடையே தான் பிரச்சனை முட்டிக் கொண்டிருக்கிறது. இதனாலே இவர்கள் இருவரில் தான் ஒருவர் டைட்டில் ஜெயிப்பார் என்று அதிகமாக கருதும் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவருடைய ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதயநிதிக்கு தீபாவளி வாழ்த்து
இந்த நிலையில் அசீம், விக்ரமனை விட நான் பெரியவர் என்று சொல்லும் விதமாக ஆரம்பத்தில் விக்ரமன் சீரியலில் நடித்துக் கொண்டுதான் இருந்தார். பின்பு தான் அவர் அரசியலுக்கு சென்று விட்டார் ஆனால் இங்கே சீரியலை மறைத்துவிட்டு தான் ஒரு அரசியல் பிரமுகர் என்பதை மட்டுமே மையப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார். அது மட்டும் அல்லாமல் விக்ரமன் என்னுடைய சித்தப்பா பெரிய பதவியில் இருக்கும் ஒரு கட்சியில் ஒரு அடிப்படை உறுப்பினராக தான் இருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் கடந்த தீபாவளி தினத்தில் கூட உதயநிதி அண்ணா மற்றும் கிருத்திகா அண்ணி உங்களை நான் மிஸ் பண்ணுவேன். வரடா வருடம் உங்களை வந்து நான் பார்ப்பேன் ஆனால் இந்த முறை உங்களை பார்க்க முடியவில்லை ஹேப்பி தீபாவளி அண்ணா மற்றும் அண்ணி என்று பேசியிருந்தார். இப்படி அடிக்கடி தனக்கு அரசியல் பின்புலம் இருக்கிறது என்பதை நினைவு படுத்திக் கொண்டிருக்கும் அசீம் தற்போது தன்னை பார்க்க உதயநிதி வரவேண்டும் என்று எதிர்பார்த்து இருப்பதை குறித்து நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

வலம் வரும் மீம்ஸ்
ஒரு பக்கம் விக்ரமன் கமல்ஹாசனை அண்ணா என்று அழைப்பதால் விக்ரமனின் குடும்பத்தினராக கமல் உள்ளே வருவாரா? என்று ஒரு கேள்வி எழுப்பி அசீம் ரசிகர்கள் விக்கிரமனை கலாய்த்து கொண்டிருக்கும்போது, விக்ரமன் ரசிகர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் பத்து நொடிகளில் 100 மீட்டர் ஓடக்கூடிய வரை ஊக்குவிக்க வராமல் இருப்பாரா கண்டிப்பாக வருவார் என்று அசீமை கலாய்த்து கொண்டிருக்கின்றனர். அதுவும் தற்போது பலர் அசீம் இப்படி பேசிக் கொண்டிருப்பது முதலில் உதயக்கு தெரியுமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications